தேவ சித்தத்திற்குப் புறம்பாக அவருக்கொரு சேவை செய்தல் Jeffersonville, Indiana USA 65-0718M 1ஜெபிப்பதற்கு நாம் ஒரு க்ஷணம் நின்றவாறேயிருப்போம். நமது தலைகளை வணங்குவோம். கர்த்தாவே, இந்தக் காலை வேளையிலே, தேவனுடைய வீட்டிலே, மற்றொரு ஆராதனைக்காக திரும்பவும் வர நேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம். தேவரீர் இக்காலையிலே நீர் தாமே எங்கள் தவறுகளையெல்லாம் எங்களுக்குத் திருத்து மாறு வேண்டுகிறோம். கிறிஸ்து வெளிப்படுதல் சமீபம் என்று நாங்கள் விசுவாசிப்பதால், அந்நாளிலே நாங்கள் கிறிஸ்துவுக்குள் குற்ற மற்றவர்களாகக் காணப்படும்படி, நாங்கள் நடப்பதற்கென்று தேவரீர் குறித்திருக்கும் பாதைகளைக்காட்டி, அப்பாதைகளையும் கட்டளைகளையும் நாங்கள் முழு இருதயத்தோடும் பின்தொடர உம்முடைய கிருபையையும் அன்பையும் தாரும். அவர் வருவதற்குச் சற்றுமுன்பு நடக்கும் என்று அவர் சொன்ன எல்லா அடையாளங்களும் இப்போது நிறைவேறுவதை நாங்கள் காண்கிறோம். மகிழ்ச்சியோடு அந்த வேளைக்காகப் பார்த்திருக்கிறோம். முற்காலத்தில் ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட குமாரனுக்காகப் பார்த்திருந்து, தேவனுடைய கடைசி அடையாளங்கள் பூமியின் மேல் வந்திறங்குவதைக் கண்டு, குமாரன் வந்து சேர அதிக நாளாகாது என்று அறிந்து கொண்டது போல, இப்போது அது மறுபடியும் நிகழ்ந்தேறுவதைக் காண்கிறோம். காலங்களின் தத்தளிப்பும், பூமியின் மேலுள்ள ஜனங்களின் இடுக்கணும், பல இடங்களில் பூமி அதிர்ச்சிகளும், சமுத்திரம் முழக்கமாயிருப்பதும், மனுஷருடைய இருதயம் பயத்தினால் சோர்ந்து போவதும் ஆகிய இந்தக் காரியங்கள் சம்பவிக்கத் தொடங்கும்போது, எங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் எங்கள் தலைகளை உயர்த்த இயேசு சொன்னார். ஆகவே தேசங்கள் என்ன செய்வதென்று அறியாதிருக்கும் இந்த வேளையிலே நாங்கள் அந்த மணிவேளையில் இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். மற்றொரு யுத்தம் வருவதுபோல் தோன்று கிறது. அது எவ்வளவு கோரமான ஒரு காரியமாக இருக்கும். பூமி பிளவுண்டு போகிறது. ஏதோ பயங்கரமான காரியம் சமீபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேதாகமம் இதைக் குறித்து பேசுவதை நாங்கள் காண்கிறோம். எனவே, கர்த்தாவே, இந்தத் திருத்துதலின் வீட்டிலே நாங்கள் நின்று, இந்த அந்த காரமான மணி வேளையில் முன்னேறிச் சென்று ஒளி வீச தேவனிடத்திலிருந்துக் கட்டளைப் பெற்றுக்கொள்ள இன்று உதவி புரியும். ஓர் வேளை அப்படிச் செய்ய இதுவே கடைசித்தருண மாயிருக்கக்கூடும். இவைகளை இயேசுவின் நாமத்திலே அவர் நிமித்தம் கேட்கிறோம். ஆமென் (உட்காருங்கள்). 2இந்தக் காலை வேளையிலே கூடாரத்தில் இருப்பதை பெரிய சிலாக்கியமாக நான் கருதுகிறேன். சுற்றிலும் உங்களுக்கு அமரஇடம் இல்லாமைக்கு நாங்கள் வருந்துகிறோம். கூடாரம் நிரம்பி யிருக்கிறது, வெளியிலும் எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள்.... வெளியில் இருக்கும் நீங்கள் செய்தியை உங்கள் ரேடியோக்களில் கேட்கலாம். நான் மறந்து போகிறேன்... (சகோதரர் நெவில் எந்த அலைவரிசையில் கேட்கக் கூடும் என்று சகோதரர் பிரான்ஹாமிற்கு கூறுகிறார்)... 55 முதல் 57 வரை. கூடாரத்திற்கு வெளியிலிருப்ப வர்களும், வாகனங்களை நிறுத்துமிடத்திலிருப்பவர்களும், தெருக்களில் இருப்பவர்களும் செய்தியை உங்கள் ரேடியோக்களில் 55 முதல் 57 அலைவரிசைகளில் கேட்கலாம். ஆகவே நாங்கள் முயற்சித்திருக்கிறோம்.... ஏழு கடைசிக் கலசங்களைப் பொருளாகக் கொண்டு பேச ஏறக்குறைய பத்து நாள் கூட்டங்கள் ஒழுங்கு செய்ய திரும்பி வந்தேன். ஏனெனில் அந்தக் கலசங்களின் இடையே எக்காளங்கள் இருக்கின்றன. ஏழு எக்காளங்களைக் குறித்து நான் பேச இருந்தபோது நான் அவைகளைக் கலசங்களோடும் வாதைகளோடும் இணைத்துக் கூறுவேன் என்று உங்களிடம் கூறியிருந்தேன். அது நமக்கொரு நல்ல நேரமாயிருக்கு மென எண்ணினேன். நான் ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து இப்போதுதான் திரும்பினேன். பிள்ளைகள் தங்கள் விடுமுறைக்குச் செல்லவில்லை. என்னுடைய சிறிய மகன் ஜோசப்பிற்கு படிப்பில் சில வாரங்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அவன் தேறிவிட்டான். ஆனாலும் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஆகவே நான் ஆப்பிரிக்காவிலிருந்தபோது அவன் பகல் நேர பள்ளியில் சேர்ந்து தன் படிப்பில் தொடர்ந்து தேறிவரும்படி அவனை டூசானிலேயே விட்டோம். பிறகு நாங்கள் திரும்பி வந்தோம். பிள்ளைகள் விடுமுறையைக் கழிக்கும் போது, இங்கு இந்த பொருள்களைக் குறித்து சிறியதொரு கூட்டம் நடத்தலாம் என எண்ணினேன். ஆனால் நாங்கள் இங்கு வந்தபோது பள்ளிக்கூட அரங்கம் கிடைக்கவில்லை என்பதை அறிந்தோம். 3நான் இந்த செய்தியை அளிக்கும் போது, ஜனங்களுக்கு தேவையானபடி உட்காரவசதி செய்து கொடுக்க கூடாரம் போதாது என்பதை அறிந்திருந்தேன். ஆகவே வேறு ஒழுங்கு செய்யப்பட வேண்டியிருந்தது. நாங்கள் திட்டமிட்டிருந்தபடி பத்து நாள் கூட்டங்களுக்கு பதிலாக, வருகிற ஞாயிற்றுக்கிழமையும் அதற் கடுத்த ஞாயிற்றுக்கிழமையுமாக இரண்டு ஆராதனைகளாக்கினேன். இதை விளம்பரப்படுத்தவில்லை. 28ம் தேதி கூட்டங்கள் தொடங்கும் என எவ்விதத்திலாவது கேள்விப்பட்டு நண்பர்களுக்காக விடுதிகளில் அறைகள் முன் பதிவு செய்திருப்பவர்கள் அவைகளை ரத்து செய்து விடலாம். பள்ளிக்கூட அரங்கத்தைக் கூட்டங்களுக்காக பெற முடியவில்லை. 4ஆகவே இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவிசேஷ சேவைகளைக் குறித்து பேச விரும்புகிறேன். ஞாயிற்றுக் கிழமை இரவு பிணியாளிகளுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். வியாதியாயிருக்கும் உங்களைத் தேவன் சந்திப்பார் என நம்புகிறேன். ஜெப அட்டைகளைக் கொடுத்து, கூட்டத்தைக் கட்டுப் படுத்துவது போன்ற காரியங்களை பில்லி எவ்விதம்தான் செய்யப்போகிறான் என்றறியேன். கர்த்தருக்குச் சித்தமானால் வருகிற மூன்று வாரங்களில் நாங்கள் நடத்தவிருக்கும் ஆராதனை களில் ஒவ்வொரு நபருக்காகவும் ஜெபிக்க எங்களால் இயன்றதையெல்லாம் செய்வோம். பிறகு நாங்கள் அநேகமுறை தனிப்பட்ட பேட்டிகள் அளிக்க வேண்டியிருக்கிறது. யாராகிலும் ஒருவர் ஏதோ ஒன்றிற்காக அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்றிற்காக ஒரு நிமிடம் பார்க்க விரும்புகிறார். ஆகவே நாம்... எத்தனைபேர் இங்கு தனிப்பட்ட பேட்டி வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை நான் பார்க்கட்டும். யாருக்கு வேண்டாம்? வ்யூ! ஆகவே... அது சற்று கடினமாக இருக்கப்போகிறது. உங்கள் வேண்டுகோளை எழுதி பில்லியிடம் சேர்த்துவிடுங்கள். அங்கிருந்து நான் அவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடும். ஆகவே இப்பொழுது ஜெப அட்டைகளைக் கொடுப்பதற்கான நேரம் வரும்போது அவன் அவைகளைக் குறித்து அறிவிப்பான் என நம்புகிறேன். 5ஊழியத்தில் இருக்கும் சகோதரர்கள் எத்தனை பேர் இன்று காலையிலே இங்கிருக்கிறார்கள்? நமக்குத் தருணம் கிடைக்க வில்லை. ... என்னால் யூகிக்க அவர்களில் யாரையாவது அடையாளம் கண்டு கொண்டீர்களா? எத்தனை ஊழியர்கள் இந்தக் காலை வேளையிலே இங்கு இருக்கிறார்கள்? உங்கள் கைகளை சற்று உயர்த்துவீர்களா? அல்லது எழுந்து நிற்பீர்களா? எத்தனை ஊழியக் காரர்கள் சபையிலே இன்று காலையிலே இருக்கிறார்களென்று பார்ப்போம். நல்லது, இந்த மனிதர்களுக்காகக் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் காண நேரமிருந்தால் நலமாயிருக்கும். அவர்களை உங்களால் காண முடிகிறதென்று நம்புகிறேன். தேவன் அவர்களை அவர்கள் ஊழியத்தில் அறிவார். தேவன் அவர்களை திரட்சியாய் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். அவர்களில் அநேகர், சகோ. ஜுனியர் ஜாக்சன், சகோ. டான் ரட்டல் போன்றவர்கள் இங்கு வருவதற்காக தங்கள் ஆராதனைகளை நிறுத்திவிட்டு வந்திருப்பார்களென்பதில் சந்தேக மில்லை. இந்த ஒலிபரப்பு அவர்கள் சபைகளுக்குச் செல்லுகிறது. நியூயார்க்கிலும் தேசமெங்கும் பிரத்தியேக தொலைபேசி மூலம் ஒவ்வொரு சபைக்கும் இச்செய்தி செல்லுகிறது. 6சகோ. ரிச்சர்ட் ப்ளேர் இங்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தேவன் அங்குள்ள மக்கள் மத்தியில் செய்த மகத்தான ஒரு காரியத்தைக் குறித்த ஒரு கடிதத்தை இப்பொழுது தான் படித்தேன். அன்றொரு நாள், (நான் தவறாகக் கூறக்கூடும், சகோ. ப்ளேர் அவர்களே, நான் தவறாகக் கூறினால் என்னைத் திருத்துங்கள்). அவர் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு வண்டியால் இழுத்துச் செல்லப்படும் மற்றொரு (Trailer-ட்ரெயிலர்) வண்டிக்கு ஒயரிங் செய்ய ஒருவருக்கு உதவி செய்துகொண்டிருந் தார் என்று நம்புகிறேன். (நான் அக்கடிதத்தைப் படித்தேன்). அவர்கள் ஏதோ மின்சார இணைப்புகளை மாற்றிக்கொடுத்திருக் கிறார்கள். அதனால் அந்த வண்டிக்குச் சொந்தக்காரருடைய மகன் - சிறு பையன் - விளையாடிக் கொண்டிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து, அச்சிறு பையனைக் கொன்றுபோட்டது. அவனுடைய வயிறெல்லாம் வீங்கிப்போய்விட்டது. மின்சாரத் தாக்குதலைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்கள் மரிக்கும் போது இவ்வாறுதான் கண்கள் நிலைக்குத்திப்போவதும், பற்கள் கிட்டிக்கொள்வதுமான காரியங்கள் நிகழும். அது நம் சகோதரர்களை அதிகமாக திகிலடையச் செய்திருக் கிறது. எங்கேயாவது என்னைப் பிடித்து அதற்காக ஜெபிக்க வைக்கலாம் என்று தான் நினைத்ததாக சகோ. ப்ளேர் கூறினார். ஆனால், 'எங்கெங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத் தில் கூடுகிறீர்களோ அங்கே அவர்கள் மத்தியில் நானிருக்கிறேன்'' என்பதை அவர் நினைவு கூர்ந்தார். சிறு பையனுடைய மூடிய வாயைத் திறக்க அவன் தகப்பனார் முயன்றதால், அவன் வாய்க்குள் தன் விரல்களை விட முயன்று தன் விரல்களின் தோலை வழட்டிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர்கள் முழங்காற்படியிட்டு அச்சிறு பையனுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அவன் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறான். 7அது உண்மைதானா, சகோதரர் ப்ளேர் அவர்களே? இங்குள்ள நம்முடைய விசுவாசமுள்ள சகோதரர்களில் இவரும் ஒருவர், ஓ, அந்தச் சிறு பையனும் இங்கிருக்கிறான். நல்லது, கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்! அது மிகவும் நேர்த்தியான காரியம். மகனே, நீ சற்று எழுந்து நிற்க விரும்புகிறோம். இதற்காக நமது அருமை கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்தான் சிறு பையனுடைய தகப்பனாரா? நீங்கள்தான் பையனுடைய தகப்பனாரா? அது சரிதான். சகோதரர் ரிச்சர்ட் பிளேர் அவர்களும் இங்கேயிருக்கிறார். நமது தேவன் எதையும் செய்ய வல்லவரா யிருக்கிறார். ஆம், ஐயா, அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணினார். மகா மகிமை நிறைந்த பரம பிதாவின் திவ்விய சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் மட்டும் விசுவாசித்தால், எல்லாக் காரியங்களும் கைகூடும். விசுவாசம் என்ன செய்கிறதென்று நீங்கள் பார்த்தீர்களா? அந்த மனிதர் அதை விசுவாசித்து அவருடைய சிறு பையனுடைய உயிரைக் காப்பாற்றியது. அச்சிறு பையனை அந்த நிலையில் இருந்தபோது அவனுக்காக ஜெபிப்பதற்காக தேவன் தம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரர்களாகிய சகோதரர் பிளேர் அவர்களையும் மற்றவர்களையும் அங்கே வைத்திருந்தார். ஆம், ஏதாவது நிகழும் போது, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய புத்திரர் என்பதை நினை வில் கொள்ளுங்கள். ''எங்கே இரண்டு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ என் நாமத்தில் கூடி வந்திருக் கிறார்களோ, அங்கே நானிருக்கிறேன்'', ''அவர் ஆபத்துக்காலத்தில் அநுகூல மான துணையுமானவர்'' என்றும் எழுதியிருக்கிறது. ஆபத்து எப்பொழுதாவது ஏற்பட்டிருக்குமானால்,.... தன் சரீரத்தில் மின்சாரம் பாய்ந்ததினால் அந்த சிறு பையன் தரையில் செத்துக் கிடந்ததுதான்.... ஆகவே, தேவன் நமக்கு செய்திருக்கும் இந்தக் காரியங்களுக்காக நம் முழு இருதயத்தோடும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த உண்மையுள்ள மனிதர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஒரு அவசர நிலை ஏற்படும்போது, அதுதான் தேவனை நோக்கிப் பார்க்கவேண்டிய நேரம். அவசர நிலை வருமுன் அவரை நோக்கிப் பார்த்திருந்து அவரோடு நட்பாயிருங்கள். இது நமக்குத் தெரியும். தேவனிடம் நமக்கு ஆதரவு உண்டாயிருக்குமானால், வேறு எந்த நண்பனிடமும் கேட்பதுபோல நாம் அவரிடம் எதுவும் கேட்கக் கூடும்; ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர் அவர். 8சகோதரர் ஜான் மார்ட்டினுடைய சகோதரியை நேற்று வீதியிலே சந்தித்தேன். தெருவில் செல்லும்போது யாரோ என்னை நிறுத்தினார்கள். வேறொருவர் கடந்து செல்லும்போது கரத்தை ஆட்டினார்கள். வீட்டிற்கு திரும்ப வரும்போது, நிறுத்துவதும் கை குலுக்குவதுமாக ஜனங்களை எங்கேயும் காண்கிறோம். இந்த ஸ்திரீ, சமீப காலத்தில் என்னை அவர்கள் உறவினர்கள் அழைத்தது நினைவிருக்கிறது; யாரோ காரில் வந்தவர்கள் இந்த ஸ்திரீயினுடைய முதுகில் இடிக்க, அவர்களுடைய முதுகெலும்பு, மற்ற அவயங்க ளெல்லாம் நொறுங்கிப் போயிருந்தது. அவர்கள் ஆயுள் முழுதும் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் இந்தக் கூட்டத்திலே இன்று காலையில் வீற்றிருந்து, தேவனுடைய பிரசன்னத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர் களோடு அறையில் பேசிக்கொண்டிருந்தேன். நான் அவர்களோடு மறுபடியும் ஜெபிக்க விரும்புகிறேன். அவர்கள் இங்கே எங்கே யோயிருக்கிறார்கள். அவர்களால் திரும்ப உள்ளே வர முடியாமற் போய்விட்டது எனக் கருதுகிறேன். ஆனால் இதோ! எங்கள் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள். அது சரிதான். சகோதரியே, ஜனங்கள் உங்களைக் காணத்தக்கதாக ஒரு நிமிடம் எழுந்து நிற்பீர்களா? இனி ஒருபோதும் நடக்கமாட்டார்கள் என்று சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் கூறின, முதுகெலும்பு மற்றும் எல்லா பாகங்களும் சேதமடைந்திருந்த அம்மாள், இதோ நிற்கிறார்கள், முழுமையாக. ''அவர்கள் அதற்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாமல் போயிற்று. ஏனென்றால் அந்த மனிதன் அவர்கள் மத்தியிலே நின்றுகொண்டிருந்தான்'' என்று வேதம் கூறுவதை அறிவீர்கள். அது சரிதான். மரணத்தினின்று மீண்டும் கொண்டுவரப்பட்ட சிறுபையன் இதோ இங்கிருக் கிறான்! முதுகெலும்பு முற்றிலுமாய் முறிந்துபோன ஸ்திரீ நம் மத்தியிலே நிற்கிறார்கள். இது இப்பொழுதுதான் நடந்தது. ஆகவே அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! அவருடைய சமுகத்தில் ஜீவித்திருந்து, ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணை அவர்தான் என்பதை அறிந்துகொள்ள நாம் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கவேண்டும். சகோதரர் வேய்ல், சகோதரர் மார்ட்டின் இன்னும் அநேக சகோதரர்கள் இந்தக் காலையிலே வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி யடைகிறேன். சகோதரர்களே, கர்த்தர் உங்களை பெருக்கமாய் ஆசீர்வதிப்பாராக. 9இப்பொழுது இது... இவ்வளவு பெரிய கூட்டம் உள்ளிருப் பதால் இங்கே மிக குளிர்ச்சியாக இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் அன்று டூசான் நகரத்தை விடும்போது நூற்றி நான்கு அல்லது நூற்றி ஐந்து டிகிரி வெப்பமாயிருந்தது. நடு இரவிலும் தொண்ணூற்று மூன்று டிகிரி இருந்தது. ஆகவே இது எனக்கு மிகவும் நன்றாயிருக்கிறது. பார்க்கரில், வெள்ளிக்கிழமையன்று, நாங்கள் விடுமுன், நூற்று நாற்பது டிகிரி காய்ந்ததாக சொன்னார் கள். அது எவ்வளவு வெப்பம் என்று நீங்கள் யூகிக்கலாம். ஆனால் பாலைவனங்களில் அப்படித்தான் இருக்கும். ஆகவே இப்பொழுது, அடுத்த மூன்று ஞாயிற்றுக் கிழமை களிலும் ... இன்று, பதினைந்து அது சரியென்று நான் நம்புகிறேன், அல்லது பதினாறா? பதினைந்து அப்படித்தானே? (யாரோ ஒருவர் “பதினெட்டாம் தேதி'' என்று பதிலளிக்கின்றார்- ஆசி) பதி னெட்டு. ஆகவே இருபத்தெட்டு மற்றும் ஆகஸ்டு முதல் தேதி. அது சரியா? (யாரோ ஒருவர் சரியான தேதிகளைக் கூறி பதில் அளிக்கின்றார் - ஆசி) இருபத்தைந்து - பதினெட்டு, இருபத்தைந்து மற்றும் முதல் தேதிகளில் கூடாரத்தில் ஆராதனைகள் இருக்கும். உங்களுக்கு மிகவும் சங்கடமாக இல்லையா, ஏனெனில் நீங்கள் பாருங்கள், நம்மால் இங்கே உள்ளே - இங்கே உள்ளே எப்படி யிருக்கிறதென்று உங்களுக்கு தெரியும். இது மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. உங்களால் முடிந்தவரை பின்னாக வாருங்கள். 10இங்குள்ள தர்மகர்த்தாக்களை நன்றாகக் காணவிருக்கிறேன். ஓரிடத்தில் கூட்டம் நடத்த ஏவப்படுவதாக நான் உணரும்போது, இடம் கிடைக்காது என்ற காரணத்தால் கூட்டம் நடத்த இயலாமல் போகும்போது மனம் விட்டுப்போகிறது. ஆகவே நம்முடைய கூடாரத்தை எடுத்து, ஓரிடத்தில் போட்டு, அதே இடத்தில் தங்கி கூட்டம் நடத்தக்கூடுமா என்று அவர்களை கேட்கலாமா என்று நினைக்கிறேன். கர்த்தர் நடத்துகிறபடி, பந்து விளையாடும் பூங்கா அல்லது பண்ணை போன்ற இடங்களுக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதை நகர்த்திக்கொண்டு போவது. அவர் அப்படித்தான் செய்யப்போகிறார் என்று உணர்கிறேன். அதைக் குறித்த தரிசனம் ஒன்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது நிகழ்வதற்குக் காரணம் கூட அதுவாக இருக்கலாம் என நினைக் கிறேன்... இப்பொழுது அநேகமுறை, சில காரியங்கள் நிகழ்வதை பயங்கரமென்று எண்ணுகிறோம். ஆனால் தேவன் உங்களை அதுபோன்ற கட்டங்களுக்குள் வழிநடத்துவதாயிருக்கக் கூடும். அவர் அதை சொன்னபோது அவர் அதைச் செய்வார். 11சில இரவுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு... “ஒரு மணவாட்டியை தேரிந்துகொள்ளுதல்'' என்பதைப் பற்றிய ஒலி நாடாவை உங்களில் அநேகர் வைத்திருக் கக்கூடும். அச்செய்தி கலிபோர்னியாவில் பிரசங்கிக்கப்பட்டது. அந்தச் செய்தியின் கடைசி சில நிமிடங்கள், அங்கிருந்ததாக எனக்கு நினைவுகூட இல்லை. ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவ்விதமாய் வந்தார். அவர்கள் வாழ்கிறமுறையையும், செய்கிற காரியங்களையும் குறித்து அவர்களை நான் கண்டனம் பண்ணிக் கொண்டிருந்தேன். சுவிசேஷத்தைப் பிரசங்கித்தப் பிறகு அநேக காரியங்களைப் பகிரங்கமாக அறிவித்தேன். திடீரென்று பரிசுத்த ஆவியானவர் பேசினார்: ”கப்பர்நகூமே (பாருங்கள்!), தூதர்களின் பெயரைச் சொல்லி உன்னை அழைத்துக் கொள்ளுகிற நகரமே (அது லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணம்), நீ வான பரியந்தம் உயர்த்தப் பட்டிருக்கிறாய், ஆனால் பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்!'' பாருங்கள்? அதன் பிறகு அது முடிந்துவிட்டது. நானும் வெளி யிலிருந்தேன். சகோதரர் மாஸ்லியும் பில்லியும் என்னுடனிருந் தார்கள். அவர்கள் திரும்பிச் சென்று, தரை முழுவதும் மக்கள் விழுந்து கிடப்பதையும், ஊழியக்காரர்கள் தேம்பிக் கொண்டிருப்ப தையும் கண்டார்கள். 12ஆகவே நான் சென்று வேதத்தை எடுத்தேன்; ''அதைக் குறித்து வேதத்தில் எழுதியிருக்கிறது'' என்றேன். இயேசுவானவர் கப்பர்நகூமையும், தாம் சென்றிருந்த கடற்கரையோரத்திலிருந்த நகரங்களையும் கடிந்துகொண்ட இடம் அது. “வான பரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே. நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படு வாய். உன்னில் செய்யப்பட்ட செய்கைகள் சோதோமிலும் கொமோராவிலும் செய்யப்பட்டிருந்ததானால் அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்'' என்றார். அந்த வேளையிலே சோதோமும் கொமோராவும் சமுத்திரத்தின் அடியில் இருந்தன. அதற்கு சற்றுபின்பு, இயேசுவானவர் தீர்க்கதரிசனம் உரைத்து ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து, அவர் வருகை தந்திருந்த ஒரே கடலோர நகரமாகிய கப்பர்நகூம் ஒரு பூமியதிர்ச்சியினால் சமுத்திரத்திற்குக் கீழே அமிழ்ந்து போயிற்று. கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணங்களுக்கு அது ஒரு நேரான பதிலாகும். 13ஆகவே அவ்வாறே அந்நாளில், நான் திரும்பி வந்த வேளையில், டூசான் நகரத்தில் பெரியதொரு பூமியதிர்ச்சி ஏற்பட்டி ருந்தது. விஞ்ஞானிகளும் தொலைகாட்சியிலே அதை வரைந்து காட்டினர். அலாஸ்கா தொடங்கி ஆலூஷியன் தீவுகளைச் சுற்றிக் கொண்டு சுமார் இருநூறு மைல்கள் கடலுக்குள்ளாக சான்டி யேகோ உட்பட, லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்தைச் சுற்றி பூமி பிளந்திருப்பதாக தினசரிகளிலும் வந்தது. அநேக அங்குலங்கள் அகலம் பிளந்திருக்கிறது. வீடுகள் இடிந்து விழுந்து, வாடகை விடுதிகள் பூமிக்குள் போயின. ''அப்பகுதி தரை ஒரு நாள் கடலுக்குள் விழுந்து விடக்கூடுமல்லவா?'' என்று அந்த விஞ்ஞானிகளிடம் கேட்கப்பட்டது. அவர் “கூடுமா? நிச்சயமாக விழும்'' என்று கூறினார். எரிமலைக் குழம்பு முதலிய விஞ்ஞான ரீதியான பெயர்களை உபயோகித்து அதை விளக்கினார். சான்டியேகாவைச் சுற்றிலும் ஏற்படும் பூமி அதிர்ச்சிகளுக்கு அதுதான் காரணம். அந்தக் குழிவான இடம்தான் அது. பள்ளத்தில் மணல் சரிவதுபோல எல்லாம் உடைந்து விழுகின்றது. இப்பொழுது வெறும் மேல்பாகம்தான் மூடியிருக்கிறது. அதுவும் பல அங்குலம் அகலம் பிளந்து விரிந்துள்ளது. அவர்கள் ராடார் முதலிய சாதனங்களைக் கொண்டு அந்த வீரலை தொடர்ந்து சென்று எங்கெல்லாம் செல்கிறதென்று குறித்துள்ளார்கள். அந்த நாளில் தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்ட பிறகு அந்த இடம் இன்னும் இரண்டு, மூன்று அங்குலங்கள் பிளந்திருக்கிறது. அந்த விஞ்ஞானியை பேட்டி கண்டவர்கள், “நல்லது, ஓர் வேளை அது நம் காலத்தில் ஏற்படாமலிருக்கக் கூடும்'' என்றனர். அவரோ, ''அது இன்னும் ஐந்து நிமிடத்திலும் ஏற்படலாம். அல்லது ஐந்து வருடத்திலும் நேரலாம். ஆனால் அது நிச்சயம் விழப்போகிறது'' என்று கூறினார். 14திருமதி. சிம்சன் அவர்கள் இன்று நம்மோடில்லை என்று எண்ணுகிறேன்; சகோதரர் ஃப்ரெட் இங்கு அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். ஆனால் திருமதி. சிம்சன் எங்கே என்று தெரிய வில்லை. அவர்கள் சென்று, ஏறத்தாழ 1935ம் ஆண்டு நான் உரைத் திருந்த தீர்க்கதரிசனம் ஒன்றை கொண்டு வந்து, (அது ஒரு புத்தகத் தில் எங்கோ எழுதப்பட்டிருக்கிறது) ''சமுத்திரமானது பாலைவனத் திற்குள் ஓடிவரும் காலம் வரும்'' என்றார். என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள். ஆயிரக்கணக்கான சதுர மைல்கள் விஸ்தீரணமுள்ள அந்நிலம் பூமியின் அக்கினிக் குழம்பிற்குள் விழுந்து உள்ளே சறுக்கிச் செல்லுமானால் பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மடிவார்கள். அது சமுத்திரத்தில் மிகப்பெரிய அலைகளை உண்டு பண்ணும். சால்டன் சமுத்திரமானது கடல் மட்டத்தை விட நூறு அல்லது இருநூறு அடி கீழ் உள்ளது. அந்த தண்ணீரானது கடலலைகளுடன் ஏறக்குறைய டூசான் வரை வரக்கூடும். கடலானது பாலைவனத்திற்குள் வந்து சேரும். தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது நம் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள் இவை. புறஜாதியாரின் நாட்கள் எண்ணப்படக்கூடியதே பயங்கரங்கள் நிறைந்தவை திரும்புங்கள், ஓ சிதறுண்டவர்களே, உங்கள் சொந்தத்திற்கு. நாம் கடைசி காலத்திலிருக்கிறோம். தேவன் உங்களைப் பெருக்கமாய் ஆசீர்வதிப்பாராக. நான் அதைக்குறித்து பேச ஆரம் பித்து, நேரத்தை மறந்துவிடுகிறேன். எப்படியும் வெகுவிரைவில் நாம் நித்தியத்திற்குள் சிறிது சிறிதாக மங்கி மறையப்போகிறோம். 15ஆகவே, இப்பொழுது 1நாளாகமம் 13ம் அதிகாரத்தில் இருந்து வாசிக்கப்பட்ட இப்பொருளுக்கு மூல வாக்கியமாக பரி.மாற்கு எழுதின சுவிசேஷம் 7ம் அதிகாரம் 7ம்வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். ''....மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.'' இப்பொழுது கர்த்தர் எனக்களித்திருக்கும் செய்தியைத் தவிர வேறொன்றையும் நான் அறியேன். அதைக் குறித்துதான் என்னால் பேச இயலும். நலமாயிருக்கும் என்று நான் கருதிய ஒரு பொருளின் மீது இக்காலை வேளையிலே பேசப்போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு “தகுந்த காலத்தில் ஆகாரம்''''ஏற்றகாலத்தில் ஆவிக்குரிய ஆகாரமும் அதை எவ்விதம் பெற்றுக் கொள்ளுதலும்'' என்பதைக் குறித்து பேசவிரும்புகிறேன். இப்போது, இன்று காலையிலே, ”தேவனுடைய சித்தமாக இல்லா மலே, தேவனுக்கு ஒரு சேவையைச் செய்ய முயலுவது''. தேவன் பரிபூரண சுயாதீனமுள்ளவர் (Sovereign). 1நாளா கமம் 13ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கப்பட்ட வேதாகமம் வாசிப்பில் தாவீது என்ன செய்தான் என்பதைக் காண்கிறோம். ஆகவே அவன் - அவருடைய நோக்கங்கள் செம்மையானவை களாயிருந்தன. ஆனால் நம்முடைய நல்ல நோக்கங்களை வைத்து தேவன் நம்மை மதிப்பிடுவதில்லை. தேவனுக்கு சேவைசெய்ய ஒரே ஒரு வழிதான் உண்டு. அது அவருடைய சித்தத்தை அவருடைய கட்டளையின்படி செய்வதன் மூலமேயாகும். தேவன் பரிபூரண சுயாதீனமுள்ளவராயிருக்கிறபடியால், எதைச் செய்ய வேண்டுமென்றோ, அதை எப்படி செய்ய வேண்டுமென்றோ அவருக்கு சொல்ல ஒருவருமில்லை... அதைச் செய்வதற்கான சரியான வழியை அவர் அறிவார். அது எனக்கொரு நல்ல உணர்வைத் தருகிறது. அது நம்மெல்லாரையும் மகிழ்ச்சியுறச் செய்ய வேண்டும்; அது அவ்வாறே செய்கிறதென்று நிச்சயித் திருக்கிறேன். ஒருவர் அது இப்படி நிறைவேற வேண்டுமென்றும், இன்னுமொருவர் அது அப்படி நிறைவேற வேண்டுமென்றும் இன்னும் மற்றுமொருவர் அந்த விதமாகவே இருக்கும் என்பார்... எதிர்பார்ப்பர். 16ஆனால் தேவனைக் குறித்த இன்னுமொரு மகத்தான காரியம், சத்தியம் எது என்றும் அதை எப்படி செய்வதென்றும் அறிந்து கொள்ளாதபடி நம்மை அவர் விட்டு விடவில்லை. காரியம் எவ்விதம் நடைபெறும் என்பதை அறியாமல், ஏதாவதொன்றில் தடுமாறி விழ அனுமதித்து, அதற்காக நம்மைத் தண்டித்தால் அவர் நீதியுள்ளவராகமாட்டார். அவர் அப்படிப்பட்ட தேவனல்ல. ஒரு வார்த்தையைச் சொல்லி, அதை தம்முடைய பிள்ளைகள் விசுவாசிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிற தேவன். ஆகவே அனைத்திலும் சிறந்தது எது என்றும், அதை எப்போது செய்ய வேண்டும் என்றும், அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்றும் அவர் அறிவார். அதைக்குறித்த நம் கருத்துக்கள் நமக்குண்டு. ஆனால் அவர் அறிவார். ஆகவே மேலும் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் குறித்த ஒரு முறையை ஏற்படுத்தி, என்ன நிகழப்போகிறது என்றும் எவ்விதம் அது நிகழப்போகிறதென்றும் அவர் நமக்கு அறிவிக்காதிருந்தால், அப்பொழுது நாம் இடறிக் கொண்டிருப் போம் அது என்னவென்று நம்முடைய இடறிலிலும் அல்லது ஏதாவதொன்றை செய்ய முற்படுத்தலிலும் நாம் நியாயப் படுத்தப்படுவோம், ஒவ்வொருவரும் நியாயப்படுத்தப்படுவர். ஆனால் ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. அதுதான் அவருடைய வார்த்தை . 17ஆகவே இன்னுமொரு காரியத்தை இங்கே பார்க்கிறோம். தாவீது நல்லதொரு காரியத்தைச் செய்ய தன் இருதயத்தில் விருப்பம் கொண்டிருந்தான். அவனுக்கு எவ்வித கெட்ட உத்தேசமோ, அல்லது கெட்ட குறிக்கோளோ இருந்ததில்லை. ஆனால் அந்த வீடு - அல்லது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி ஜனங்களைவிட்டு தூரத்திலிருந்தது. ஜனங்கள் தாங்கள் விரும்புகிற காரியங்களைக் குறித்து தேவனுடைய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அதன் ஸ்தானத்திற்குத்திரும்ப அவன் கொண்டுவர விரும்பினான். அது நடக்கவிடுவதற்கு பதிலாக, நாம்... “நிலைமை மிகவும் மோசமாயிருக்கிறது. பிள்ளை காயப்பட்டு மரித்துப்போனான். இது நடந்துவிட்டது என்று கருதுகிறேன்'' என்று சகோதரர் பிளேர் அவர்களும் சிறுபையனுடைய தகப்பனாரும் சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும். ஆனால் அவர்கள் சீக்கிரமாய் தேவனிடம் சென்றார்கள். சில தினங்களுக்கு முன்பு முதுகெலும்பு முறிந்து போன தினால், மருத்துவர் “இனி வாழ்நாளெல்லாம் இந்த அம்மாள் முடங்கிக்கிடக்க வேண்டியதுதான்'' என்று சொல்லிய போதும்; இப்போது சற்று நேரத்திற்கு முன்பு அந்த அம்மாள் எழுந்து நின்றார்களே, அவர்களும் சுவிசேஷத்தில் ஊழியம் செய்யும் அவருடைய கணவரும், ”சரி, தேனே இனி நாம் ஒருவரை ஒருவர் அதைக் குறித்து தேற்றிக்கொள்வோம்' என்று சொல்லியிருப்பார்களானார் - ஆனால் அதைக் குறித்து விரைவாக ஏதோ செய்தார்கள்அவர்கள் தேவனை அணுகினார்கள். துன்பத்தில் அகப்பட்டுக் கொண்டபோது, ஜனங்கள் எவ்விதம் தேவனை அணுகினார்கள் என்பதைக் குறித்து வேதத்தில் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். 18நல்லது அந்நாட்களில் அவர்கள் தேவனை சந்திக்க ஒரே ஒரு இடம் மட்டுமே இருந்தது-இரத்தத்தின் கீழ் உடன்படிக்கைப் பெட்டி யண்டையில் தான். இன்னமும்கூட சந்திக்கும் ஒரே இடம் அதுதான்-இரத்தத்தின் கீழ். தேவனை ஆராதிக்க வருபவனுக்கு, அல்லது அவரிடம் விண்ணப்பம் ஏறெடுக்க வருபவனுக்கு, கிருபையை அளிக்க கிருபாசனமானது இரத்தத்தினால் தெளிக்கப் பட்டது. ஆகவே அதைக் குறித்து - நீ செல்ல வேண்டிய வழியா கிய, அந்த விசேஷமான வழக்கமான வேலை முறையை தேவன் கொண்டிருந்தார். அதைத் தவிர வேறெதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. வேறெந்த ஏற்பாட்டையும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் குறித்த வழியில் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். “என் நாமத்தை வைப்பேன்' என்பதாக தேவன் சொல்லிய, தேவன் தம்மை ஆராதிப்பவர்களை சந்திக்க அருளப்பட்ட ஒரே இடம் என்ற ஒரு செய்தியை சமீபத்தில் பிரசங்கித்தேன். (உங்களில் அநேகர் அதைப்பற்றி அறிவீர்கள்). அவர் தம்முடைய நாமத்தை விளங்கச் செய்திருக்கும் ஒரு சபையை நாம் கண்டு கொள்ள முடியுமானால், நாம் அந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். ”நான் என் நாமத்தை வைக்கும் வாசல்களிலேயே அன்றி எல்லா வாசல்களிலேயும் உங்களை ஆசீர்வதிக்கமாட்டேன்'' என்றார். “நான் அதை ஒரு ஸ்தானத்தில் விளங்கச் செய்வேன். நீங்கள் அங்கு என்னை சந்திக்கவேண்டும்; நான் உங்களை சந்திக்கும் ஒரே இடம் அதுவாயிருக்கும்'' என்றார். அவர் தம்முடைய நாமத்தை எங்கே விளங்கச் செய்தார் என்பதை அச்செய்தியின் மூலம் அறிந்தோம். ஆராதிப்பவர்களை அவர் சந்திக்கும் ஒரே இடம் அதுதான். அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து. தேவனுடைய நாமம் இயேசுகிறிஸ்து என்பதாகும். 19“நான் என் பிதாவின் நாமத்தில் வருகிறேன்'' என்று இயேசு சொன்னார். ஒவ்வொரு குமாரனும் தன் தகப்பனுடைய நாமத்திலே வருகிறான். வானத்தின் கீழ், மனிதருக்குள் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், ப்ரெஸ்பி டேரியன், கிறிஸ்துவின் சபை என்றெல்லாம் அழைக்கப் பட்டாலும், என்னதான் செய்யப்பட்டாலும், தேவன் மனிதனை சந்திக்கும் ஒரே சந்திப்பின் இடம் உண்டு - அது அவன் இயேசு கிறிஸ்துவில் இருக்கும் போதுதான், ஒரே இடம் பழைய ஏற்பாட்டின் கீழ் காணப்படும் பழைய காரியங்களெல்லாம் அதற்கு மாதிரியாக அமைந்துள்ளன. அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இது ஒரு ஞாயிற்றுக்கிழமை பள்ளிப் பாடமாயிருக்கிறது. நான் சில வேத வாக்கியங்களையும் குறிப்புகளையும் எழுதிவைத்திருக்கிறேன். பழமையான எல்லா காரியங்களும் நமக்கும் மாதிரிகளாக ஏற்பட்டிருப்பதால், நீங்கள் புரிந்துகொள்ள இவை உதவும் என்று எண்ணினேன். 20இப்பொழுது, தேவன் காரியங்களைச் செய்யும் ஒரு வழியை வைத்திருக்கிறார் என்று காண்கிறோம். ஆனால் தாவீது, தான் ராஜாவாக தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவுடனே, தேவனுக்கு ஏதாவதொன்றை எவ்விதத்திலாகிலும் செய்ய வேண்டுமென்று எண்ணினான். ஆனால் அதை செய்ய அவன் சரியான முறையில் செல்லவில்லை. தேவன் தம்முடைய வார்த்தையை தம்முடைய சொந்தமான முன் குறிக்கப்பட்ட காலத்திலேயே வெளிப்படுத்துகிறார் என்று நான் பார்க்கிறோம். ஆக இன்றைய செய்தியைக் குறித்து மார்டின் லூத்தர் எங்ஙனம் அறிந்திருக்கக்கூடும்? எப்படி பிரஸ்பிடேரியன்... எப்படி மார்டீன் - அல்லது கத்தோலிக்க சபை அல்லது மார்டின் லூத்தருடைய செய்தியை அறிய முடியும்? ஜான் வெஸ்லி எப்படி லூத்தருடைய செய்தியை அறிந்திருக்கக் கூடும்? பெந்தெகொஸ்தே செய்தியை எப்படி வெஸ்லி அறிந்திருக்க முடியும்? அல்லது இந்த செய்தியை எப்படி பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் அறிய முடியும்? பாருங்கள்? அவர் தம்முடைய காலங் களில் அதை வெளிப்படுத்துகிறார், ஏனெனில் அது ஒரு வித்தா யிருக்கிறது. அது வளர்ந்து, முதிர்ச்சி அடைய அடைய, அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். 21அது திறந்துகொள்ள சூரிய வெப்பம் தேவைப்படுவது போல அது மிருதுவாகவும் இனிமையாகவும் இருக்கும்போது அந்த வித்தை பூமியிலிருந்து வெளியே கொண்டு வந்து, பிறகு, சூரியனுடைய இன்னொரு கட்டத்தில் அதற்கு அதன் இலைகளைத் தருகிறார். வித்து முதிர்ச்சியடையும் நிலையில் இருந்தால் முதிர்ச்சி யடையும் பருவமாயிருந்தால்-அதிக சூரிய வெப்பம் அதைக் கொன்று விடும். அதற்காக அவர் சூரிய வெப்பத்தை ஒழுங்கு படுத்துகிறார். தம்முடைய வார்த்தையை சந்திக்கத்தக்கதாக இயற்கையையும் ஒழுங்குபடுத்துகிறார். தாங்கள் வசித்துக் கொண்டிருக்கும் காலத்தை சந்திக்கத்தக்கதாக சபையை, முன் குறிக்கப்பட்டவர்களை, மணவாட்டியை அவர் ஒழுங்குபடுத்துகிறார். இயற்கையும் இன்று நமக்கு அறிவிக்கிறது. தேசங்கள் உடைவதையும், பூமி அமிழ்ந்து போவதையும் நாம் காணும் போது, கையெழுத்து சுவரில் எழுதப்பட்டிருக்கிறது. சபையையும் அது இருக்கும் நிலையையும் நாம் காண்கிறோம். மணவாட்டியை யும், அவளிருக்கும் நிலையையும் நாம் காண்கிறோம். சபையானது புறப்பட ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் இயற்கையின் மூலமாகவே அறிகிறோம். என்ன ஒரு மகத்தான நேரம். எல்லாத் தீர்க்கதரிசிகளும் காண வாஞ்சித்த நேரம் இது, இந்த மணி நேரம். 22இப்பொழுது அவர் தம்முடைய வார்த்தையை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்துகிறார். நாம் படித்த இதே வேதாகமத் தைத் தான் மார்ட்டின் லூத்தரும் படித்தார். மார்டின் லூத்தர் படித்த அதே வேதாகமத்தை வெஸ்லியும் படித்தார். நாம் படிக்கும் அதே வேதாகமத்தைத்தான் பெந்தெகொஸ்தேயினரும் படிக்கின்றனர். பரிசேயர்கள் படித்த அதே வேதாகமத்தைதான் இயேசுவும் படித்தார். ஆனால் அவர்கள் எல்லோரும்.... தானியமானது முதிர்ந்து வரும்போது அதை இள நிலையிலேயே அவர்கள் வைக்க முயன்றார்கள். தாங்கள் வாழ்ந்த மணி நேரத்தை அவர்கள் காணத் தவறினார்கள். இப்பொழுது தாவீதும் அதையேதான் இங்கு செய்திருக் கிறான். தேவன் இந்த வார்த்தையை பருவத்தில், யாருக்கு அதை வெளிப்படுத்த தெரிந்து கொண்டிருக்கிறாரோ அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். யாருக்கு வெளிப்படுத்துகிறாரோ அவர்களை தெரிந்தெடுக்கிறார். அவர் அதை உலகத்தோற்றத்திற்கு முன்னே தெரிந்தெடுத்தார். அவருடைய செய்கைகளெல்லாம் மனிதனுக்கு மறைக்கப்பட்டு, அவரால் முன்னறியப்பட்டிருந்தன. அவர் சித்தங்கொள்ளுகிற போது அவைகளை வெளிப்படுத்துகிறார். அது அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட காலம், அவரால் தெரிந்தெடுக்கப் பட்ட மனிதன். ஒரு கூட்டத்தாரையோ அல்லது மதப்பிரிவையோ அவர் ஒரு போதும் தெரிந்தெடுப்பதில்லை; அது அவரால் தெரிந்தெடுக்கப்படும் ஒரு ஆள். அவர் எவ்விதம் அதைச் செய்கிறார். 23“இந்த மனிதன் நாங்கள் விசுவாசிப்பதைப் போல விசுவாசிப்பதில்லை. ஆண்டவரே, இவரை ஊழியத்தில் வைத்ததன் மூலம் நீர் ஒரு தவறை செய்துவிட்டீர்'' என்று அவரிடம் சொல்லி அவரைத் திருத்தத் துணியக் கூடியவன் யார்? தேவன் அதில் தவறு செய்துவிட்டார் என்று தேவனிடம் சொல்லப்போகிறவன் யார்? ”நீ குற்றவாளி'' என்று நான் சொல்லத்தக்கதாக குற்றம் புரிந்தவனைக் காட்டிலும் மோசமானவனாலேயே அது கூடும். தாம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தேவன் அறிவார். யாரைத் தெரிந்தெடுப்பது என்றும், யாரைத் தெரிந்தெடுக்கக் கூடாதென்றும், என்ன செய்யவேண்டுமென்றும், எப்போது செய்ய வேண்டுமென்றும் அவர் அறிவார். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட ஆள் தகுதியுள்ளவர் என்று நாம் எவ்வளவுதான் எண்ணினாலும், அந்தக் காலத்திற்கும் பருவத்திற்கும், அல்லது அந்தக் காலத்திற்கும் அதை செய்வதற் கேற்ற வேளைக்கும் தகுதியானவர் யார் என்பதை தேவன் அறியார். ஆகவே மெய்யான உண்மையான கிறிஸ்தவன், தேவன் பேரில் மெய்யான உண்மையான விசுவாசமுள்ள மனிதன், இத்தகைய காரியங்களுக்காக கர்த்தருக்கு காத்திருப்பான். உங்கள் ஊழியத்தைக் குறித்து காத்திருங்கள். நீங்கள் அழைக்கப்படுவதாக உணர்ந்தால், அது தேவன் தான் என்று நிச்சயித்துக் கொள்ளுங்கள். அது சரியானது என்ற நிச்சயத்தோடிருங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது அந்தக் காலத்திற்கேற்றது என்ற நிச்சயம் உங்களுக்கிருக்கட்டும். 'கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து கழுகைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள். அவர்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்'' என்று வேதாகமம் கூறியிருக்கிறது. 24இஸ்ரவேலின் இராஜாவாக அப்போதுதான் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த தாவீதை கவனியுங்கள். சாமுவேல் எண் ணெயை அவன் மீது ஊற்றியதன் மூலம் அவன் தேவனால் இஸ்ர வேலின் இராஜவாக தெரிந்தெடுக்கப்பட்டான். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை தாவீதின் நகரத்திற்கு கொண்டு வருவதான வெளிப்பாட்டை தாவீது பெற்றான். அதில் தவறு ஒன்றும் கிடையாது, ஆனால் பாருங்கள், தாவீது அதை தவறான முறையில் அணுகினான். இப்பொழுது தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இராஜாவாக, ஒரு பெரிய மனிதனாக தாவீது இருந்தான். (கிறிஸ்துவுக்கு அப்பால், இப் பூமியில் வாழ்ந்த இராஜாக்களிலேயே தாவீதுதான் மிகப் பெரியவன் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் கிறிஸ்து, தாவீதின் குமாரனாக இருக்கிறார்). அப்படி எல்லாரிலும் உயர்ந்த மனிதன், புதிதாக அபிஷேகம் பண்ணப்பட்டவன், தேவனுடைய சந்நிதானத்திலிருந்து வருகிறவன், தேவனுக்காக ஏதோ ஒன்றைச் செய்ய ஒரு வெளிப்படுத்தலைப் பெற்றான்-அதை தேவனுக்காக செய்ய விரும்பினான், ஆனால் அந்த வெளிப்படுத்தல் தவறா யிருந்தது. அது ஒரு பெரிய காரியம். ''அதைச் செய்வதற்கு அழைக்கப்படாமலேயே தேவனுக்கு ஒரு சேவையைச் செய்ய முயல்வது'' என்ற நம்முடைய பொருள் பற்றினது. 25கவனியுங்கள், தாவீது வெளிப்படுத்தலைப் பெற்றான். ஆகவே கவனியுங்கள், வெளிப்படுத்தலைப் பெற்றது தீர்க்கதரிசி யாகிய நாத்தான் அல்ல; இராஜாவாகிய தாவீது அந்த வெளிப் படுத்தலைப் பெற்றான். அதைக் குறித்து நாத்தான் கலந்தாலோ சிக்கப்படவேயில்லை. அவன் நாத்தானைக் கேட்கவேயில்லை. ஆனால் நாளாகமத்தில், அவன் ஆயிரம் பேருக்குத் தலைவரோடும் நூறு பேருக்குத் தலைவரோடும் ஆலோசனை பண்ணினான் என்பதைப் பார்த்தீர்களா? அவன் நாத்தானைக் கலந்தாலோசிக்க வேயில்லை. அவன் மக்களிடம் யோசனை கேட்டான். மேலும் அவன் அக்காலத்தில் வாழ்ந்த குருமார்களையும், மதசாஸ்திர விற்பன்னர்களையும், வேதபாரகரையும் கலந்தாலோசித்தான். தாவீது முதலில் கலந்தாலோசித்தான். “இந்தக் காரியம் தேவனால் உண்டாயிருந்ததானால், நாம் காரியங்களை செய்யுமுன் தேவனை கலந்தாலோசிக்கத்தக்கதாக நாம் போய் தேவனுடைய உடன் படிக்கைப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வருவோம்'' என்றான். 26சவுலின் நாட்களிலே, தேவனை உடன்படிக்கைப் பெட்டி யண்டையிலே, ஊரிம் தும்மீம் மூலம் கலந்தாலோசிப்பதை ஜனங்கள் விட்டுவிட்டார்கள் என்று சொன்னார்கள். அதைச் செய்வதை விட்டுவிட்டிருந்தார்கள். “இப்போது நாமெல்லாருமாக, தேவனிடத்துக்குத் திரும்புவோம்'' என்று தாவீது உரைத்தான். ”நாமெல்லாரும் சரியான காரியத்துக்குத் திரும்புவோம். நாம் போய் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, அதை இங்கு கொண்டு வருவோம்'' (வேறு வார்த்தையில், “தேவனுடைய சமுகத்தை இங்கே நகரத்துக்குள் கொண்டுவருவோம்'') என்றான், ”நாம் ஒரு எழுப்புதலை ஏற்படுத்துவோம். ஜனங்களைத் திரும்பவும் கொண்டுவருவோம்.'' நல்லதுபோல் காணப்பட்ட வெளிப்படுத் தலை அவன் பெற்றான். ஆனால் அது தேவனுடைய சித்தமாயிருக்க வில்லை . அவன் கேட்டிருக்க வேண்டிய ஆரம்ப இடத்தில் கேட்காமல், தன் அதிபதிகளை கலந்தாலோசித்தான். ஏனென்றால் அவன் அப்போதுதான் இராஜாவாகியிருந்தான். ஆகவே அவன் தன்னுடைய பிரதான அதிபதிகளையும், பெரிய மனிதர்களையும் போலவே சிந்திக்கலானான். பிறகு பெயரளவிலுள்ள சபைக்குள் சென்று, அவர்கள் எழுப்புதலைப் பெற்றுக் கொள்ளக்கூடுமா என்று கேட்டான். ''இதுதான் கர்த்தருடைய சித்தமா'' என்று குருமார்களையும், வேதபாரகர்களையும், ஆயிரம் பேருக்குத் தலைவரோடும் நூறு பேருக்குத் தலைவரோடும் அவன் கலந்தாலோசித்தான். அது கர்த்தருடைய சித்தம்தான் என்று அவர்கள் சொன்னார்கள். பார்த்தீர்களா, தேவன் எப்போதும் உபயோகிக்கும் முக்கியமான வெளிப்படுத்தலுக்கு மூல ஸ்தானத்திடம் அவன் கேட்கவில்லை. அவன் அதைப் பெற்றுக்கொள்ளத் தவறினான். 27இப்பொழுது அவனுடைய நோக்கம் நல்லதாயிருந்தது. அவனுடைய உள்ளெண்ணம் நல்லதாயிருந்தது. அவனுடைய குறிக்கோள் நல்லதாயிருந்தது - நகரத்தில் ஒரு எழுப்புதலைக் கொண்டுவர, மக்களை தேவனிடம் திரும்பவும் கொண்டுவர. ஆனால் தேவன் அவனுக்கு சொல்லியிருந்த வழியில் அவன் கலந்தாலோசிக்கவேயில்லை. பாருங்கள். எல்லா ஜனங்களும் குருமார்களும் இராஜா சரியாக செய்கிறார் என்று ஒத்துக்கொண்டார்கள். உடன்படிக்கைப்பெட்டி திரும்பவும் நகரத்திற்கு கொண்டுவரப்படவேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்தார்கள். இப்போது தேவனுடைய சமுகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. எழுப்புதல் அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையை அதன் காலத்தில் ஜனங்களுக்கு வெளிப்படுத்துவதாக வாக்குத் தத்தம் பண்ணியிருக்கவில்லை. அவர் அதை அதன் காலத்தில் இராஜாவுக்கு வெளிப்படுத்துவதாக வாக்குத்தத்தம் பண்ணவே யில்லை. தேவன் எவ்வளவேனும் மாறுவதேயில்லை. அப்படிச் செய்ய அவர் வாக்குத்தத்தம் பண்ணவில்லை. 28எவ்வளவுதான் உண்மையாக செய்யப்பட்டாலும், எவ்வளவு நல்ல உள்நோக்கமாயிருந்தாலும், எவ்வளவு நல்ல குறிக்கோளோடு செய்யப்பட்டாலும், ஜனங்கள் எப்படி அதை விரும்பினாலும், அதன் தேவையை உணர்ந்தாலும், இத்தகைய காரியங்களில் செய்யப்படுவதற்கென்று தேவனுடைய சித்தம் ஒன்று உண்டு. அதைத்தான் உங்கள் சிந்தையில் இறுக்கமாய் பாய்ச்ச விரும்புகிறேன். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசம்பண்ணுகிறார் என்று நீங்களே பார்த்துக்கொள்ளும் விதமாக இதைச் செய்ய விரும்புகிறேன். நான் இந்த இடத்தில் இவ்வளவு நேரம் தாமதிப்பதற்கு அதுதான் காரணம். தொலைபேசியிலும் மற்றத் தொடர்புகளிமுலுள்ள மக்களாகிய உங்களுடைய நேரத்தை வீணாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் நீங்கள் அதைக்காண வேண்டுமென்று விரும்புகிறேன். உங்களுக்கு நேரம் கடந்து போகுமானால், ஒலி நாடக்களைப்பெற்று கேளுங்கள். எவ்வளவுதான் அது தேவைப்பட்டாலும், அது தேவைதான் என்று ஒவ்வொருவரும் எவ்வளவுதான் ஒத்துக்கொண்டாலும், அது எந்த அளவுக்கு சத்தியமாயிருந்தாலும், ஒரு காரியம் மேற் கொண்டு கண்டுபிடிக்கப்படவேண்டும்; அதுதான் தேவனுடைய சித்தமா? இப்பொழுது தேவன் தம்முடைய இரகசியங்களை தம்முடைய இராஜாக்களுக்கு வெளிப்படுத்துவதாக வாக்களிக்க வேயில்லை, தம்முடைய ஜனத்திற்கும் வெளிப்படுத்துவதாக வாக்களிக்கவேயில்லை. 29இம்லாவின் குமாரனான மிகாயாவின் நாட்களில் நடந்தது போல - நம்முடைய பொருளை விட்டு விலகாமல், மற்றொரு காலத்தில் நடந்ததை விளக்கிக்காட்டி, நீங்கள் அது உண்மை , நிஜம் என்று உணர்வதன் மூலம் அதை தவற விட்டுவிடாதபடி செய்ய விரும்புகிறேன். மிகாயாவின் நாட்களில் நடந்தது... அவன் ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த ஏழை மனிதனாயிருந்தான். ஆனால் தேவனுக்குக் கீழ்பட்டிருந்ததான தேசமாகிய இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாபோ தீர்க்கதரிகளுக்கென்று ஒரு பிரத்தியேக மான பள்ளியை ஏற்படுத்திவைத்து, தெரிந்தெடுக்கப்பட்ட, கையினால் பொறுக்கி எடுக்கப்பட்ட நானூறு தீர்க்கதரிசிகளை தயார் செய்திருந்தான். அவர்கள் மகத்துவமான மனிதர்கள். அவர்கள் வெறும் கள்ளத் தீர்க்கதரிசிகள் அல்ல. அவர்கள் எபிரேயர்களாகிய தீர்க்கதரிசிகள். அவர்கள் உண்மையான மனிதர்கள், அவர்கள் தேவனோடு இம்மனிதர்கள் மூலமாகவே ஆலோசித்தார்கள். அவர்கள் தீர்க்கதரிசனமும் உரைத்தார்கள். ஆனால், பாருங்கள் உண்மையான பலப்பரீட்சை வந்தபோது, அவர்கள் ஒவ்வொரு வரும் தேவனுடைய வார்த்தையையும், சித்தத்தையும் விட்டு விலகினவர்களாயிருந்தார்கள். 30ஆகாப் ராஜாவை சந்திக்க யோசபாத் எருசலேமிலிருந்து வந்தான். அவர்கள் தங்கள் ராஜ வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு ஒலிமுகவாசலில் உட்கார்ந்தார்கள். அப்போது இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்தான். அப்போது முதலில் ஆகாப், ''கீலேயாத்திலுள்ள ராமோத் உண்மையில் நம்மைச் சேர்ந்ததாயிருக்கிறது'' என்றான். அது “கர்த்தர் உரைக்கிறதாவது'' ஆகும், யோசுவா அதை ஜனத்திற்கு பங்கிட்டு கொடுத்திருந்தான். ஆனால் பெலிஸ்தியர் அதை எடுத்துக்கொண்டிருந்தார்கள். ''நம்முடைய பிள்ளைகளுக்கு அப்பம் தேவையாயிருக்கிறது. அப்பம் தயாரிக்கப் போதுமான நிலம் நம்மிடம் இல்லை. நம்முடைய சத்துருக்களும், புறஜாதிகளுமான பெலிஸ்தியரோ யேகோவா தேவன் நமக்குக் கொடுத்த அதே நிலத்திலிருந்து தங்கள் பிள்ளைகளைப் போஷிக்கிறார்களே'' என்றான். அது மிகவும் நேர்மையான சொல்லாகும். மேலும் அவன் ”தேவனுடைய ஜனமாகிய நாங்களோ இங்கே எங்கள் பிள்ளைகளுடன் தேவை யுடன் உட்கார்ந்திருக்கிறோம்; ஆனால் எங்கள் சத்துருவோ, தேவன் எங்களை எகிப்திலிருந்து வரப்பண்ணி எங்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து தங்கள் பிள்ளைகளைப் போஷிக்கிறார்கள்'' என்றும் சொன்னான். அது ஒரு மதசாஸ்திர விற்பன்னனைப் போலிருக் கிறதல்லவா? ''தேவன் நமக்களித்த நம்முடைய நிலங்களை போய் எடுத்துக்கொள்வோமா?'' என்று சொன்னான். ''சரி, நான் உமக்கு உதவி செய்கிறேன்'' என்று யோசபாத் கூறினான். நாம் சகோதரர்கள். நீர் யூதாவிலிருக்கிறீர். நான் - நான் எருசலேமிலிருக்கிறேன். (அல்லது, அது மாறியிருந்ததா? நான் நம்புகிறேன்... இல்லை, அது சரி, நான் நினைக்கிறேன். யோச பாத்...) கர்த்தரை நேசிக்கும் ஒரு நல்ல மனிதனாக, ராஜாவாக, நீதியுள்ள ஒரு மனிதனாக இருந்தான். ஆகாபோ ஒரு வெது வெதுப் பான விசுவாசியாயிருந்தான். ஆகவே அவர்கள் தீர்க்கதரிசிகளை கூடிவரச் செய்தார்கள். ஏனென்றால் யோசபாத் “கேளும்; நாம் முதலில் கர்த்தரிடத்தில் விசாரித்து அறிவோம். அதைக்குறித்து நாம் அறிந்து கொள்ளவேண்டும்'' என்றான். (பாருங்கள் யோசபாத் செய்த இந்த காரியத்தைத் தாவீது செய்திருந்தால்...) ”நாம் இதைச் செய்ய வேண்டாமா?'' என்றான். ஆகாபும், தான் இஸ்ரவேலனானபடியினாலே தீவிரமாய், “நிச்சயமாக. நானூறு பேர்களை என்னிடம் வைத்திருக்கிறேன். அவர்கள் நம்மைப்போல எபிரேயர்கள்; எங்களுடைய ஸ்தாபனத் தைச் சார்ந்த எபிரேய தீர்க்கதரிசிகள். நான் அவர்களோடு ஆலோசிக்கிறேன், அவர்கள் தீர்க்கதரிசிகள்'' என்றான். 31இப்போது, இதைப்பாருங்கள்... 'அது என்னை இடற வைக்கிறது, சகோதரன் பிரான்ஹாமே. ஒரு தீர்க்கதரிசியா?'' என்று கூறுகிறீர்கள். ஆமாம்! எரேமியாவின் காலத்திலும் அனனியா என்றொரு தீர்க்கதரிசியிருந்தான். யூதர்கள் பாபிலோனிலே இரண்டு வருடமே சிறையிருப்பார்கள் என்று கூறினான். கர்த்தரோ எரேமியாவிடம் எழுபது வருடங்கள் சிறையிருப்பார்கள் என்று கூறியிருந்தார். கர்த்தர் தீர்க்கதரிசியின் கழுத்திலே ஒரு நுகத்தை பூட்டினார். இந்தத் தீர்க்கதரிசியோ அதை உடைத்துப்போட்டான். ஆனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவீர்களா? ஆமாம்! நீங்கள் வார்த்தையோடு தரித்திருக்கவேண்டும்! ஆகவே இந்த தீர்க்கதரிசிகள் வந்து, ''போம்; கர்த்தர் உம்மோடே இருக்கிறார்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஆகவே அவர்களில் ஒருவன்... அவன் பெயரை இப்போது மறந்து விட்டேன். அவர்களுடைய தலைவன், சிதேக்கியா, என்று நம்புகிறேன்-அவன் இரண்டு இருப்புக் கொம்புகளை உண்டாக்கி, ''கர்த்தர் உரைக்கிறதாவது, நீர் இவைகளால் (அந்த மனிதன் உண்மையானவனாகவே இருந்தான்) உம்முடைய சத்துருக்களை முட்டி, அவர்களை அவர்களுடைய தேசத்திற்குள் தள்ளி, தேவனுக் குரியதை எடுத்துக்கொள்வீர். அது உமக்குக் கொடுக்கப்பட்டிருக் கிறது'' என்றான். அவன் ஒரு மாய்மாலக்காரன் என்று நான் கருதவில்லை. அவன் ஒரு நல்ல மனிதன் என்று நம்புகிறேன். அந்தத் தீர்க்கதரிசிகள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான் என்று நம்புகிறேன். 32“தீர்க்கதரிசிகளா?'' என்று நீங்கள் கூறலாம். ஆம்! இயேசு கிறிஸ்துவைக் கொலை செய்ய ஒப்புதல் தெரிவித்த மனிதனே தீர்க்கதரிசனம் உரைத்தான். ஏனென்றால் அது அவனுடைய உத்தி யோகமாயிருந்தது. அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனா யிருந்தான். அவன் பிரதான ஆசாரியனானபடியினால் அவன் அந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தான். அந்த ஸ்தானத்தை வகித்தான். தேவ ஆவியானவர் அவனிடம் வந்தார். அதினால் அவன் இரட்சிக் கப்பட்டவனென்றோ, அதுபோலவோ பொருள்படாது. காய்பா தீர்க்கதரிசனம் உரைத்தான், அவனுடைய ஸ்தானம் அவ்வாறு செய்தது. ஆகவே இந்த தீர்க்கதரிசிகளும், தீர்க்கதரிசிகளின் ஸ்தானத்தை வகித்ததினால் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். தேவனு டைய ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார்-மனிதன் ஆவியின் வரங்களைப் பெற்றுக்கொள்வதுபோல. 33தொண்ணூற்றொன்பது சதவிகிதம் பெந்தெகொஸ்தேகாரர் களிடம் பேசுகிறேன் என்பதை உணர்கிறேன். ஆனால் மனிதன் ... அநேகமுறை, தேவன் மனிதருடன் இடைப்பட்டு, அவர்களுக்கு ஒரு வரத்தை அளிக்கும்போது, மக்கள் அந்த மனிதர்களை நெருக்கு கின்றார்கள். அவர்கள் தேவனுடைய சரியான அழைப்பைப் பெற்று அவரால் அனுப்பப்பட்டிராவிட்டால், மக்கள் அவர்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் அந்த மனிதனையோ அல்லது ஸ்திரீயையோ தேவனுடைய சித்தமில்லாத ஏதாவதொன்றை சொல்ல வைத்து விடுவார்கள். இங்குள்ள நமது அருமையான மேய்ப்பனை அந்த விஷயத்தில் நான் எவ்வாறு பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நாள் காலை சுமார் 3 மணிக்கு இங்குள்ள காடுகளில் இருக்கையில் “சகோதரன் நெவிலிடம் போய் சொல்'' என்று கூறினார். நான் உங்களிடம் வந்தேன், இல்லையா, சகோதரன் நெவில் அவர்களே? ஒவ்வொருவரும், “சகோதரன் நெவில் அவர்களே, என்னைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரையுங்கள். எனக்கு இதைக் கூறுங்கள், அதைக் கூறுங்கள்'' என்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள். பாருங்கள்? அப்போது அவர் உரைத்தும் சம்பவிக்காமல் போகும் காரியங்களை அவரை சொல்லவைத்துவிடுவீர்கள். கர்த்தர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைக் கண்டறிய காத்திருப்பவர்களே. பாருங்கள். 34ஆகவே இந்த மனிதர்கள் சுபாவ புலனுடன் இதைக் கண்ணோக்கினார்கள்: ''அது நம்மைச் சேர்ந்தது''. ஆனால் பாருங் கள், அவர்கள் தேவனுடைய வார்த்தையையும், சித்தத்தையும் கண்டுகொள்ளவில்லை. அப்போது மிகாயா வந்தான், அவனுக்கொரு தரிசனம் அளிக்கப்பட்டிருந்தது. அவன் முதலில் சோதித்துப் பார்த்தான். கவனிக்கிறீர்களா? ''பொறுத்திரு. இன்றிரவுவரை. நான் கண்டு பிடிக்கட்டும். ஒருவேளை, நாளை நான் உனக்கு பதிலளிக்கக்கூடும்''. மற்றத் தீர்க்கதரிசிகளுடன் ஒத்துப்போகத்தக்கதாக அவன் எடுத்தவுடனே “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறவில்லை. ”தேவன் சொல்வதையே நான் சொல்வேன்'' என்று சொன்னான். என்ன நடக்கும் என்பதை தேவன் அவனிடம் கூறினார் என்பதை மறுநாளில் பார்க்கிறோம். மேலும் அது மற்றவர்கள் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. அந்த முழு கூட்டம் கூறியதற் கும் மாறுபட்டதாயிருந்தது. அவர்களில் ஒருவன் கிட்ட வந்து, அப்படிக் கூறியதற்காக அவனை முகத்தில் அடித்தான். ஆனால் பாருங்கள், அவன் காத்திருந்தான். அவன் அப்படிச் செய்தபோது, அவன் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை, தன் தரிசனத்தை, எழுதப் பட்ட வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தான், அது வார்த்தை யோடு ஒத்திருந்தது. 35யாராவதொருவர் தங்கள் மக்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுப்பதற்கு வெளிப்படுத்தலைப் பெற்றிருப்பதாக கூறினால் அது வார்த்தைக்கு மாறானதாகும். மற்றவர்களில் ஒருவரும் ஒருக்காலும் அப்படிச் செய்யவில்லை. “ஓ நாங்கள் நிற்கப் போகிறோம்...'' என்றும் இது, அது, மற்றது என்றும் இவ்வாறெல்லாம் அவர்கள் சொல்லும் போது அது வார்த்தைக்கு மாறுபட்டதாகும். சர்ப்பத்தின் வித்தைக் குறித்த உபதேசத்தை அவர்கள் விசுவாசிப்பதில்லை என்று அவர்கள் சொல்லும்போது, அது வார்த்தைக்கு எதிரிடையானதாகும். அது வார்த்தையோடு ஒத்திருக்கவேண்டும், அந்தக் காலத்திற்குரியதா யிருக்கவேண்டும். 36இப்போது, தாவீது மட்டும் அதைப்போல செய்திருப்பானா னால்! உடன்படிக்கைப்பெட்டி வரவேண்டும். ஆனால் அந்த சமயத்திலல்ல. அதற்கு அப்போது இடம் இல்லாதிருந்தது. கவனியுங்கள் இப்போது, அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரப் போனபோது, எல்லாப் பிரமுகர் களும், “தாவீது செய்யவேண்டிய காரியம் அதுவே. தேவனுக்கு மகிமை! நமக்கொரு எழுப்புதல் தேவை'' என்றார்கள். அதுதான் இன்றைக்குரிய உண்மையான பெந்தேகொஸ்தே, பாப்டிஸ்டு, இன்னார்-இன்னாரும் நீர் ஒழுங்கு செய்கிற கூட்டத்திலிருப்பார்கள். ஏன், தாவீது, அவர்கள் கூட அதுதான் செய்ய வேண்டிய காரியம் என்கிறார்கள். இம் முழுதேசமும் உம்மோடிருக்கிறது.'' அதுதான் இன்றைக்குரிய சமாசாரமாக இருக்கிறது! எனக்கோ தேசம் வேண்டாம். வேறு யாரும்கூட நிற்காவிட்டாலும் எனக்கு தேவன் வேண்டும். தாவீதிடம் எல்லா இராணுவத் தலைவர்களும் இருந்தனர். எல்லா இராணுவத்தின் ஒத்துழைப்பும் அவனுக்கிருந்தது. எல்லா ஸ்தாபனங்களுடைய, எல்லா மத சாஸ்திர விற்பன்னர்களுடைய, எல்லாருடைய ஒத்துழைப்பும் அவனுக்கிருந்தது. ஒவ்வொரு வரும் அவனுடன் ஒத்திருந்தனர். அப்படித்தான் ஆகாபும் வேதத் தில் குறிக்கப்பட்ட மற்றவர்களும் இருந்தனர். ஆனால் தேவன் அவன் பட்சத்தில் இல்லை. ஏனென்றால் அவன் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பேயிருந்தான். இது நமக்குப் புரிகிறதென்று நம்புகிறேன். 37கவனியுங்கள், அவர்கள் செய்யக்கூடிய மத சம்பந்தமான காரியம் ஒவ்வொன்றையும் செய்திருந்தார்கள். ''பெரிய எழுப் புதல். உடன்படிக்கைப் பெட்டி திரும்பக் கொண்டு வரப்படப் போகிறது. நாம் ஒரு எழுப்புதல் பெறப்போகிறோம். நாம் இதைச் செய்யப்போகிறோம்'' என்றெல்லாம் விளம்பரங்களையும் மற்றெல்லாவற்றையும் போட்டிருக்கக்கூடும். கவனியுங்கள், அவன் பாடகர்களை அனுப்பினான்; அவன் சுரமண்டலத்தோடும் பூரிகைகளோடும் ஜனங்களை அனுப்பினான். அவர்கள் ஒவ்வொரு மத சம்பந்தமான காரியத்தையும் எப்படி செய்யவேண்டுமென்று தங்களுக்குத் தெரிந்த விதத்தில் செய்தார் கள். ஆனாலும் தேவன் அதில் இருக்கவில்லை. அது ஏறக்குறைய மறுபடியும் நிகழுவதைக் காண்கிறோம், இல்லையா? அவர்கள் எல்லாப் பாடகர்களையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் சுரமண்டலம் வாசிப்பவர்களையும், பூரிகைகளை ஊதுபவர் களையும், பாடக்கூடிய பெண்கள், ஆண்கள் எல்லாரையும் அழைத்துச் சென்றனர். அவர்களெல்லாரையும் அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் தெய்வ பக்திக்குரிய ஒவ்வொரு காரியத்தை யும் செய்தனர். இதைச் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் நான் சொல்லித்தான் தீரவேண்டும். பெந்தெகொஸ்தே முதலிய எல்லா ஸ்தாபனங்களும் இன்று அவ்வாறேயிருக்கின்றன. பாடுவது, ஆரவாரிப்பது போன்ற ஒவ்வொரு மத சம்பந்தமான காரியத்தையும் அவர்கள் செய்கின்றனர். கவனியுங்கள், தாவீது தன் முழு பலத்தோடும் ஆரவாரித் தான். அவன் கூச்சலிட்டான், குதித்தான், இருக்கக்கூடிய அத்தனை பயபக்தியான காரியங்களையும் அவன் செய்தான். அப்படியிருந்தும் தேவன் அதில் இல்லை. அவனுடைய உள்நோக்கம், குறிக்கோள் எல்லாம் சரியாகவேயிருந்தது. ஆனால் அதைச் செய்ய தவறான வழியில் சென்றான், பாருங்கள்? மத சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவன் செய்திருந்தான். ஆரவாரித்தான், பாடினான், விசேஷித்தப் பாடகர்களை வைத்திருந்தான். விசேஷித்த ஆரவாரிப் பவர்கள், மற்றுமுள்ள எல்லாமும் அவன் வைத்திருந்தான். அவர்கள் ஆவியில் நடனமாடினார்கள். பயபக்தியான எல்லா காரியங்களையும் அவர்கள் செய்திருந்தனர். 38அது நம்முடைய காலத்தில் நிகழும் தீவிர மதப்போராட்டங் களைப் போலிருந்தது. அவர்கள் உலகத்தை கிறிஸ்துவுக்கு பெற்றுத்தர விரும்பினார்கள். அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. பெரிய மகத்தான எழுப்புதல்கள், பெரிய காரியங்கள் நிகழ்வதுஅந்த நாள் கடந்துவிட்டது என்பதை மட்டும் அவர்கள் உணர்ந் தால்! அவளுக்கு தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்புக்கென்று குறிக்கப்பட்டாயிற்று. ஆனால் அவர்களோ மதப்போராட்டங்களையும், ஸ்தாபனங்களையும், எல்லாவற்றையும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் விளைவுகளோ தாவீதின் காலத்தில் விளைந்தது போலவே இருக்கிறது. அது பயனற்றுப் போயிற்று. நாம் போய் எழுப்புதல்களை உண்டாக்குகிறோம். இன்றுள்ள நம்முடைய மகத்தான சுவிசேஷர்களில் சிலர் ஆறு வாரகாலத்தில் தாங்கள் முப்பதினாயிரம் பேரை மனம் மாறச் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு வருடம் கழித்துப் போகும்போது அவர்களால் முப்பதுபேரைக் காண முடிவதில்லை. அங்கே ஏதோ தவறிருக் கிறது. அது என்ன? தாவீது செய்த அதே காரியம்தான் அது. பெரிய பிரமுகர்கள், பெரிய மனிதர்கள், பெரிய போதகர்கள், இன்னும் மகத்தான பள்ளிகள், பெரிய அதிகாரம். ஆனாலும் தேவனுடைய வார்த்தையை நேரிடையாகப் பார்த்து, என்ன காலம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணாமல், அவர்கள் பழைய ஸ்தாபனங்களைக் கலந்தாலோசிக்கிறார்கள். வருஷத்தில் சில குறிப்பிட்ட காலங்களைத் தவிர, மற்ற காலங்களில் சில உணவுப் பொருள்களை உங்களால் உற்பத்தி செய்யமுடியாது. 39இப்போது, என்ன நடந்ததென்று பார்ப்போம். அவர் களுடைய மத சம்பந்தமான மனவெழுச்சியும் காரியங்களும் மகத்தானவைகளாயிருந்தன. அவர்களுடைய நோக்கம் மகத்தான தாயிருந்தது. அவர்களுடைய மதப்போராட்டம் மகத்தானதா யிருந்தது. அவர்கள் பாடுவது மகத்தானதாயிருந்தது, அவர்கள் ஆடுவது மகத்தானதாயிருந்தது, அவர்கள் ஆரவாரிப்பதும் மகத்தானதாயிருந்தது, அவர்களுடைய இசை மகத்தானதாயிருந் தது, மேலும் உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களிடமிருந்தது, தேவனில்லாமல் உடன்படிக்கைப் பெட்டியால் பிரயோஜனம் என்ன? அது ஒரு வெறும் மரப்பெட்டி, அதனுள் இரண்டு கற்பலகைகள் இருந்தன- அது இராப்போஜனம் எடுப்பது, ஞானஸ்நானம் பெறுவது போன்றது. நீ முதலில் மனந்திரும்பியிரா விட்டால், நீ ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதால் என்ன பிரயோஜனம்? தேவனுடைய வார்த்தைக்கேற்ற ஜீவியம் ஜீவிக்காமல், தேவனுடைய மற்றெல்லா வார்த்தையையும் விசுவாசியாமல், இராப்போஜனம் எடுத்துக்கொண்டு ஒரு மாய்மாலக் காரனாவதால் என்ன பிரயோஜனம்? அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை எடுத்துக் கொள்ளாமல் போவது, அங்கே ஏதோ தவறிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 40இப்பெழுது இதெல்லாம் நடக்கும்போது... தேவனையும், அவருடைய காலத்தையும் அவருடைய நேரத்தையும் குறித்துக் கருதாமல் ஜனங்களின் அபிப்பிராயத்தை மட்டும் கருதுவதால் என்ன நேரிடுகிறது என்று பார்ப்போம். அநேகர் என்னிடம், 'நல்லது நீங்கள் ஏன் இவ்விதம் வந்து ஒரு கூட்டத்தை நடத்தக்கூடாது? நாங்கள் உம்மைக் கூப்பிடுகிறோம். இதில் கையொப்பமிடுங்கள். அதில், மற்றதில்“ என்று சொல்லிய துண்டு. பொறுங்கள் உங்களுக்கு அது விருப்ப மாயிருக்கலாம். ஆனால் தேவன் அதைக்குறித்து என்ன சொல்லு கிறார்? அநேக ஜனங்கள் என்னிடம் கூறியுள்ளனர்... நான் ஒரு அழைப்பைப் பெற்றிருந்தேன். பேட்டிகள், பிரத்தியேகப் பேட்டிகள், மற்றக் காரியங்கள் எனக்கிருந்ததுண்டு. ஒரு வருட மாக காத்திருந்தேன். பொறுத்திருங்கள்! என்ன சொல்வதென்று தேவன் எனக்கு சொல்லும்வரை எதைச் சொல்வதென்று எனக்கு எப்படித் தெரியும்? பாருங்கள்? காத்திருக்கவேண்டியிருக்கிறது. ''அதை எழுதித்தாருங்கள், அவர் என்ன சொல்வார் என்று பார்க்கிறேன்'' என்று நான் சொன்னதின் காரணம் அதுதான். பாருங்கள்? காத்திருக்கவேண்டும். ''கர்த்தருக்குக் காத்திருப்பவர் களோ புதுப்பெலனடைவார்கள்.'' அது சரிதானா? 41கவனியுங்கள், அவர்கள் அந்த நாளின் மதக் குருவை, மத சாஸ்திர விற்பன்னர்களை, ஸ்தாபனங்களை கலந்தாலோசித்தார்கள். அப்படிச் செய்ததன் மூலம் - மதக் குருக்களை கலந்தாலோசிப்பது, சபையாரைக் கலந்தாலோசிப்பது, ஜனங்களைக் கலந்தாலோசிப்பது- அப்படிச் செய்ததன் மூலம் அவர்கள் அதைத் தவறான வழியில் செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள். கவனியுங்கள்! உடன்படிக்கைப் பெட்டி தேவனுடைய வார்த்தையாயிருந்தது. அது சரியென்று நாமறிவோம். ஏனென்றால் உடன்படிக்கைப் பெட்டி கிறிஸ்துவே-கிறிஸ்துவே வார்த்தையா யிருக்கிறார். பாருங்கள்? உடன்படிக்கைப் பெட்டி அல்லது வார்த்தை அதன் முந்திய, குறிக்கப்பட்ட, ஆரம்பத்தில் குறிக்கப் பட்ட நிலையில் வைக்கப்படவில்லை. ஓ சபையே, இதைப் புரிந்து கொள்ளத் தவறிவிடாதே! ஒவ்வொன்றும் முழுவதும் பரி பூரணமாக இருந்தது, ஒரு பெரிய எழுப்புதல் வருவதுபோல. ஒவ்வொன்றும் பார்க்க நன்றாயிருந்தது. ஆனால் அவர்கள் சரியான நபரை அதைக் குறித்து கலந்தாலோசிக்கத் தவறியதால்... அவர்கள் மத குருவை கலந்தாலோசித்தார்கள். பிரமுகர்களை கலந்தாலோ சித்தார்கள். மத சாஸ்திர விற்பன்னர்களை கலந்தாலோசித்தார்கள், பாடகர்களை கலந்தாலோசித்தர்கள். எல்லாம் ஒரே சிந்தையோடு, ஒருமித்திருந்தார்கள். ஒரு மகத்தான இராணுவ அமைப்பிருந்தது. மேலும் தேசத்தின் எல்லா சக்திகளும் ஒருமித்திருந்தன. ஒரு பெரிய கூட்டத்திற்காக எல்லாம் ஒன்றோடொன்று இணக்கமாய் இருந்தது. ஆனாலும் அவர்கள் தேவனை கலந்தாலோசிக்கவில்லை. ஆகாபும் அப்படியேதான் செய்தான்; மற்றவர்களும் அதே விதமாகத்தான் செய்தனர். என்ன ஒரு தருணம்! 42இப்போது, இதைத் தவறவிடவேண்டாம்! அவர்கள் தேவனைக் கலந்தாலோசிக்காதபடியால் அதைக் கொண்டுவர முடியாமற்போயிற்று. அப்படிச் செய்ததன் மூலம் (கவனியுங்கள்), தேவன் அனுப்பியிருந்த அவர்களுடைய அந்த மணி நேர செய்தியாளனாகிய நாத்தானை கொஞ்சமும் கருதாமல், மத குருவிடம் போனதன் மூலம், மத சாஸ்திர விற்பன்னர்களிடம் போனதன் மூலம், இராணுவத்தினரிடம் போனதன் மூலம், அவர்கள் அதைத் தவறாக செய்தார்கள். அவர்கள் போய் தேவனுடைய பெட்டியை எடுத்து அதை ஒரு புது இரதத்தின் மேல் ஏற்றினார்கள். ஒரு புதிய இரதத்தின் மேல் ஏற்றினார்கள் (அல்லது ஒரு புதிய ஸ்தாபனம் துவங்கப்படப்போகிறது)தேவனால் அளிக்கப்பட்ட, குறிக்கப்பட்ட விதத்தில் அது சுமக்கப் படவில்லை. அது லேவியர்களின் தோள்களின் மேல் சுமக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆனால் பாருங்கள், நீங்கள் தவறாக ஆரம்பிக்கும்போது, நீங்கள் தவறாகவே போய்க்கொண்டே யிருப்பீர்கள். 43ஒரு துப்பாக்கிக் குண்டானது ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்பட வேண்டுமானால், நீங்கள் துப்பாக்கியை சுடும் நேரத்தில் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் ஒரு பாகம் நகர்த்தி விட்டாலும், அது நூறு கெஜ தூரத்தில் நான்கு அல்லது ஐந்து அங்குலம் குறி தவறியிருக்கும். நீங்கள் தவறாக ஆரம்பிக்கிறீர்கள். ஓ, தேவனே! இக்காலத்திற்குரிய மகத்தான மதப்போராட்டங்க ளென்று பெயர் பெற்றிருக்கும் இவைகள் தவறாக துவக்கியிருக் கின்றன என்பதை அறிய உதவும். அதைக் குறித்து தேவன் கலந்தாலோசிக்கப்படவில்லை. குருமார்களும், மத சம்பந்தமானவர்களும் கலந்தாலோசிக்கப்படு கிறார்கள். ஸ்தாபனங்கள் கலந்தாலோசிக்கப்படுகின்றன. “நல்லது, நீங்கள் இவை... இவைகளை வைத்திருப்பார்களா? நாம் ஒவ்வொரு வரையும் கூடி வரச்செய்தால்...'' ஒவ்வொருவரையும் கூட்டிச் சேர்க்காதீர்கள்! அதைக் குறித்த தேவனுடைய வார்த்தையை பெற்றுக்கொள்ளுங்கள். 44அவர்கள் அதைச் செய்யும்போது என்ன செய்கிறார்களென்று பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்திற்கும் புறம்பே உள்ள, அதே பழைய மதக் கிரமத்தின் படியே செல்கிறார்கள். பழைய காலங்களுக்குரிய அந்த பழைய, உலர்ந்து போன காரியங்கள், அநேக வருடங்களுக்கு முன்பே மரித்துப்போயின. கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் அது சாரமற்று உலர்ந்து போயிருந்தது. அவர்கள் அதை அறியாதிருந்தார்கள். அவர், “நீங்கள் மோசேயை அறிந்திருப்பீர்களானால் என்னையும் அறிந் திருப்பீர்கள். ஏனென்றால் நான் வருகிறேன் என்பதாக மோசே கூறினான்'' என்றார். அவர்களோ, ''எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தார்கள்'' என்றார்கள். அவரோ, 'அவர்களெல்லாரும் மரித்தார்கள். குருடர்கள்'' என்று பரிசேயர்களையும் மதத்தலைவர்களையும் அழைத்தார். 'நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால், உங்கள் பாவங்களிலே நீங்கள் சாவீர்கள்.'' ஆனால் அவர்களோ விசுவாசிக்கவில்லை. அவர்கள் தங்கள் வழிகளிலே அவ்வளவாய் நாட்டப்பட்டிருந் தார்கள். அவர்களுக்கு தங்கள் வழிதான் வேண்டியிருந்தது. 45தாவீதும் அதே முறையில்தான் செய்தான். அவன் அதைத் தன் வழியிலேயே செய்தான். ''என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? நாம் முன்னேருகிறோம்'' என்றான். அவன் ஒரு வெளிப்படுத்தலைப் பெற்றிருந்தான். “நாம் முன்னேறிச் செல் கிறோம். ஆகவே அதை ஒரு புதிய வழியில் செய்வோம். அற்புதங்கள் நடத்தப்படும் நாட்களெல்லாம் கடந்துபோய்விட்டன. ஆகவே நாம் நமக்கு மற்றொரு சங்கத்தை உண்டாக்கிக் கொள்வோம். நாம் ஒரு புதிய இரதத்தைக் கட்டுவோம்; கட்டி துவங்கப்பட்டிருக்கும் இந்த புதிய காரியத்தை அவர்களுக்குக் காட்டுவோம்.'' என்ன ஒரு பொய்யான தீர்க்கதரிசனம்! தேவன் செய்யவேண்டுமென்று சொன்ன வழிக்கே நீங்கள் திரும்பிப்போக வேண்டும். அவர்கள் அதை லேவியரின் தோள்களின் மீது வைப்பார்கள். அதாவது அவர்கள் இருதயத்தின் மீது சுமப்பார்கள். உடன் படிக்கைப் பெட்டி, வார்த்தையானது, புதிய ஸ்தலத்தின் மீதல்ல, ஏதோ ஒரு மனிதனின் தத்துவங்களின் மீதல்ல, இருதயத்தில் சுமக்கப்படவேண்டும். தேவனுடைய வார்த்தையானது ஸ்தா பனங்களினால் கையாளப்படுவதற்கல்ல; அது, தேவன் உள்ளே வந்து தம்மை வெளிப்படுத்தத்தக்கதாக மனிதனுடைய இருதயத் தினால் உணரப்படவேண்டும். மேலும் அவர் வார்த்தையின்படி தம்மை வெளிப்படுத்தினால், அது தேவன். இல்லாவிட்டால், அது தேவனல்ல, பிறகு அந்தக் காலத்திற்குரிய வார்த்தையாகும். “நாங்கள் இதைச் செய்யக்கூடாது. அதைச் செய்யக்கூடாது என்று எங்களுக்குச் சொன்னவர் யார்'' மோசே எங்களுக்கு இந்த கட்டளைகளை அளித்தான் என்று ஒரு பரிசேயன் கேட்கக் கூடும். ஆனால் மோசேயும் கூட கூறினான்... சாத்தான் கூறினான், ''ஏன், அவர் தம்முடைய... என்பதாய் எழுதியிருக்கிறது.'' இயேசுவும் “எழுதியிருக்கிறதே'' என்றார். அந்த காலம், அந்த நேரம். “நீங்கள் மோசேயை அறிந்திருந் தீர்களானால்... உங்களைக் குற்றஞ்சாட்ட ஒருவன் உண்டு. மோசே, நீங்கள் மோசேயை அறிந்ததீர்களானால் என்னையும் அறிந்திருப்பீர்கள். அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே.'' 'உன் தேவனாகிய கர்த்தர் உன் சகோதரருக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். அவருக்கு செவி கொடுப்பீர்களாக.'' என்றார். அவர்கள் மோசேயை அறிந்திருந்தார்களானால் அவரை யும் அறிந்திருப்பார்கள். 46இப்போது கூர்ந்து கவனியுங்கள். இதைத் தவறவிட்டுவிட வேண்டாம். பாருங்கள். முதலாவது காரியம், வர இருந்த அந்த மகத்தான கூட்டத்திற்காக அவர்கள் மத குருவை கலந்தாலோசித்த போது, பிரமுகர்களை கலந்தாலோசித்தபோது, இராணுவத்தைக் கலந்தாலோசித்தபோது, எல்லா சபையையும் கலந்தாலோசித்த போது அக்கம் பக்கத்தாரையெல்லாம் கூட்டிச் சேர்த்தபோது, அதை சரியாகச் செய்யத் தவறினார்கள். அவர்கள் தேவனைக் கலந்தாலோசிக்கவில்லை. அப்படிச் செய்ததினால் அது எந்த நேரம்-என்ன காலம் என்பதைக் கண்டுகொள்ளாமற்போனார்கள். ஓ, சகோதரனே, கவனி! நாம் எந்த நேரத்தில் வசிக்கிறோம்? இது எந்தக் காலம்? எந்த மணி நேரத்தில் நாம் வசிக்கிறோம்? அவர்கள் பேசிக்கொள்ளுகிற இந்தக் காரியங்களுக்கு இது நேரமல்ல. அது கடந்துவிட்டது. நியாயத்தீர்ப்பு இப்போது இங்கே யிருக்கிறது. அது நிகழ ஆரம்பிப்பதை நீ பார்க்கலாம். மலையுச்சி யின் மேலிருந்த கற்பாறை நினைவிருக்கிறதா? நியாயத்தீர்ப்பின் நேரம் மணவாட்டியைக் குறித்த வெளிப்பாடு அல்லது தரிசனம் நினைவிருக்கிறதா? அவள் (சரியான) நடை தவறாமல் போகும்படி மட்டும் பார்த்துக்கொள். அவள் நடை தவறிப்போக விட்டு விடாதே. 47கவனி. ஆசாரியர்களின் தோள்களின் மீது. தாவீதிற்கும், எல்லா ஆசாரியர்களுக்கும் அது தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அது என்ன? ஆசாரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். வேதபார கர்களும், மத சாஸ்திர விற்பன்னர்களும் அறிந்திருக்கவேண்டும், ஏனென்றால் அதை செய்ய வேண்டாம் என்று வார்த்தை கூறியது. ஆகவே இன்றைக்கு 'ஓ, இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரல்ல. அது பேச்சு சமிக்ஞையின்றி மனதினால் கருத்தறிவித்தல்; அது இது, அது, மற்றது. ஓ, அது கடந்த நாட்களுக்குரியது'' என்றெல்லாம் அவர்கள் சொல்ல விரும்பும்போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை அவர்கள் காணத் தவறுகிறார்கள். “ஓ, நல்லது. ஒரு நிமிடம் பொறுங்கள், ஆசாரியர்களின் தோள்களின் மீதா? அது மோசே அப்பொழுது இருந்தபோது கைக்கொண்ட ஒன்றாகும். இன்றைக்கு நாம் அதை ஒரு புதிய இரதத்தில் வைப்போம். அதைக் குறித்த ஒரு புதிய வெளிப்பாடு எனக்கு கிடைத்திருக்கிறது'' என்று தாவீது கூறினான். “ஆமென், தாவீது'' என்றார் ஆசாரியர். பாருங்கள்?' 48எல்லா ஸ்தாபனங்களையும் ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்ட அவர்களுடைய புதிய உலக சபை ஆலோசனை சங்கத்தால் வசீகரிக்கப்பட்டவர்களாய் இந்த, இந்த வழியிலே, அந்த வழியிலே செய்ய விரும்பினர். அதுதான் ஆசாரியர்களை தள்ளாட வைத்தது. அவர்கள் சரியான நபரை கலந்தாலோசிக்கவேயில்லை. அவர்கள் அதை சரியாக செய்யவில்லை. அதனால்தான், அவர்கள் ஆபத்தில் சிக்குண்டனர். ஆம்! இன்றைக்கு அநேக காரியங்களில்... அன்றிரவு சிக்காகோ நகரில் ஒரு மத சம்பந்தமான கூட்டத்தின் முன்பு பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு மகத்தான போதகர் நின்று... நான் பூரண சுவிசேஷ வர்த்தகர்களுடன் அக்கூட்டத்தில் பேசுவதாக யிருந்தது. ஆனால் அந்நேரத்தில் நான் ஆப்பிரிக்காவில் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் அக்கூட்டம் துவங்குவதற்கு முந்தின நாள் திரும்பி வந்துவிட்டேன். அவர்கள் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு அறிவாளியை தெரிந்தெடுத்திருந் தார்கள். அவர் எழுந்து நின்று: இப்படி ஸ்தாபனங்கள் ஒருங் கிணைவது தேவனால் வருகிற காரியம் என்று அவர்களிடம் கூறினார். அவர்களெல்லாரும் திரும்பி வருவதாக கூறினார். கத்தோலிக்க சபைகூட தன்னுடைய மூல நிலைக்கு வரப்போகிறது என்றும் அதற்கு அத்தாட்சியாக எல்லாரும் பாஷைகளில் பேசுவார்கள் என்றெல்லாம் கூறினார். அது சாத்தானுடைய வலை என்றறியா திருந்தார்! நான் அறிந்திராத ஒரு மனிதர்.... சில சமயம் நாம் விதை விதைக்கிறோம். என்ன நடக்கப்போகிறதென்று அறியாதிருக் கிறோம். அந்த மகத்தான பேச்சாளர் அமர்ந்தவுடன் அந்த பூரண சுவிசேஷ வர்த்தகர்களின் சங்கத் தலைவர், ''நம்மிடையே சொற்பொழிவாற்றுபவர்களுக்கு விரோதமாக பேசுவது எனக்கு வழக்கமல்ல. ஆனால் சகோதரன் பிரான்ஹாம் அப்படி நடக்கும் என்று கூறவில்லை. அது மிருகத்தின் முத்திரைக்கு நேராக நடத்தும் என்று அவர் கூறினார்'' என்றார். அதற்கு அந்தப் பேச்சாளர், ''சகோதரன் பிரான்ஹாம் தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாதிருக்கிறார்'' என்றார். சங்கத் தலைவரோ, 'அவர் அறிவார் என்று நம்புகிறோம்'' என்றார். 49“சிக்காகோவிலே நான் வந்து அதைக் குறித்த என்னுடைய கருத்தைக் கூறவேண்டுமென்று எத்தனை பேர் இங்கு விரும்பு கிறீர்கள்'' என்று கேட்டார்கள். அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் பண்ண ஆரம்பித்தனர். பாருங்கள், விதையை நட்டுக் கொண்டி ருக்கிறோம். என்ன நேரிடப் போகிறதென்பதை நாமறியோம். விதைகளை மட்டும் போட்டுக்கொண்டே வருவோம். அந்த மணி நேரம் வரும்போது அவைகளில் சில... தோமாவைப் போல, அவன்தான் கடைசியில் கர்த்தரை கண்டது; ஆனால் அவரை விசுவாசிக்க அவன் அவரைக் காண வேண்டியிருந்தது. பாருங்கள். அவர்கள் அது நிகழ்வதைக் காணும்போது, “ஓ, தோமாவே உள்ளே வா'', ஆனால் அவன் சற்று தாமதமாகிவிட்டிருந்தான். இப்போது, முன்னுரைக்கப்பட்டு ''கர்த்தர் உரைக் கிறதாவது'' என்று சொன்ன காரியங்கள் நிகழ்வதை அவர்கள் காணும்போது, ''உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங் கொடுங்கள்'' என்று அவர்கள் கூறுகிறார்கள். பாருங்கள்? 50ஆனால் இப்போது, செல்வாக்கை கவனியுங்கள். சில சமயங்களில் பெரிய மனிதர்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவதை நீங்கள் கேட்கலாம். பெரிய இன்னார் - இன்னார் மற்றும் மகத்தான இன்னார் - இன்னார், நம்முடைய பெரியவர்... அதை ஒருபோதும் செய்ய வேண்டாம். நம்மில் மகத்தானவர் ஒருவரும் கிடையாது. மகத்தானவர் ஒரே ஒருவர் தான் உண்டு, அவர் தேவன். நாம் சகோதரர்களும் சகோதரிகளு மாயிருக்கிறோம். ஐந்து பேர் கொண்ட சபையின் மேய்ப்பனாக நீங்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை; அது உங்களை சிறியவராக்குவதில்லை. அது உங்களை ஒரு சகோதரனாக்குகிறது. (பாருங்கள்?) நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையா யிருப்பீர்களானால். என்ன எப்படி என்பதைக் குறித்து கவலை யில்லை. நீங்கள் குறைவாகப் பெற்றுக் கொள்வதில்லை. தேவனுக்கு சிறு பிள்ளைகளென்றும் பெரிய பிள்ளைகளென்றும் இல்லை. அவருக்கு பிள்ளைகள் மட்டும் உண்டு; அவர்களனைவரும் ஒன்றாகவேயிருக்கிறார்கள். கவனியுங்கள், தேவன்தாமே நம்மில் ஒருவராகத்தக்கதாக மகிமையின் தந்தம் மாளிகையிலிருந்து இறங்கி வந்தார். இப்போது யார் பெரியவர்? ஒரு ஆசாரியனின் ரூபத்தை எடுக்க அவர் இங்கு இறங்கி வரவில்லை. ஆனால் ஒரு வேலையாளைப் போல ரூபமெடுத்து தாம் உண்டாக்கின களிமண்ணைக்கழுவ, தம்முடைய அப்போஸ்தலர்களின் கால்களைக் கழுவ... இப்போது யார் பெரியவர்? 51ஆனால் இந்த மனிதர்களோ வசீகரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. ஏதோ புதுமையான தொன்று நிகழப்போகிறதென்று அவர்கள் நினைத்தனர். தேவன் உரைக்காத ஏதோ ஒன்று நிகழப்போவதாக அவர்கள் எண்ணினர். அவர்கள் அதைத் தவறான முறையில் அணுகினார்கள். அநேக நாட்களுக்கு முன்பு அவர்கள் ஸ்தாபனங்களை ஆரம்பித்தபோது கொண்டிருந்த உற்சாகம் அதுதான். ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒரு தெய்வீக சுகமளிப்பவரை பெற்றிருக்கவேண்டும்; ஒவ்வொரு ஸ்தாபனமும் இது, அல்லது அது, அல்லது மற்றதை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒரு சிறிய தாவீதை பெற்றிருக்கவேண்டியிருந்தது. ஒவ்வொன்றும் இதை அல்லது அதை, அல்லது மற்றதை பெற்றிருக்கவேண்டியிருந்தது. என்ன நடந்தது பார்த்தீர்களா? அது இங்கே செய்ததையே செய்தது. அதே காரியம் (செல்வாக்கு) வசீகரம். அந்தக் காலத்திற்குரிய வார்த்தை, அவர்கள் வாழ்ந்திருந்த காலம் இவைகள் அசட்டை செய்யப்பட்டன. கவனியுங்கள், இவைகளைச் செய்ய தேவனால் முந்தி ஏற்படுத்தப்பட்ட வழி, பெட்டியை லேவியர் தங்கள் தோள்களின் மீது சுமப்பதேயாகும். அதற்குப் புறம்பான எந்தக் காரியமும் மாறுபட்டதாயிருந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதையே அவர் குறித்தார். தேவன் மாறமுடியாது. அவருடைய வார்த்தையிலே தரித்து நிற்க ஏற்ற காரணம் அதுதான். நாளாகமம் 15:15 ஐ எழுதி வைத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் அதைக் குறித்துக் கொள்ளலாம். 52இப்போது கவனியுங்கள், இதை உங்கள் சிந்தையிலே குறித்துக் கொள்ளுங் கள். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய, தேவனுக்காக எதையாகிலும் சரியாக செய்ய, ஒரு சேவையை சரிவரச் செய்ய, தேவனுக்கு சரியான முறையில் சேவை செய்ய, ஐந்து கட்டாய தேவைகள் உண்டு. இப்போது, தாவீது தேவனுக்கு ஒரு சேவையைச் செய்தான். அவனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவன் செய்தான். ஆனால் தேவனை மட்டும் அவன் விட்டிருந்தான். பாருங்கள், அவன் சரியானதொரு காரியத்தை, ஜனங்களுக்கு நன்மையான ஒரு காரியத்தை, சபைக்கு நன்மையான ஒரு காரியத்தைச் செய்தான். ஆனால் ஐந்து கட்டாய தேவைகள் உண்டு; நீங்கள் இவைகளை ஞாபகத்தில் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தேவனுக்குச் சேவை செய்வதில் எவ்வளவுதான் உண்மையும் உத்தமமுமாயிருந்தாலும், இந்த ஐந்து கட்டாய தேவைகளும் இருக்கவேண்டும். அது, முதலாவது, அதைச் செய்வதற்கேற்ற தேவனுடைய காலமாயிருக்கவேண்டும். மோசே ஜனங்களிடம், ''நாம் ஒரு பேழையைச் செய்து நோவா செய்ததுபோல இந்த நைல் நதியின் மீது மிதக்கவிடலாம்'' என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? நோவாவுடைய காலம் பேழை செய்வதற்கேற்ற வேளையாயிருந்தது, மோசேயுடைய காலமல்ல. இயேசு வந்து, “நாம் செய்ய வேண்டிய காரியத்தைக் கூறுகிறேன். மோசேயைப்போல, நாம் மலைமீது சென்று ஒரு புதிய நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொள்வோம்” என்று கூறினால் எப்படியிருக்கும்? பாருங்கள்? இல்லை, அவரேதான் நியாயப் பிரமாணம். பாருங்கள்? நீங்கள் அவருடைய காலத்தில் இருக்க வேண்டும். அது அவருடைய ஏற்ற வேளையிலிருக்க வேண்டும். நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா? அவருடைய காலத்திலிருக்கவேண்டும். அது அவர் குறித்த காலமும் வேளையுமாயிருக்கவேண்டும். மேலும் அது அவராலே உரைக்கப்பட்டிருந்த அவருடைய வார்த்தையின்படி இருக்க வேண்டும். கட்டாயமாக..... 53இது எவ்வளவு நன்றாக அமைய வேண்டும், அல்லது அது நன்றாக அமைய வேண்டும் என்பதைப்பற்றி எனக்குக்கவலை கிடையாது. அது அவருடைய வார்த்தையின்படி, அவருடைய காலத்தில், அவருக்கேற்ற வேளையில் அமையவேண்டும். அதைச் செய்வதற்கென்று அவர் தெரிந்தெடுத்த மனிதனின் ஆலோசனை யின்படி அது நடக்கவேண்டும். எத்தனைதான் பிரமுகர்கள் இருந்தாலும் கவலையில்லை. அங்கிருந்த பிரமுகர்களில் ஒவ்வொருவருக்கும் சமமான தாவீது ராஜா அங்கிருந்தான். அவன் தேசத்தின் மீது ராஜாவாக இருந்தான். ஆனால் அதைச் செய்யும்படியான ஒரு வழியை தேவன் வைத்திருந்தார். தாம் அதை எப்படிச் செய்வார் என்று அவர்களுக்கு உரைத்திருந்தார். ஆனால் அவர்களோ அதைச் செய்யத் தவறினர். அது அவருடைய வார்த்தையின்படி, அவருடைய காலத் தில், அவருடைய காலக் கிரமத்தின்படி, அதைச் செய்ய அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட நபரால் செய்யப்படவேண்டும். 54மோசே தேவனுடைய அழைப்பை விட்டு ஓடப்பார்த்தான். “வேறு யாரையாவது எடுத்துக்கொள்ளலாமா!'' ஆனால் தேவன் அதைச்செய்ய மோசேயைத் தெரிந்தெடுத்தார். அநேகர்... பவுலும், மற்ற அநேகரும் அதிலிருந்து விடுபட எத்தனித்தனர். ஆனாலும் அதைச் செய்ய அவர் தெரிந்தெடுக்கும் மனிதனாகவே அது இருக்கவேண்டும். மேலும் அது முதலாவது அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு வரவேண்டும். தேவனுடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்குத்தான் வரவேண்டும், ஆமோஸ் 3:7, ''தேவனாகிய கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்''. அந்த தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையில் நிரூபிக்கப் பட்டவராயிருக்கவேண்டும். இவைகளே அந்த ஐந்து கட்டாய தேவைகளாகும். இந்த வழியிலேயே அமையவேண்டும்: அவருடைய நேரம்; அவருடைய காலம் (அது எப்போது நடக்கும் என்று அவர் சொன்ன காலம்); அவர் தெரிந்தெடுத்த மனிதன், மேலும் அது தீர்க்கதரிசிக்கு அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்; அத்தீர்க்கதரிசி தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாயிருக்கவேண்டும். உறுதிப்படுத்தப்படாத தீர்க்கதரிசிகள் அநேகர் தீர்க்கதரிசனம் உரைத்ததாக நாம் வேதாகமத்தில் காண்கிறோம். இயேசு கிறிஸ்துவே நம்முடைய தீர்க்கதரிசி. 55ஆகவே இப்போது கவனியுங்கள். பாருங்கள், தேவன் தாம் அவர்களுக்கு வெளிப்படுத்த அளித்திருந்த தம்முடைய வழியின் படி அவர்களுக்கு அந்த வெளிப்படுத்தலை அளித்திருக்கவில்லை. அவர்கள் தாவீதின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஆசாரியருடைய வழியை ஏற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் வேதபாரகருடைய மத சாஸ்திர விற்பன்னனுடைய வழியை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தேவனுடைய வழியை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நாத்தான் வேல் அந்த நாளுக்குரிய தீர்க்கதரி சியாயிருந்தான். பிறகு, நாத்தான் அதை எப்படிச் செய்யவேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னான். ஆனால் பாருங்கள், அவர்கள் நாத்தான் வேலைக் கலந்தாலோசிக்காமல் அதைச் செய்தார்கள். நாத்தான் வேல் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை. எல்லா வசீகரமான காரியங்களும், நடைபெற்ற மகத்தான காரியங்களும்... எனக்கு அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது. என்னைப் பாதுகாரும் ஆண்டவரே-இருதயங்கள் பற்றி எரிகையில் என் பெருமையைத் தாழ்த்தி (மற்றவர்களோடு போகாதபடி) உமது நாமத்தை நோக்கிக் கூப்பிட; மற்றோர் செய்வதில் சார்ந்திராதிருக்க ஆனால் உம் உத்தாரம்பெற ஜெபத்தில் காத்திருக்க, எனக்குக் கற்றுத்தாரும். அது அவ்விதமாகவேயிருக்கிறது. அது சரியான முறையில் செய்யப்படுவதை நான் காணட்டும். அப்போது அதை நம்புவேன். 56இப்போது, அந்தக் காரியத்தை அவர்களுக்கு தாவீது மூலமாகவும், ஊழியக்காரர் மூலமாகவும், மக்கள் மூலமாகவும், ஆயிரம் பேருக்குத் தலைவர் மூலமாகவும், நூறு பேருக்குத் தலைவர் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறக்கூடிய நாத்தான்வேல் மூலமாக வெளிப்படுத்தவில்லை. என்ன செய்ய வேண்டுமென்பதை அந்த காலத்திற்குரிய தீர்க்கதரிசிக்கு முதலில் காட்டாமல் தாம் எதையும் செய்ய மாட்டார் என்பதாக கர்த்தர் கூறியிருந்தார். அவர்கள் என்ன செய்தார்கள் பார்த்தீர்களா? தேவனுடைய வார்த்தைக்கு நேர் மாறாக அவர்கள் சென்று, உடன்படிக்கைப் பெட்டியை ஒரு புது இரதத்தின் மீது ஏற்றினார்கள். பாருங்கள்? தேவனால் அளிக்கப்பட்டிருந்த வழியான தேவனுடைய கட்டளைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அதைச் செய்யச் சொன்னார்கள்... அதுதான் இன்றும் நடந்திருக்கிறது. நண்பர்களே. அதனால்தான் பலனொன்றும் இல்லாமல் எத்தனையோ தீவிர மதப் போராட்டங்கள், மற்றும் அநேக காரியங்கள் செய்யப்பட்டன. அதிகமதிகமான நம்பிக்கைத் துரோகங்கள், அதிகமான பாவம், அதிகமான... நான் கூறுகிறேன், இந்த தேசம் போய்விட்டது. இந்த தேசம் மட்டுமல்ல, மற்ற நாடுகளும் கூட. மற்றொரு காலத்தில் இங்கிலாந்து செய்தது போல இந்த தேசம் மற்ற தேசங்களோடு விபச்சாரம் செய்கிறது. 57மனித நாகரிகத்திற்கு அப்பால் நானூற்று எண்பது மைல் தள்ளி உள்ள மொசாம்பீக்கில், காடுகளில் ஆயிரம் மைல்கள் தள்ளி ரொடீஷயாவில் எல்வீஸ் ப்ரெஸ்லி பாடும் பாடல்களை ஒலி பரப்பக்கூடிய பெட்டிகளை வைத்துக்கொண்டு, வாலிப் பிள்ளைகள் தலைகளை உதறிக்கொண்டு, மேலும் கீழுமாய் குதித்து, எல்வீஸ் ப்ரெஸ்லியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு இரவெல்லாம் நடனமாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள், “அவர் மிகவும் தெய்வ பக்தியுள்ளவர், பேட்பூனும், மற்றவர்களும்கூட'' என்கிறார்கள். இந்த மணி நேரத்திற்குரிய யூதாஸ்காரியோத்துக்கள் இவர்கள்தான் என்பதை அறியாதிருக்கிறார்கள். அதுதான் அதில் மோசமான காரியம் ஆகும். தாங்கள் சரியாக செய்வதாக நம்புகிறார்கள். லவோதிக்கேயா சபையின் காலத்தை நோக்கி இயேசு, 'நீ நிர்வாணியும், பரிதபிக்கப்படத்தக்கவனும், நிர்ப்பாக்கியமுள்ளவனும், குருடனுமாயிருந்தும் அதை அறியாமலிருக்கிறாய்'' என்று கூறவில்லையா? அதை அறியாதிருக்கிறார்கள். நல்லது. ஆப்பிரிக்காவிலும் அதைச் சுற்றிலுமுள்ள பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்துச் சிறுவர்கள், “நாம் இதுவரை கேட்டதிலேயே எல்வீஸ் ப்ரெஸ்லிதான் மிக இனிமையாகப் பாடுகிறார்'' என்கிறார்கள். சந்தேகமில்லாமல் தாவீதும் இதைத் தான் செய்தான். சந்தேகமில்லை. பாடகர்களும் இதைத்தான் செய்தனர். ஆனால் அது முகாமிற்குள் சாவைக் கொண்டு வந்தது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் - நாம் இன்று எங்கிருக்கிறோம் என்பதைப் பாருங்கள், நண்பர்களே? 58லேவியரின் தோள்கள் அதைச் சுமக்கவேண்டும் என்பதே தேவன் அளித்த உண்மையான மூல வழியாகும். ஆனால் அவர்களோ ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றினார்கள். அது ஒருபோதும் வேலை செய்யாது. அவன் சரியான முறையில் அதைக் குறித்துக் கலந்தாலோசிக்கவில்லை. பாருங்கள். ஆகவே அதைச் செய்ய தவறான முறையில் எத்தனித்து, தவறான முறையிலே அதைச் செய்தார்கள். அதுதான் இன்றைக்கும் நடந்திருக்கிறது. மனிதன் எவ்வளவுதான் உண்மையும் உத்தமமுமாக செய்தா லும், தேவன் அதை வெளிப்படுத்துவதற்கு அளித்துள்ள வழிக்கு புறம்பாக அவன் அவருக்கு சேவை செய்ய முயலும்போது அதைக் குழப்பிவிடுகிறான். தேவன் அதை தம்முடைய வழியிலே அமைக்கிறார். மனிதனோ, அதற்கு புறம்பாக செயல்படும்போது, எவ்வளவுதான் உண்மையும் உத்தமுமாக செய்ய முயன்றாலும் நீங்கள் - நீங்கள் அதைக் குழப்பிவிடுவீர்கள். 59பிலேயாமுடைய நாட்களில் சற்று பிலேயாமைப் போல. பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். வார்த்தை சரியாக தீர்க்கதரிசியிடம் வந்தது. தேவன் பிலேயாமிடம், ''அங்கே போகாதே. அது நான் தேர்ந்தெடுத்த ஜனம். அது என்னுடைய தெரிந்தெடுத்தல்' என்றார். ஆனால் பிலேயாமோ பிரமுகர்களோடும், இராணுவத்தினருடனும், ஆசாரியர்களுடனும் செல்வாக்குள்ள மனிதர்களுடனும் சேர்ந்து கொண்டு 'நான் - நான் சொல்வதாவது... இராஜா வானவர்...''. தாவீதின் காரியத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இன்றைக்குரிய காரியத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ் வொன்றையும் சாயலாகப் பாருங்கள். அப்போது நீங்கள் அதைக் காண்பீர்கள். அதைக் காண்பவர்கள் 'ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் 'ஆமென்' என்று மாறுத்தரம் கொடுக்கின்றனர் - ஆசி). பார்த்தீர்களா? பார்த்தீர்களா? இப்போதிருப்பதைப் போலவே. ஆனால் அந்த-அந்த -அந்த -மத குருமார்களும், அந்த - அந்த-அந்த-அந்த-அந்த ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மத சாஸ்திர விற்பன்னர்களும், “இதுதான் அது செய்யப்படவேண்டிய முறையாகும்'' என்றனர். ஆனால் அது அப்படியிருக்கவில்லை. அது அப்படி அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. 60ஆகவே தேவன் பிலேயாமிடம் கூறினார் - ஏனெனில் முதலா வதாக அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் - அவர் அவனிடம் “அங்கே போகாதே!'' என்றார் ஆனால் பிலேயாம் இந்த மற்ற மனிதர்களுடைய பாதிப் பால், செல்வாக்கால். தேவன் சொன்னதற்கு மாறாக செய்ய வேண்டியிருந்தது. அது ஒரு எழுப்புதலுக்குப் பதிலாக சாபமாக மாறிற்று. ஓ, அவன் அங்கு சென்று, “இப்போது பாருங்கள்! என்னவென்று அறிவீர்களா? நாமெல்லாரும் மோவாபியர் களாயிருக்கிறோம். லோத்தின் குமாரத்திதான் நம்முடைய இராணி. அவள்தான் நம்முடைய ஆரம்ப ஸ்தாபனம். நாமெல்லாரும் ஒரே இரத்தத்தைச் சேர்ந்தவர்கள். நாமெல்லாரும்... ஸ்தாபனங்களாகிய நாமெல்லாரும் ஒன்றாகவேயிருக்கிறோம்'' என்று மக்களுக்குத் தவறாகப் போதித்தான், அந்தக் காரியத்தோடு கலவாதிருங்கள். அங்கிருந்து தள்ளியிருங்கள். பாருங்கள்? ஆகவே அவன், ''நாமனைவரும் ஒன்றாகவேயிருக்கிறோம். ஏன்? உங்கள் ஜனம் எங்கள் ஜனம் போலவே. நாம் ஒருவரோடொருவர் விவாகம் பண்ணிக் கொள்ளலாம். ஆகவே உண்மையான மத ஒருங்கிணைப்பு ஆலோசனை சபையை வைத்துக்கொள்ள முடியும். பாருங்கள்? நாமெல்லாரும் ஒன்றாகக் கூடி மூல காரியங்களுக்குத் திரும்பச் செல்லலாம்'' என்றான். ஆனால் தேவன் அந்தக் காரியத்தைச் சபித்தார். இஸ்ரவேலுக்கு அந்தப் பாவம் மன்னிக்கப்பட வேயில்லை. அவர்கள் வாழ்நாளெல்லாம் அது அவர்களைத் தொடர்ந் தது. அது அவர்களுக்கு மன்னிக்கப்படவேயில்லை. அவர்கள் வனாந்தரத்தில் அதோடு மாண்டார்கள். ஏனென்றால் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட வழியான தேவன் அளித்திருந்த வழியை அவர்கள் விட்டிருந்தனர். கவனியுங்கள், அவர்கள் செய்த இந்தக் காரியம், இஸ்ர வேலரை வனாந்தரத்தில் மரிக்க வைத்தது. ''அவர்கள் ஒவ்வொரு வரும் மரித்துப் போனார்கள்'' என்று இயேசு கூறினார். கவனியுங்கள். அங்கே மோசேயுடன் நின்றது யார், யோசுவாவுடன் காலேபும். அந்த-அந்த திட்டம்... 61மறுபடியும் கவனியுங்கள், இங்கு தாவீது என்ன செய்தான் என்று கவனியுங்கள். அவன் அப்படிச் செய்தபோது அது எதை விளைவித்தது? ஒரு உண்மையும் உத்தமுமான மனிதனுக்கு மரணம் நேரிடச் செய்தது. நாம் இன்னும் தூர இடங்களிலுள்ளவர்களுடன் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என நம்புகிறேன். எல்லா இடங்களிலுமுள்ளவர்களாகிய நீங்கள் இதைக் கேட்க விரும்புகிறேன். தாவீது நாத்தான் வேலைக் கலந்தாலோ சிக்காமல், அதைக் குறித்து கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ளாமல் செய்த இந்தக் காரியம், உண்மையான ஜனங்கள் சாக ஏது உண்டாக்கியது. ஆம், உடன்படிக்கைப் பெட்டி அவன் வீட்டிலிருந்து வந்தது - அவன் உடன்படிக்கைப் பெட்டியின் சந்நிதானத்தில் வசித்து வந்தவன்-அங்கே அவன் பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். மாடுகள் இடறினபடியால், பெட்டி விழுகிறதாயிருந்தது. அவர்கள் ஏற்கெனவே ஒரு காரியத்தைத் தவறாக செய்திருந்தார்கள். இரண்டு காரியங்களை தவறாக செய்திருந்தனர். முதலாவது, அவர்கள் நாத்தான்வேலைக் கலந்தாலோசிக்கவில்லை. அவர்கள் தவறாக செய்த அடுத்த காரியம், அவர்கள் தேவனுடைய வார்த்தையை - அந்நாளின் வார்த்தையாகிய சாமுவேலை கலந்தா லோசிக்காமல் அங்கே சென்றது. பிறகு அக்காரியத்தைச் செய்த போது, தேவனுடைய வார்த்தைக்கு மாறாக அதைச் செய்தனர். பொறுப்புடன் அதைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட, அத்தியட்சகரான அந்த நல்ல மனிதன், “தேவன் கைவிடப்படு வதை நான் விரும்பவில்லை'' என்று எண்ணினான். ஆகவேதான் லேவியனாயிராதபோதே, உடன்படிக்கைப் பெட்டியின் மீது தன் கையைப் போட்டான், அதினிமித்தம் செத்தான் - மூன்று காரி யங்கள். 62இன்று ஸ்தாபனங்கள் என்ன செய்திருக்கின்றன என்பதை நன்றாக சிந்தித்துக் கவனியுங்கள். பாருங்கள்? அவர்கள் சத்தியத்தை நிராகரித்துவிட்டனர். அதைப் பொய் உபதேசம் என்றனர். பாருங்கள்? அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் விரும்பும் எல்லா ஸ்தாபனங்களையும் ஒருங்கிணைக்கும் உலக சபை ஆலோசனை சங்கத்தை அவர்கள் பெற்றுக்கொள்வர்கள். தேவன்தாமே இது சத்தியம் என்று உறுதிப்படுத்தி நிரூபிக்கும்போது, இது மனதினால் கருத்தறி வித்தல் என்றார்கள். “ஓ, அங்குள்ளவர்கள் அறிவில்லா ஒரு சிறு கூட்டத்தினரே. அவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை அறியா திருக்கிறார்கள்'' என்கிறார்கள். அது சரிதான்; நாமறியோம்; ஆனால் நாம் அவருடைய வார்த்தைகளை மட்டும் கூறுகிறோம். தாம் என்ன பேசுகிறார் என்பதை அவர் அறிவார். பாருங்கள்? அதை என்னால் விவரிக்க முடியாது, வேறு யாராலும் முடியாது. ஆனால் அவர்அவர்- அவர் அதை நிரூபிக்கிறார். இப்போது கவனியுங்கள். தன் முழு இருதயத்தோடும் கிறிஸ்துவண்டை விரும்பி வரும் அநேக உண்மையும் உத்தமமு மான விசுவாசிகள் இன்று அதே முறையில் ஆவிக்குரிய பிரகாரம் கொல்லப்படுகிறார்கள். அநேக உண்மையான மனிதர்கள் கிறிஸ்தவர்களாக விரும்பி, கத்தோலிக்க சபைக்கும் மெத்தோ டிஸ்டு, பாப்டிஸ்ட், கிறிஸ்துவின் சபை என்றழைக்கப்படும் இந்த ஸ்தாபனங்களிலும், இன்னும் பெந்தெகொஸ்தே ஸ்தாபனங் களிலும் போய் சேருகின்றனர் (பாருங்கள்?) அவர்கள் கிறிஸ்தவர் களாக விரும்பி, அதில் தங்கள் கையைப் போட்டு, அவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். 63ஆகவே இந்தக் காரியம் நிகழ்ந்ததை தாவீது கண்டபோது, அது அவனை எழுப்பிற்று. அங்குள்ள சகோதரனே, மிகவும் காலங் கடந்து உறக்கம் தெளியாதே. சாவு வந்துவிட்டதை அவன் கண்டான். பலன்களை எனக்குக் காட்டு, எழுப்புதல் என்று பெயரிடப்பட்ட இந்தக் காரியம், மக்களைத் திரும்பவும் ஸ்தாபன சபைகளுக்கு நடத்தும் இக்காரியம், தேசத்திற்கும், விசுவாசிகளின் கூட்டத்திற்கும் என்ன செய்திருக்கிறது. அது முற்றுமாக புதுப் புது அமைப்புகளையும் ஸ்தாபனங்களையும் அதிக எண்ணிக்கையான அங்கத்தினர்களையும் உண்டாக்கினதே ஒழிய வேறில்லை. அதினால் இந்த தேசம் தேறியதா? அவர்கள் கூறினர் தாங்கள் அங்கே போய்.... அமெரிக்கா“தேவன் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக-அது - அது ஒரு கிறிஸ்தவ தேசம்' என்று கூறினார்கள். அது ஒரு கிறிஸ்தவ நாடாக இருப்பதிலிருந்து பத்து லட்சம் மைல்கள் தள்ளி உள்ளது! நான் அதற்காக ஜெபிப்பதுகூட கிடையாது. அதன் முன் நடத்திக் காட்டப்பட்ட தேவனுடைய மகத்துவமான வல்லமையின் கீழ் மனந்திரும்பாமல், அது சத்தியத்தை மறுதலித்து, தன் கதவுகளை அதற்கடைத்து அதை விட்டு விலகிச் செல்லும்போது, அதற்காக நான் எப்படி ஜெபிக்கமுடியும்? அதை நான் தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். மேலும் அது விலகிச் சென்றுகொண்டே யிருக்கிறது. இப்போது அது மூழ்கப்போகிறது. என்ன நடக்கிற தென்று மட்டும் பாருங்கள். 64அநேக உண்மையான மக்கள் ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒருவித மத அணுசரணை முறையையோ சென்று சேர்ந்துகொள்கின்றனர். அங்கே அவர்கள் ஆவிக்குரிய மரணம் அடைகின்றனர். அவர்களிடம் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த ஸ்தாபனங்களின் உபதேசத்தால் பலமாய் நிரப்பப்படுகின்றனர். “ஏன், இந்த அத்தியட்சகர்கள் இதை, இதை, இதை, இதை சொன்னார்கள்'' என்பார்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதை அவர்களுக்கு காட்டினால், “ஆனால் எங்கள் போதகர்...'' என்பார்கள். உங்கள் போதகர் என்ன கூறுகிறார் என்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பதைக் குறித்தும் எனக்குக் கவலையில்லை. அல்லது மற்ற யார் கூறுவதைக் குறித்தும் கவலையில்லை. அது தேவனுடைய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கும், மணி நேரத்திற்கும், காலத் திற்கும், செய்திக்கும் ஆகிய காரியங்களுக்கு மாறுபட்டிருந்தால் அதை மறந்துவிடுங்கள். அதை விட்டு விலகியிருங்கள். நியாயத்தீர்ப்பின் நாளன்று நான் உங்கள் ஒவ்வொருவர் முன்பாகவும் நிற்க வேண்டியிருக்கும், அதை அறிவீர்கள். நான் இப்போது வயது சென்றவனாயிருப்பதை அறிந்திருக்கிறபடியால் அதைக் குறைத்தே கூறுவேன். நான்... நான் எதையோ அறிந்து கொண்டேன் என்பதல்ல. ஆனால் அவர் அறிந்திருக்கிறார். அவர் சொன்னதை நான் அப்படியே பின்பற்றுகிறேன். 65தேசம் முழுவதும் நடத்தப்பட்ட தீவிர மதப் போராட்டங் களை இன்று பாருங்கள். அதெல்லாம் வீணாக நடத்தப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் (வீணாய் தாவீது உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தான். வீணாய் ஆகாப் அந்த தீர்க்கதரிசிகளைப் பழக்குவித்தான். வீணாய் பிலேயாம் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான்!) மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கிறார்கள்'' என்று இயேசுவானவர் மாற்கு 7:7இல் சொல்ல வில்லையா? தேவனுடைய கட்டளைகளே முக்கியம் வாய்ந்தவை. மற்றதெல்லாம்... ''அந்த ஜனங்கள் மெய்யாகவே உத்தமமாய் காரியங்களைச் செய்கின்றனர்'' என்பதாக நாம் அடிக்கடி கேட்கிறோம். அதினால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. 'யேகோவா சாட்சிகள்' 'ஏழாம் நாள் ஆசரிப்பாளர்கள்' முதலிய கூட்டத்தினர் எல்லாரும் தெருக்களுக்கு வந்து நம்மில் ஒருவரும் செய்யாத காரியங்களைச் செய்கின்றனர். கத்தோலிக்கர்களும், அவர்களைச் சார்ந்த வகுப் பாரும் தெரு முனைகளில் நின்று, பிச்சை முதலிய காரியங்களைக் கேட்கின்றனர். கோடா கோடிக்கணக்கான பணம் இருக்கும் போதும் மார்க்கத்திற்காக இன்னும் பிச்சைக் கேட்கின்றனர். உத்தமம்தான், சந்தேகமில்லை. சபைகள் சென்று பிரசங்கிக்கின்றன. தங்கள் சபைக்கு புது அங்கத்தினர்களைக் கொண்டுவர ஊழியக் காரர்கள் பிரசங்க மேடைகளில் நின்றுகொண்டு தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர். ஆனால் அது ஒரு புதிய உடன்படிக்கைப் பெட்டி. பின் செல்லவேண்டிய உடன்படிக்கைப் பெட்டி ஒன்றுதான் உண்டு. அது தேவனுடைய வார்த்தையேயாகும். அந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு மாறுபட்டதாக எது இருந்தாலும் அதை விட்டு விலகியிருங்கள். அது தேவனுடைய தோள்களின் மீதில்லாதபடி ஒரு புது இரதத்தின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது. அது உண்மை . அந்தக் காரியத்தை விட்டு விலகியிருங்கள். அதோடு உங்களுக்கு எந்தவித தொடர்பும் வேண்டாம். 66நம்முடைய பெரிய மதப் போராட்டங்கள்- கோடிக்கணக் கானவர்களும் லட்சக்கணக்கானவர்களும் பாவ அறிக்கை செய்திருக்கின்றனர். ஆனால் அவையெல்லாவற்றினின்றும் ஒரு நூறு பேர் தெரிந்துகொள்ளப்படுவார்களா என்று சந்தேகப்படு கிறேன். பாருங்கள். ஒரு பிரயோஜனமுமில்லை, பிறகு வாக்குத் தத்தமான வார்த்தையைப் பாருங்கள். அது தோல்வியுற்றது என்று நீங்கள் எண்ணுவீர்கள், ஆனால் அது தோல்வியுற்றது என்று நாங்கள் அறிவோம். அந்த தேசத்தி லுள்ள நமது மகத்தான எழுப்புதல்காரர்கள் அது முழுவதுமாக தோல்வியுற்றது என்கிறார்கள். அது தோல்வி அடைந்துவிட்டது என்பதை ஒவ்வொருவரும் அறிவர். நல்லது, ஏன் அவ்விதமா யிற்று? அது ஒரு நல்ல நோக்கத்திற்காக; அந்த மகத்தான மதப் போராட்டங்கள் மக்களை தேவனுடைய சமுகத்திற்கு கொண்டு வருவதற்கானவைகளாயிருந்தன. பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் பணத்தை செலவழித்து இந்தப் பெரிய மதப் போராட்டங் களைத் தாங்கினர். ஸ்தாபன சபைகளெல்லாம் ஒத்துச்சென்றன. இக்காரியங்களுக்காக, மகத்தான அரங்கங்கள், மகத்தான காரியங்கள், மேலும் மகத்தான காரியங்கள் நடந்தேறின; ஏன் அது தோல்வியுற்றது? ஏனென்றால் அவர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த மணி நேரத்தை அறியாதவர்களாயிருந்தார்கள். இயேசு வானவர் நின்று, கண்ணீர் அவர் கன்னங்களில் வழிந்தோட, தம் இருதயத்தில் அழுதவராய், “எருசலேமே, எருசலேமே, நான் எத்தனை தரமோ கோழி குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக உன்னைச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். நீயோ நான் உன்னிடம் அனுப்பிய ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் கல்லெறிந்தாய். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. ஆனால் இப்போதோ உன்னுடைய வேளை வந்திருக் கிறது'' என்று சொன்னதில் அதிசயமில்லை. 67உங்களிலிருந்து பரிசுத்த ஆவியானவர் கதறுவதை உங்க ளால் உணர முடியவில்லையா? “ஓ ஐக்கிய நாடுகளே (அமெரிக் காவே), ஓ உலகமே, நான் எத்தனை தரமோ உங்களைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். ஆனால் உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இப்போதோ, உங்கள் மணி நேரம் வந்து விட்டது. உங்கள் இன்பத்தின் தேவன், உங்கள் அசுத்தத்தின் தேவன், உங்கள் சோதோம் கொமோராவின் தேவன் உங்கள் நடுவில் வந்துவிட்டான்...'' நம்முடைய சிறு பிள்ளைகளும்கூட ”பீட்டில்ஸ்'' பாடகர்களைப் போல தலைமுடி அலங்காரம் செய் வதும், தங்கள் முகத்தில் சாயம் அடித்துக்கொள்வதும், சிறு வயதிலேயே தவறான வழியில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். நம்முடைய ஸ்திரீகளோ போய்விட்டார்கள்! மீட்கப்படக்கூடாத படி போய் விட்டார்கள். நம்முடைய ஆண்களோ சிறிய அரைக்கால் சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பெண்களைப்போல் நடித்துக் கொண்டு, கழுத்துவரை முடியைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆண்மையில்லாதவர்களாயிருக்கிறார்கள். நாம் சோதோமைச் சேர்ந்தவர்களாயிருக்கிறோம். தேவனுடைய அக்கினியும், கோபாக்கினையும் நமக்காகக் காத்திருக்கின்றது. தேவன் எப்படி கொன்று போடுவார். எப்படி அவர் அழிப்பார் என்று தெரியுமா? அவர் எப்போதும் செய்ததுபோலவே செய்வார். ஒரு வேசி தவறானதொன்றைச் செய்தபோது, அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள். வேசியான ஒரு ஸ்திரீயை கொல்ல அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். அவ்வித மாகவே அவர் ஸ்தாபன சபைகளைக் கொன்றுபோடுவார். ஒவ்வொன்றும் நூறு பவுண்டு எடையுள்ள கல் மழையை அவர் வானத்திலிருந்து மனுஷர் மேல் விழப்பண்ணுவார் என்று வேதாகமம் கூறுகின்றது. அவர் அவர்களைக் கல்லெறிவார். யார் அவரைத் தடுத்து நிறுத்தப்போகிறவர்? அப்படிச் செய்ய இயலாது என்று சொல்லக்கூடிய விஞ்ஞானம் எது? ஒரு பேழையை அவர் உண்டு பண்ணி நோவாவை மிதக்கவிட்டு பத்திரப்படுத்தியது போல, அதே பிரகாரம் அவர் செய்வார். தம்முடைய சபைக்காக அவர் அதை மறுபடியும் செய்வார். இராஜாக்களோடும், நூறு பேர்களுக்குத் தலைவர்களோடும், ஆயிரம் பேருக்குத் தலைவ ரோடும் வேசித்தனம் பண்ணின அந்த வேசியை அவர் தம்முடைய பிரமாணங்களின்படியேயும், தம்முடைய வழியின்படியேயும் கல்லெறிவார். தாம் ஏற்படுத்தி அமைத்த தம்முடைய பிரமாணங் களின்படியே அவர் அவளைக் கல்லெறிந்துக் கொன்றுபோடுவார். அவர் ஒரு கல் மழையை உண்டாக்க முடியாது என்று அவரிடம் சொல்லப் போகிறவன் யார்? 68மழைத்துளி எவ்விதம் ஆரம்பமாகிறது என்பதை அறிந்த வர்கள் யாரையாவது கேட்டுப்பாருங்கள். அது ஒரு வட்டமிட்டு... அதிகமதிகமாக எடை அதிகரித்துக்கொண்டே வந்து, ஒரு குறிப்பிட்ட எடை வந்தவுடன் கீழே விழ ஆரம்பிக்கிறது. தேவனோ, புவி ஈர்ப்பு சக்தி அவரை பூமியிலே இழுத்துப் பிடித்து நிறுத்த முடியாதபடி அவர் பரத்துக்கேறிப்போனார். புவி ஈர்ப்பு சக்தியை உண்டாக்கின தேவன் ஒரு கல்லானது அதன் எடை நூறு பவுண்டாகத்தக்கதாக அதை சுழற்றக்கூடிய..?... உண்டாக்க முடியும். தாம் அதைச் செய்யப்போவதாகக் கூறினார். அவர் அதைச் செய்வார். அதைச் செய்யவேண்டாமென்று அவரிடம் சொல்லப் போகிறவர் யார்? தாம் அதைச் செய்யப்போவதாக அவர் கூறியபடியால் அவர் அதைச் செய்வார். 69நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நாம் நியாயத் தீர்ப்பினண்டை நின்று கொண்டிருக்கிறோம் ஏன்? பெந்தெ கொஸ்தே சபையினர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் விழுந்த பழைய மன்னாவைப் புசிக்க முயற்சிக்கிறார்கள். ஹோலினஸ் சபையார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் விழுந்ததையும், லூத்தரன் சபையார் முந்நூறு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகளுக்குமுன் விழுந்ததையும், அநேக நூற்றாண்டுகளுக்கு முன் விழுந்ததைப் புசிக்க முயல்கின்றனர். அவர்கள் பழைய மன்னாவைப் புசிக்க முயல்கின்றனர். ஓ, சகோதரனே, அது தேங்கி நிற்பதால் அசுத்தமானது. அது கெட்டுப்போனது. அது... அதில்அதில்- நான் எப்போதும் சொல்வதுபோல அதிலே புழுக்கள் நெளிகின்றன. அதைச் சாப்பிடுவாயானால் அது உன்னைக் கொல்லும். தாவீதோ அல்லது மற்றவர்களில் யாராவது அந்த மணி நேரத்திற்குரிய அப்பத்தைக் கலந்தாலோசித்தார்களா என்பதைக் கண்டுபிடி. ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், போதகர்களும், மத சாஸ்திர விற்பன்னர்களும், பல வகுப்பாரும், ஸ்தாபனங்களும் அந்த மணிநேரத்திக்குரிய செய்தியைக் கலந்தாலோசித்திருப்பார் களானால்; ஆனால் இப்போது அதனால் ஒரு பிரயோஜனமுமிராது. அது கடந்து போய்விட்டது. அதனால் ஒரு அணுவளவேனும். பிரயோஜனமில்லை. அவள் போய்விட்டாள். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மனந்திரும்புதலுக்கும், நியாயத்தீர்ப்புக் கும் இரக்கத்திற்குமிடையே உள்ள கோட்டை அவள் கடந்து விட்டாள். 70கவனி, பிறகென்ன? என்ன செய்யப்படக்கூடும்? என்ன செய்ய வேண்டும்? தீர்க்கதரிசியாகிய வேதாகமத்தைக் கலந் தாலோசிப்போமாக. அதில் ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் எடுக்கவும்கூடாது. செய்வோமானால் ஜீவ புஸ்தகத்திலிருந்து தேவன் நம்மை எடுத்துப்போடுவார். வேதா கமத்தில், மல்கியா 4ம் அதிகாரத்தில் இன்று என்ன நடக்கு மென்றும், வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரத்தில் எப்படி இந்த ஏழு முத்திரைகளும் உடைக்கப்பட்டு, சீர்திருத்தக்காரர் களின் காலங்களிலெல்லாம் மறைக்கப்பட்டிருந்த எல்லா இரகசி யங்களும் எப்படி வெளிப்படுத்தப்படும் என்றும் கூறப் பட்டிருக்கிறது. அது எவ்விதம் நடக்கும் என்று அவர் கூறினார். கர்த்தர் உரைக்கிறதாவது அது பரிசுத்த வேதாகமத்திலுள்ளது.. தேவன் அதை முழுமையாக பரிபூரணமாக அடையாளம் காட்டி அதுவே சத்தியம் என்று கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக உயர வானத்திலும் மற்றெல்லாவற்றிலும் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அதற்கு அவர்கள் செவி சாய்ப்பார்களென்று நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள் மரித்துப்போனார்கள். அவர்கள் ஏதோ ஒன்றிடம் தங்கள் கையை நீட்ட அது அவர்களை முற்றுமாக கொன்றுவிட்டது. இல்லை, இனி பிரயோஜனமில்லை, இனி பிரயோஜனமில்லைஒருபோதுமில்லை. 71இந்தக்காரியம் நிகழ்ந்தபோதுதான் தாவீது கண்டு கொண்டான். ஓ, தேவனே, எங்கே நிற்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளக்கூடிய ஒரு தாவீதை எங்களிடம் அனுப்பும். இன்று அதை எவ்விதமாய் செய்யப்போகிறார் என்பதைக் குறித்த தேவனுடைய வாக்குத்தத்தத்தை கண்டுகொள்ளக்கூடிய தாவீதை அனுப்பும். தாம் அதை எப்படிச் செய்யப்போகிறார் என்பதை தேவன் இங்கே தம்முடைய வார்த்தையிலே கூறியிருக்கிறார். தேவன் மிகாயாவிடம் கூறினார்; நானூறு மதிப்பிற்குரிய தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக மிகாயா தன்னுடைய தரிசனத்தை சோதித்துப்பார்த்தான். தன்னுடைய தரிசனம் சரியானதுதானா என்று காண அதை சோதித்துப்பார்த்தான். என்ன நடக்கப்போகிற தென்று பார்க்கும்படி தனக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி கூறி யிருந்ததைக்காணும்படி திரும்பிப்பார்த்தான். அவன் திரும்பிப் பார்த்து, எலியா தீர்க்கதரிசி அங்கு நின்றுகொண்டு “ஆகாபே, உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்'' என்று உரைத் ததைக் கண்டான். இப்போது, தான் கண்ட தரிசனம் தேவனுடைய வார்த்தையோடு அப்படியே இசைந்திருப்பதைக் கண்டவுடனே அதை வெளியே கூறினான். அவன் அதைச் சரியாகச் செய்தான். அது சரியே. மற்றவர்கள் என்னதான் கூறினாலும், அவன் அந்த வார்த்தையோடு தரித்திருந்தான். 72இப்போது, இன்று நாம் பெற்றிருக்கும் தரிசனத்தை பார்ப்போம். அது புதிய ஆலயங்களைக் கட்டுவதா? அல்லது புதிய காரியங்களைக் கூட்டுவதா? அல்லது அது பெரிய காரியங்கள் நிகழப்போவதா, அல்லது அது நியாயத் தீர்ப்பா ? இன்றைக்குரிய வாக்குத்தத்தம் என்ன என்பதைக் கண்டு படித்துப்பார். நாம் எந்தகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பார். “தேவனுக்கு ஸ்தோத்திரம், சகோதரனே, நான் உத்தமமாய் நடக்கிறேன். நான் சபையில் சேர்கிறேன். நான் கலையியல் பட்டம் பெற்றிருக்கிறேன். நான் இதைச் செய்திருக்கிறேன்'' என்றெல் லாம் நீங்கள் கூறுகிறீர்கள். அதெல்லாம் சரிதான். அது நேர்த்தியானதும்கூட. அதற்கு விரோதமாக ஒன்றும் கிடையாது. ஆனால் தாவீதும் அப்படியே பெற்றிருந்தான். அந்த நாட்களின் ஆசாரியர்களும் அப்படியே பெற்றிருந்தனர். மத சாஸ்திர விற்பன் னர்களும் அப்படியே செய்திருந்தனர்; ஆனால் அது வார்த்தைக்கு விரோதமாயிருந்தது. தேவன், எப்படித் தாம் இன்று அதைச் செய்வார், எப்படித் தாம் எல்லாவற்றையும் சீர்படுத்துவார், தாம் மறுபடியும் என்ன செய்வார் என்று சொன்னார். பழைய நிலைக்கு கொண்டுவருவதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணினார். அது முற்றிலும் சரியே. யோவேல் 2:28இல் நமக்கு எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்ப தாக அவர் வாக்களித்தார். ''பச்சைக் கிளிகள் பட்சித்த வருஷங் களின் விளைவை உங்களுக்கு திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.'' பாருங்கள், அவர்களிடம்... அது அதே (ஒரே) புழுதான். அது தன் வாழ்வின் வெவ்வேறு வித்தியாசமான கட்டங்களிலிருந்து வருகிறது. முதலில் கத்தோலிக்க சபை பட்சிக்க ஆரம்பித்தது. பிறகு லூத்தரன், மெதோடிஸ்ட், பெந்தெகொஸ்தே சபைகள் எல்லாம் படிப்படியாகத் தின்றன. தேவனோ, 'துவக்கத்தில் இருந்த சபையைப் போலவே எல்லா வற்றையும் சபைக்கு திரும்ப கொடுப்பேன்'' என்றார். 73அன்றிரவு வந்த தரிசனத்தைக் கவனியுங்கள். சரியாக அதே மணவாட்டி இந்தப் பக்கம் வருகிறாள். அந்த மேலாடை ஆபரணம் அணிந்தவர்களாய் ராக் அண்ட்ரோல் ஆடிக்கொண்டு தங்களை சபை என்றழைத்துக்கொண்டு சென்ற பிறகு இந்தப் பக்கம் வருகிறாள். “நாங்கள் அப்படிச் செய்வதில்லை'' என்று நீங்கள் கூறலாம். தேவன் உங்களை அவ்வண்ணமே காண்கிறார். நீங்கள் உங்களையே பார்த்துக்கொள்வதல்ல. தேவன் உங்களை அவ்வித மாகவே பார்க்கிறார். எந்த மனிதனும் தன்னைத் தவறாகப் பார்ப்ப தில்லை. தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் உன்னை நீ பார்க்கும்போது அதுதான் நீ தவறு செய்கிறாயா இல்லையா என்று கூறுகிறது. தாவீது அதைச் செய்திருந்தால், தான் தவறென்பதைக் கண்டிருப்பான். ஆகாப் அதைச் செய்திருந்தால் அல்லது அந்தத் தீர்க்கதரிசிகள் அதைச் செய்திருந்தால், தாங்கள் தவறென்பதைக் கண்டுகொண்டிருப்பார்கள். உறுதிப்படுத்தப்பட்டிருந்த ஒரு தீர்க்கதரிசி, ஆகாப் இறந்துபோவானென்றும் நாய்கள் அவன் இரத்தத்தை நக்கும் என்றும் கூறியிருந்தான். இவனுடைய தீர்க்கதரிசனம் அதோடு ஒத்திருந்தது. அப்போதுதான் சரி என்பதை இவன் அறிந்துகொண்டான். யோசபாத்தும் கூட அதைப் பார்த்து அறிந்துகொண்டிருக்க வேண்டும். மிகாயா அந்த தரிசனத்தைக் கண்டபோது அந்த நாட்களில் வசித்த மக்களின் எண்ணத்தோடு அது அதிகம் ஒத்திருக்கவில்லை. ஆனால் அவனிடம் “கர்த்தர் உரைக்கிறதாவது'' இருந்தது. அவன் சரியாக செய்தான். 74கவனியுங்கள், அந்த மகத்தான மணி நேரத்தை நாம் நெருங்கி வரும் இவ்வேளையிலே இந்நாளில் நடக்கும் சம்பவங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். தாவீது எதைச் செய்ய முயன்றான் என்பதைப் பாருங்கள். அதைக் குறித்த ஒரு சிறு குறிப்பை வைத்திருந்தேன். அவன் தன் சொந்த ஸ்தாபனத்திற் கொத்த - தாவீதின் நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவர முயன்றான். “கர்த்தருடைய முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல...'' என்று கர்த்தர் முதலில் நதியண்டையில் கூறியதை சற்றுத் திரும்பிப் பாருங்கள். சகோதரனே, அசெம்பிளிகளால் அதைத் தாங்க முடியவில்லை. மற்றும் யுனைடெட், மற்ற எல்லாராலும் அதை சகிக்க முடிய வில்லை. தங்களில் ஒருவர் அப்படி எங்காவது இருக்கவேண்டும் என விரும்பினர். ஆ! அவர்கள் எல்லாரும் அதைச் செய்ய விரும்பினர். பாருங்கள்? அப்படித்தான். அவர்களெல்லாரும் அதைத் தங்கள் சொந்த வீட்டிற்குக் கொண்டுவர விரும்பினர். அதை தாவீது தன் நகரத்திற்குக் கொண்டுவர விரும்பினான். ஏன்? அதற்கொரு ஸ்தலம் ஆயத்தமாயிருக்கவில்லை. இந்தச் செய்தியை ஒரு ஸ்தாபனத்திற்குக் கொண்டுபோக முடியாததின் காரணம் அதுதான். வார்த்தை; உடன்படிக்கைப்பெட்டி; கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய அடையாளங்களெல்லாமும் அவ்வாறே மாறாதவைகளாயிருக் கின்றன; அதை உங்களுடைய சொந்த ஸ்தாபனத்திற்கு கொண்டு போக முடியாது. அவர்கள் அதை ஒருபோதும் நம்பமாட்டார்கள். அங்கே அதற்கு இடமில்லை. லவோதிக்கேயா காலத்து சபைக்கு வெளியில் நின்றுகொண்டு அவர் உள்ளே போக முயற்சிக்கிறார் என்பதாக வேதம் கூறவில்லையா? அது எவ்வளவுதான் உண்மை யுள்ளதாயிருந்தாலும் மகத்துவமுள்ளதாயிருந்தாலும், மற்றெல்லா மிருந்தாலும், அது குறிக்கப்பட்ட இடமல்ல. அது எருசலேமி லிருக்கப்போகிறது. என்ன செய்யப்படவேண்டுமென்று தீர்க்கதரிசி அவர்களுக்கு சொல்லிய போது, அது பிறகு அங்குதான் சென்றது பாருங்கள். தாவீது அதைத் தன் சொந்த நகரத்திற்குக் கொண்டுவர விரும்பினான். அதற்கு ஸ்தலம் ஆயத்தமாயிருக்க வில்லை . 75கிறிஸ்துவே நம் உடன்படிக்கைப் பெட்டியாயிருக்கிறார். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிறிஸ்துதான் வார்த்தை. அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் கொள்கைகள்தான் வேண்டும், அவர்கள் ஸ்தாபனங்கள் வேண்டும். அல்லது - அல்லது - அல்லது ஒரு புது வாகனம் வேண்டும். கிறிஸ்துவே நமது உடன்படிக்கைப் பெட்டி என்பதை நினைவில்கொள்ளுங்கள். கிறிஸ்துதான் வார்த்தை என்பதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் வார்த்தைதான் உடன் படிக்கைப் பெட்டியாகும். அது சரியா? சரிதான். கிறிஸ்து தமது சரியான ஸ்தானத்திற்கு எந்த ஸ்தாபன இரதத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்பட முடியாது. கிறிஸ்து ஒரு தனிப்பட்ட நபருடன் இடைபடுகிறார். ஒரு கூட்டத்தினருடன் அல்ல. ஒரு கூட்டத்தினருடன் அவர் ஒருபோதும் இடைப்பட்டது (காரியங்களைச் செய்தது) கிடையாது; ஒரு தனிப்பட்ட நபர். எப்போது அவர்?... அப்படி அவர் செய்தால் அவர் தம்முடைய வார்த்தைக்கு முரண்பாடாக செய்கிறவராவார். ஆமோஸ் 3:7. தேவனுடைய வார்த்தையை பொய் சொல்ல வைக்க உங்களால் கூடாது. இல்லை, ஐயா! அது - அது சத்தியம். ஆனால் பாருங்கள். அவர்கள் முயற்சித்தார்கள்... உடன் படிக்கைப்பெட்டியானது ஒரு ஸ்தாபனத்தினால் தூக்கிச் செல்லப் பட முடியாது; பாருங்கள்? அங்கே அநேக தலைவர்கள் உள்ளனர் பாருங்கள். அப்படிச் செய்ய முடியாது. தாம் அப்படிச் செய்வ தில்லை என்று அவர் வாக்களித்தார். அப்படி அவர் செய்யவும் மாட்டார். தேவன் அதை ஏதோ ஒரு வழியில் செய்ய வாக்களித்திருப்பதே வேறு எந்த வழியிலும் தாம் அதைச் செய்ய மாட்டோம் என்று வாக்களித்ததின் காரணமாகும். (அத்தகைய எண்ணங்களை எண்ண வேண்டாம். என்னால் அதை உணர முடிகிறது. பாருங்கள்?) 76அதை ஒரு குறிப்பிட்ட முறையில் செய்வதாக அவர் வாக் களித்தார். அதற்கு மாறான எல்லா விதங்களிலும் செய்ய மாட்டார். பாருங்கள்? ஆமோஸ் 3:7இல் அவர் சொல்லியிருக்கிற அவருடைய மூல வழியின்படியேதான் அவர் செய்வார். அது அவரால் உறுதிப்படுத்தப்பட்டு சரியென்று நிரூபிக்கப்பட்டதா யிருக்கவேண்டும். இப்போது, இன்றைக்கு அவர் என்ன வாக்குத் தத்தம் பண்ணியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியானால் அவர் அதை இன்னும் செய்துகொண்டிருக்கிறார். அதையேதான் அவர் செய்யப்போவதாக கூறினார். அந்த ஏழு முத்திரைகளையும் திறந்து, என்னவெல்லாம் செய்வார் என்று கூறியுள்ளார். ஞானஸ்நானங்களும் மற்றக் காரியங்களும் இப்படிக் குழப்பமுற்றிருக்கும் காலத்தில், எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவதாகக் கூறினார். இப்போது அவருடைய சமூகத் திலேயே அவைகளெல்லாம் நிறைவேறியிருக்கின்றன. விஞ் ஞானம் அதை நிரூபித்திருக்கிறது. வானங்கள் அதை அறிவித் திருக்கிறது. மனிதர்கள் நின்றுகொண்டு அது நிகழ்வதை நேரிடை யாகப் பார்த்திருக்கின்றனர். அவர் சொன்ன ஒரு காரியத்தை யாகிலும் அவர் நிஜமாக்காமல் விட்டதில்லை. பார்த்துக் கொள் ளுங்கள். நாம் இன்று எந்த கட்டத்தில் ஜீவித்து வருகிறோம் என் பதைக் காணத்தக்கதாக எல்லாம் அவர் சொன்னவிதமாகவே நடந்துவருகிறது. 77இப்போது, தேவனுடைய ஆவியைப் பெற்ற எந்த மனிதனும் இது சத்தியம் என்பதை அறிந்திருக்கிறான். ஏனென்றால் தேவ ஆவியானவர் வார்த்தைக்கு விரோதமாக பேசமாட்டார். ஓ, இல்லை, அது தேவனுடைய வார்த்தையோடு ஒத்துச்செல்லும், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நான் சத்தமிட்டேன். நான் அன்னிய பாஷைகளில் பேசினேன். நான் ஆவியில் நடனமாடினேன்'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது கர்த்தருடைய பார்வையில் ஒன்றுமேயில்லை. பாருங்கள்? தாவீதும் அதையே தான் செய்தான்-ஒவ்வொரு காரியமும் அப்படியே செய்தான் அங்கே. தன் முழு பலத்தோடும் பாடினான்; மற்றெல்லாரும்கூட பாடினர். ஆனால் அவர்கள் மரணத்திற்குள்ளாக நேராகப் போய்க் கொண்டிருந்தனர். அது சரிதான்! அது காரியம் சித்திபெற வைக்கக்கூடியதல்ல. வார்த்தையே முக்கியம் வாய்ந்தது. கர்த்த ருடைய வார்த்தை. கர்த்தருக்குக் காத்திருப்பவர்கள். ஆம், ஐயா! 78பாருங்கள், தேவனுடைய ஆவியை தங்களுக்குள் பெற்றவர் கள் இன்றைக்குரிய வாக்குத்தத்தத்தைப் பார்க்கிறார்கள். அதைத் தாங்கள் காணும்வரை அதற்காக கவனித்திருந்து காத்திருக்கிறார் கள். அதைக் கண்டவுடன் ''அதுதான் இது'' என்கிறார்கள். தேவன் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துகிறார். நாத்தான்வேலைப்போல. பிலிப்பு சென்று நாத்தான்வேலைக் கண்டு 'இப்பொழுது மேசியாவைக் கண்டோம்'' என்று கூறினான். நாத்தான்வேல், “கொஞ்சம் பொறு, அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறதென்பதை அறிவேன்; ஆனால் நான் அதைப் பார்க்கட்டும்'' என்றான். அதை அவன் கண்டபோது, 'அதுதான் இது'' என்றான். அந்த ஸ்திரீ, ''நானறிவேன், நான் எல்லாவித மத சாஸ்திர விற்பன்னர்களையும் கேட்டிருக்கிறேன். நான் இதையும் அதையும் செய்திருக்கிறேன். நானே வேதாகமத்தைப் படித்திருக்கிறேன். இந்தக் காரியங்களைச் செய்கிறவரான மேசியா ஒருவர் வருகிறார் என்பதை அறிவேன். ஆகவே நீர் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும்'' என்றாள். அவர், “நானே அவர்'' என்றார். “வாருங்கள், ஒரு மனிதனைப் பாருங்கள், இதுதான் அது'' என்று அவள் சொன்னாள். தேவனுடைய வார்த்தையால் அடையாளம் காட்டப்பட்ட அந்த மேசியாவை தான் காணும்வரை அவள் காத்திருந்தாள். பிறகு, ”நானூறு வருடங்களாக நாம் காத்திருந்த காரியம் இதுதான். இத்தனை நாட்களாக நமக்கொரு தீர்க்கதரிசியோ மற்ற தேவ ஊழியக்காரரோ இருந்ததில்லை. இங்கே அவர் இருக்கிறார். அவரே, தாம் அவரே என்று கூறுகிறார். நான் செய்திருக்கும் காரியங்களை என்னிடம் கூறின ஒரு மனிதரை பாருங்கள்'' என்று கூறினாள். ஆனால் ஆசாரியர்களோ அவரைக் கொல்ல விரும்பி, கடைசியில் அதையே செய்யவும் செய்தனர். பாருங்கள்? ஆனால் அவர்களால் இன்று அவருடைய ஆவியைக் கொல்ல இயலாது. அது உண்மை! இல்லை, அவர்களால் அதைக் கொல்ல முடியாது. நம்மை அவரண்டை கூட்டிச் சேர்க்க அது இங்கேயுள்ளது. ஆகவே நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவன் எவ்வளவு மகத்துவமுள்ளவராய் இருக்கிறா ரென்றும், அவருடைய கிரியைகள் எவ்வளவு மகத்துவமுள்ளவை களாய் இருக்கின்றனவென்றும் கவனியுங்கள். அவர் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை. தேவன் தம்மால் அளிக்கப்பட்ட மூல வழி ஒன்றை, காரியங்களைச் செய்வதற்கென வைத்திருக்கிறார். அதற்கு மாறாக அவர் ஒருபோதும் செய்ய வேமாட்டார். 79இப்போது, கடைசி நாட்களில் தாம் என்ன செய்யப் போகிறார் என்பதைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். ஆகவே அவர் அவர்களுக்கு - நமக்கொரு செய்தியை அனுப்பியு மிருக்கிறார். இந்தச் செய்தியானது எலியாவுடையதும், எலிசா வுடையதும், யோவான் ஸ்நானகனுடையதுமான அதே அடை யாளத்தைப் பெற்றிருக்கும். அது மக்களின் இருதயத்தை ஸ்தா பனங்களிடமாய் அல்ல, மூல விசுவாசத்திற்கு, அப்போஸ்தலப் பிதாக்களிடத்திற்கு, திரும்பவும் வார்த்தைக்கு திருப்பும். இவை களெல்லாம் எப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன! எப்படி வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள கடைசி தூதன் சத்தமிடும்போது, ஏழாம் தூதனின் நாட்களில் இந்த இரகசியங்களெல்லாம்... ஏன் மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டு களும், கிறிஸ்துவின் சபை யாரும், யேகோவா சாட்சிகள் எல்லாரும் ஏன் இப்படிச் செய்கிறார்களென்றும்-இந்த இரகசியங் களெல்லாம்... கடைசி நாட்களில் ஏழு தூதர்கள் - ஏழாம் தூதனின் செய்தியில், அவன் காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கும்போதல்ல, அவன் தன்னுடைய செய்தியை அறிவிக்கத் தொடங்கும்போது, இந்தக் காரியங்கள் வெளிப்படுத்தப்படும். பாருங்கள், ஆயத்தப் படும் வருடங்களல்ல. ஆனால் அவன் தன் செய்தியை அறிவிக்கத் தொடங்கும்போது இந்த இரகசியங்களெல்லாம். வெளிப்படுத் தப்படும். ஆகவே இங்கே அவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக் கின்றன. ஜனங்களோ அவைகளை அறியாதிருக்கிறார்கள், மக்க ளாகிய நீங்கள் அதற்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள். உலகமானது சந்தேகத்தில் இருக்கத்தக்கதாக அந்த மகத்தான வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில், என்ன நடந்ததென்று அவர்கள் இன்னமும் ஆச்சயரிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 80டூசான் நகரில் உள்ள பெரிய வானிலை ஆராய்ச்சிக் கூடங்களில் உயரத்தில் இருந்த அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். என்ன நிகழ்ந்ததென்று இன்னமும் ஆச்சயரிப்படுகிறார்கள். அது என்ன? ''யாருக்காவது அதைப்பற்றி ஏதாவது தெரியுமா? என்ன, அது எப்படி நேர்ந்திருக்கக்கூடும்?'' என்று இன்னமும் செய்தித்தாள்களில் கேட்கிறார்கள். அவ்வளவு உயரத்தில் வானத்தில் முப்பது மைல் உயரத்தில் மூடு பனியோ, காற்றோ, ஈரப்பசையோ கிடையாது. ஓ, என்னே! ''உயர வானத்தில் அடையாளங்கள் காணப்படும். மேலும் இந்தக் காரியங்கள் நிகழும்போது, பல்வேறு இடங்களில் பூகம்பங்கள் ஏற்படும் போது அப்பொழுது மனுஷ குமாரனுடைய அடையாளம் வானத் தில் காணப்படும்.'' அந்த நாளிலே மனுஷகுமாரன் தம்மை மறுபடியும் வெளிப்படுத்துவார், அவர் தாமே வெளிப் படுத்தப்பட்டிருப்பார். உலகமானது சோதோம் கொமோராவைப் போல காணப்படும். ஓ, என்னே சகோதரர்களே, ஆவிக்குரிய காரியங்களைப் பற்றின அறியாமையை கொண்டிராதிருங்கள் பாருங்கள்? வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவை களால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, வார்த்தையைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவை களே. சத்தியத்தைக் குறித்தும், தேவன் இந்த மணிநேரத்தில் செய்கிற காரியங்களைக் குறித்தும் சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே. 81ஆகவே இப்போது கவனியுங்கள்! தேவனுடைய ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் இந்தக் காரியங்களுக்காகக் காத்திருக் கிறார்கள். அவைகளை அவர்கள் காணும்போது, அவர்கள் அவை களை விசுவாசிக்கிறார்கள். “என்பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளா விட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுத்தயாவும் (அவரே வார்த்தை), அவர்கள் என்னிடத்தில் வருவார்கள்'' அவர்கள் என்னிடத்தில் வருவார்கள். இன்று காலையிலே நான் சற்று கடூரமாக பேசியிருக்கிறேன். பாருங்கள்? அவர்கள் கர்த்தருக்குக் காத்திருக்கிறார்கள். அப்படிக் காத்திருக்கும் போது இன்றைக்குரிய வாக்குத்தத்தம் உறுதிப் பண்ணப்படுவதைக் காண்கிறார்கள். அவர் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணியிருந்தபடியால், அது நிறைவேறுவதைக் காணும் போது, அவர் வார்த்தையின் மீது அவர்களுக்குள்ள விசுவாசத்தை அது புதுப்பிக்கிறது. இங்கே அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார். அப்படியானால் அதிலே சந்தேகம் ஒன்று மில்லை. தேவன் பேசுகிறார்; அவருடைய வார்த்தை முதலில் பேசுகிறது, அவருடைய வார்த்தை 'செய்வேன்' என்று கூறியதை அவருடைய ஆவி நிறைவேற வைக்கிறது. ஓ, நம்மிடம் அநேகப் போலிகள் உண்டு. நாம் இன்னும் அவைகளை ஏராளமாகப் பெற்றிருக்கின்றோம். உண்மையான இருதயமுள்ள மனிதர்கள் காரியங்களை இந்த விதத்திலும் அந்த விதத்திலும் செய்ய முயல்வர். ஆனால் என்ன நிகழ்ந்தது என்று கவனியுங்கள். ஜனங்கள் தங்கள் கைகளைப் போடுவார்கள், போட்டு - பிறகு சாவார்கள். பாருங்கள்? 82கவனியுங்கள். ஸ்தாபனங்களைக் குறித்த எந்த மனித னுடைய திட்டமும் ஒருக்காலும் வேலை செய்யாது. தாங்களே உண்டாக்கிக் கொண்ட தங்களுடைய சொந்த ஸ்தாபன உடன் படிக்கைப் பெட்டிக்கு அங்கத்தினர்களைச் சேகரித்தல்... தேவன் ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தை வைத்திருந்ததில்லை. அவர் ஒருபோதும் வைத்திருக்கவும் மாட்டார். அது மனிதனால் உண் டான ஒரு காரியமாகும். 83ஆகவே இன்று நாம் மக்களை இழுப்பதும், பெரிய மதப் போராட்டங்களையும் எழுச்சிக் கூட்டங்களையும் நடத்துவதுமான எல்லா காரியமும், மெதோடிஸ்ட் உடன்படிக்கைப் பெட்டி யையும், பாப்டிஸ்ட் உடன்படிக்கைப் பெட்டியையும், ப்ரெஸ் பிடேரியன் உடன்படிக்கைப் பெட்டியையும் நிரப்புவதற்கே ஏதுவாயிருக்கிறதென்று வியக்கிறேன். வார்த்தையாகிய கிறிஸ்து வின் உடன்படிக்கைப் பெட்டியைக் குறித்து என்ன? மணவாட்டி வார்த்தையாக இருக்கவேண்டும். மணவாளனாகிய கிறிஸ்துவின் பாகமாக இருக்க அவள் வார்த்தையாக இருக்கவேண்டும். அவர் வந்த நாளின் வார்த்தையாக அல்ல, இந்நாளில் அவர் வாக்குத் தத்தம் பண்ணினபடியே இந்நாளுக்குரிய வார்த்தையாக இருக்க வேண்டும். தம் மணவாட்டியை உருவகப்படுத்தி உண்டாக்க தம் வார்த்தையை அவர் அனுப்பினதாகக் கூறினார். அதை நாம் காண்கிறோம் என நம்புகிறேன். இப்போது உங்களுடைய சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கவேண்டாம். மற்ற யாருடைய கருத்தையும் எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். இங்கிருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை, வேதாகமத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது கூறுகிறது... இந்தக் கடைசி நாளில் தம்முடைய மணவாட்டியை எப்படி தெரிந்தெடுப்பார் என்று தேவன் தம்முடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அதை நீங்கள் அறிந்திருந்தீர் களா? நேரத்தையும் காலத்தையும் தெரிந்தெடுப்பது போல, கிறிஸ்துவைத் தெரிந்தெடுக்கும் தம்முடைய மூல திட்டத்தின் படியே அவர் செய்யப்போவதாக அவர் வாக்களித்திருந்தார். மணவாட்டி வார்த்தையின் ஒரு பாகமாயிருப்பதால் தம் மண வாட்டியைக் குறித்த இக்காரியத்தில் அவர் தவறமுடியாது. அவர் கிறிஸ்துவை ஒரு ஸ்தாபனத்தின் மூலம் தெரிந்தெடுக்காததால், அவர் மணவாட்டியையும் ஒரு ஸ்தாபனத்தின் வாயிலாக தெரிந்தெடுக்க முடியாது. கிறிஸ்து ஒரு ஸ்தாபனத்திற்கு வந்தாரா? அவர் ஒரு ஸ்தாபனத்தின் மூலமாய் வந்தாரா? இல்லை! அவர்கள் அவரை புறக்கணித்தனர். நல்லது, ஸ்தாபனங்கள் அதைத்தான் அப்போது செய்தன; அப்படியானால் அவர் ஒரு மணவாட்டியைத் தெரிந்தெடுக்கும்போது, அவர் வேறு எந்த வழியிலாவது வரக் கூடுமா? அவர் கிறிஸ்துவை இங்கு எப்படிக்கொண்டு வந்தார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாக. அது சரிதானா? தம்முடைய மணவாட்டியை அவர் இங்கு எப்படிக் கொண்டு வருவார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாக. அவர் வந்தபோது அவரை எப்படி அடையாளம் காட்டினார்? வனாந்தரத்திலிருந்து வந்தவனாய் எலியாவின் ஆவியைப் பெற்றிருந்த ஒரு மனிதனின் மூலமாக. தம்முடைய மணவாட்டியை அவர் எப்படி அடையாளம் காட்டு வார்? சோதோமின் நாட்களில் நடந்தது போல, தாம் இவ்வுலகை அழிக்குமுன் அவர் அதையே செய்வதாக (எலியாவின் ஆவியைப் பெற்ற ஒருவரால் மணவாட்டியை அடையாளம் காட்டுவது) மல்கியா 4ம் அதிகாரத்தில் வாக்களித்துள்ளார். 84ஞாபகமிருக்கட்டும், சோதோம் எரிந்தது. அது சரிதானா? நல்லது. இந்த உலகமும் எரிய இருக்கிறது. சோதோம் கொமோ ராவைப் போலிருக்கும் நாட்களில் மனுஷகுமாரன் வெளிப்படு வார் என்று லூக்கா 17ம் அதிகாரம் 30வது வசனத்தில் கூறப் பட்டுள்ள அந்த நேரத்தில் அது எரியும். பிறகு என்ன சம்பவிக்கும்? மல்கியாவின் தீர்க்கதரிசனத்தின்படி அவர் பூமியை மறுபடியும் எரிப்பார். நீதிமான்களோ கிறிஸ்துவின் ஆயிர வருஷ அரசாட்சியின்போது துன்மார்க்கரின் சாம்பலின் மீது நடக்கிறவர்களாக வருவார்கள். அது சரியா; பாருங்கள்? ஆகவே நாம் சரியாக கடைசி காலத்தில் ஜீவிக்கிறோம். நாம் வாசலருகே உட்கார்ந்துகொண்டு இப்போது அவர் வரக் காத்திருக்கிறோம். 85கவனியுங்கள். மணவாளனை தெரிந்தெடுத்த தம்முடைய மூல வழியின்படியே மணவாட்டியையும் தெரிந்தெடுக்கப் போவதாக தேவன் தம்முடைய வார்த்தையில் வாக்களித்தார். அவர் அதைத் தீர்க்கதரிசிகள் மூலமாக முன்னுரைத்து அதை அடையாளம் காட்ட ஒரு தீர்க்கதரிசியையும் அனுப்பினார். யோர்தானின் கரையோரம் இந்தத் தீர்க்கதரிசி உட்கார்ந்து கொண்டு, “இதோ'' என்றான். அவர்களோ, “நீர்தான் மேசியா, அல்லவா?'' என்றார்கள். அவனோ, ”இல்லை, நான் மேசியா இல்லை“ என்றான். “நீ மேசியாவாகத்தான் இருக்கவேண்டும்.'' “ஆனால் நான் அவரல்ல, ஆனால் அவர் உங்கள் நடுவில் நின்று கொண்டிருக்கிறார். அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கவும் நான் பாத்திரனல்ல. அவர் வரும்போது தம்மையே வெளிப்படுத்துவார்...'' ஆகவே இன்று அவர் அந்த பரிசுத்த ஆவி என்னும் நபரில் நம் மத்தியிலே நின்றுகொண்டு, தம்மை மேலும் மேலும் வெளிப்படுத்திக்கொண்டு தம்முடைய சபையிலே வந்து கொண்டிருக்கிறார். தம்மை வெளிப்படுத்துகிறார். ஏனென்றால் மணவாளனாகிய அவரும் மணவாட்டியும் ஒன்றாயிருப்பார்கள். அவரை வெளிப்படுத்துவார்கள். ஆகவே ஒரு நாளிலே, உங்கள் இருதயத்தில் உணர்ந்து அந்த ஒன்றை, அவருடைய அடையாளங்களைக் காண்கின்ற உங்கள் முன்னிலையில் செயலாக்கப்படுவதை நீங்கள் காண் பீர்கள். அப்போது நீங்களும் அவரும் ஒன்றாயிருக்கின்றீர்கள். நீங்கள் வார்த்தையால் இணைந்தீர்கள். அப்போது ஆதியிலிருந்த வார்த்தை ஆதியாகிய தேவனிடத்திற்குச் செல்லும், 'அந்த நாளிலே நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும் நீங்கள் என்னிலுமிருப்பதை அறிந்துகொள்வீர்கள்'' அல்லேலூயா! நாம் இருக்கிறோம்! அல்லேலூயா! நம் மத்தியிலே அவர் தம்மை உருவகப்படுத்திக் கொள்வதைக்காண நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் வார்த்தைக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை யாரோ ஒருவருடைய மனவெழுச்சியினாயிலல்ல, பாடுதல், குதித்தல், நடனமாடுதல் போன்ற காரியங்களாலுமல்ல அவரு டைய வார்த்தையால் (ஆமென்) காண மிகவும் சந்தோஷப்படு கிறேன். அவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 86அவர்கள் அதைக் கொண்டு வந்தபோது - பாருங்கள்... ஆலயத்தைக் கட்டி உடன்படிக்கைப் பெட்டியை அதனுள் கொண்டு வந்தார்கள். அப்போது தேவன் ஒரு அக்கினி ஸ்தம் பத்தில் அங்கே உள்ளே சென்றார். ஆமென்! தாவீது குதித்துக் கொண்டும் உரக்க சத்தமிட்டுக் கொண்டுமிருந்தான். எல்லாப் பாடகர்களும் ஆசாரியர்களும்கூட தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக இருந்துகொண்டு அதையே செய்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை அங்கு கொண்டு போகுமுன் தேவன் தம்முடைய இடத்திலும் ஸ்தானத்திலும் அந்த உடன்படிக்கைப் பெட்டியை அடையாளம் காட்டினார். அக்கினி ஸ்தம்பமானது அவர்களுக்கு முன் சென்று வழியைக் காட்டினது. அக்கினி ஸ்தம்பமானது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே சென்று, கேரூபீன்களின் செட்டைகளின் மேலே சென்று, தன்னுடைய இளைப்பாறும் ஸ்தலத்தை வந்தடைந்தது. தேவனுடைய மகிமை யானது அங்கே உள்ளேயிருந்தது. எப்படி ஊழியஞ்செய்வதென்று காணக் கூடாதவர்களாயிருந்தார்கள். ஆமென்! அவர் தம்முடைய மணவாட்டிக்காக வரும்போது அது ஒவ்வொரு மத சாஸ்திர விற்பன்னனுடைய கண்களையும் மறைத்துப்போடும். அவர்களுக்கு நேர்ந்தது போல, அவள் நடு இரவிலே எடுத்துக்கொள்ளப்படுவாள். அவள் செல்வதை அவர்கள் காணக்கூடமாட்டார்கள். ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 87கவனியுங்கள். தேவன் தாம் எதைச் செய்வார் என்பதைக் குறித்து வாக்களித்திருக்கிறார். தேவன் தம்முடைய மணவாட் டியை வெளியே கொண்டு வருவதாக வாக்குத்தத்தம் பண்ணி யிருக்கிறார். ஒரு வித்தானது அங்கிருக்கும், சாயங்காலத்திலே ஒரு வெளிச்சமும் உண்டாகியிருக்கும் என்றும் எப்படி இந்தக் காரியங்களையெல்லாம், சரியாக. அவர் ஆரம்பத்திலேயே பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் திட்டமிட்ட பிரகாரமாகவே செய்வாரென்றும் வாக்களித்திருக்கிறார்-அது ஸ்தாபனங்களின் மூலமாக நிறைவேறுவதில்லை. இன்று நாம் உபயோகிக்கும் ஒழுங்கு முறைகளின் மூலமாகவுமல்ல. நாம் மரணத்தையே விளைவிக்கிறோம். ஜனங்கள் தங்கள் கைகளை அதில் போட்டு அதினால் மரிக்கிறார்கள். பாருங்கள்? 88சாயங்காலவேளைச் செய்தியாகிய வார்த்தை, சாயங்கால வேளைக்குரிய பலன்களைக் கொடுக்கிறதாயிருக்கவேண்டும். சாயங்கால வேளைச் செய்தி சாயங்கால விதைகளை விதைக்க வேண்டும், காலைவேளை விதையல்ல. அது சரிதானா? மத்தியான வேளைக்காட்சி - அதன் விதைகள் அங்கே ஸ்தாபனமாயிருந்தன. அது மரித்து அழிந்துபோயிற்று, ஆனால் சாயங்காலச் செய்தியோ சாயங்கால வேளைக்குரிய வெளிச்சத்தைக்காட்டும்; சாயங்கால வேளைக்குரிய பலன்களைக் கொடுக்கும். சாயங்கால நேர செய்தி... இயேசுவின் காலத்தில் மத்தியான வேளைச் செய்தி மத்தியான வேளைப் பலன்களைக் கொடுத்தது. ஆரம்பகாலச் செய்தி ஆரம்ப காலப் பலன்களைக் கொடுத்தது, சிருஷ்டிப்பை உண்டாக்கியது. அவர் தம்முடைய குமாரனை தம்முடைய சொந்த சாயலில் மத்தியான வேளையில் உண்டாக்கினார். சாயங்கால வேளையிலோ அதற்காக ஒரு மணவாட்டியை உண்டாக்குகிறார். பாருங்கள்? எதைக்கொண்டு? தம்முடைய வார்த்தையால். அவர் இந்த பூமியை எவ்விதம் உருவாக்கினார்? எப்படிப் பேசி அதை உண்டாக்கினார்? தம்முடைய வார்த்தையால். அவருடைய குமாரன் யார்? வார்த்தை, “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது... அந்த வார்த்தை மாமிசமாகி வாசம் பண்ணினார்...''. அவர் தம்முடைய மணவாட்டியை எப்படி எடுப்பார்? வார்த்தையால், ஒரு புதிய இரதத்தின் மூலமாக அல்ல, ஏதோ ஒரு வேதப்பண்டிதனின் கருத்துப்படியல்ல. ஆனால் தமது வார்த்தையின்படியே அவர் அவளை உறுதிபடுத்துவார். இப்போது அதோடு ஒரு காரியத்தையும் கூட்டாதீர்கள். அல்லது ஒரு காரியத்தையும் அதிலிருந்து எடுக்காதீர்கள். அதிலிருக்கிற விதமாகவே அதை விட்டு விடுங்கள். பார்த்தீர்களா? 89சாயங்கால நேரத்தில், தாம் வெளிப்படுத்துவதாக இந்த ஏழு முத்திரைகளையும் திறந்து, அந்த சபைகள் அங்கே என்னத்தை தவறவிட்டன என்பதைக் காட்டுவதாக அவர் வாக்களித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரம், மல்கியா 4, லூக்கா 17:30 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளவைகளை செய்வதாக கூறினார், ஆகவே நாம் அதைக் கலக்கவேண்டாம். அது இருக்கிற விதமாகவே அதை வைப்போம். முடிக்கையில் நான்... பன்னிரண்டு மணி ஆக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களே உள்ளன. இதைச் சொல்லி நான் முடிக்கட்டும். நண்பர்களே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செவிகொடுங்கள். இந்தக் காரியங்கள் நீங்கள் நம்பாமல் இருக்கக் கூடாதபடி மிகவும் வெளிப்படையாய் உள்ளன. நீங்கள் காணாமல் இருக்கக் கூடாதபடி இது மிகவும் வெளிப்படையாய் உள்ளது. ஆனால் உங்களுடைய... இப்போது, இந்தப்புதிதான காரியங் களினாலே இழுக்கப்படாதிருங்கள். இன்று அவர்கள் கொண்டுள்ள காரியங்களாலும் இழுப்புண்டு போகாதிருங்கள். அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அவர்கள் எவ்வளவு உத்தமமானவர்களாயிருந்தாலும் சரி; அவர்கள் நியாயப்பிரமாணத்தின்படியும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களின்படியும் பேசாவிட்டால் அவர்களில் ஜீவனில்லை என்று வேதாகமம் கூறியிருக்கிறது. பார்த்தீர்களா? 90தாவீது தான் செய்வது சரியென்று எண்ணினான்; அதை உத்தமமாகவும் செய்ய முற்பட்டான். அந்த ஆசாரியர்களும் தாங்கள் செய்வது சரியென்று எண்ணினர். ஆனால் அவர்கள் அதைக்குறித்துக் கர்த்தரைக் கலந்தாலோசிக்கத் தவறினர். எப்படி அவர்கள் அதை செய்திருக்கக்கூடும்? ''நாங்கள் அதைக்குறித்து ஜெபித்தோம்'' என்று அவர்கள் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் தேவன் அதைச் செய்கிற விதம் அதுவல்ல. தம்முடைய ஊழியக் காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு அதை முதலில் வெளிப்படுத்தாமல் அவர் எதையும் செய்யமாட்டார் என்று அவர் வாக்களித்தார். நாத்தான்வேல் அங்கேயே அவர்கள் மத்தியிலேயே நின்றுகொண் டிருந்தான். ஆனால் அவர்களோ அவனைக் கலந்தாலோசிக்கவே யில்லை . 91இப்போது 1 நாளாகமத்தில் தொடர்ந்து சில அதிகாரங்களைப் படியுங்கள்; தாவீது தன் வீட்டிலே உட்கார்ந்து கொண்டு, (நாத்தான்வேல் அவனுடன் உட்கார்ந்துகொண்டிருந்தான்) “கர்த் தருடைய உடன்படிக்கைப்பெட்டி திரைகளின் கீழிருக்க நான் கேதுருமர வீட்டிலே வாசம் பண்ணுவது சரியா'' என்று கேட் பதைக் காண்பீர்கள். தாவீது செய்யும்படியாக எதைச் சொல்வது என்று நாத்தான்வேல் கர்த்தரிடமிருந்து கண்டறிந்தான். அவன் தவறாக செய்திருந்தான். ஆகவே தேவன் நாத்தான் வேலிடம், ''நான் அவனை நேசிக்கிறேன் என்று என் தாசனாகிய தாவீதிடம் சொல். பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற் கொத்த நாமத்தை அவனுக்கு உண்டாக்கினேன். ஆனாலும் அவன் எனக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டாம். (பாருங்கள்) அவன் எனக்கு முன் குறைவுள்ளவனானான். (பாருங்கள்) ஆலயத்தைக் கட்ட அவனை நான் அனுமதிக்க முடியாது. ஒரு மனிதனை எழும்பப்பண்ணுவேன். அவனுடைய குமாரன் தேவனுடைய நித்திய வீட்டை எழும்பப் பண்ணுவான்'' என்றார். அது நிச்சயமாக தாவீதுதான். சாலமோன் மாதிரியாக அமைந்தான். ஆனால் அவனும் குறைவுள்ளவனானான். ஒவ்வொரு மனிதனும் தவற வேண்டும். ஒவ்வொரு மானிடனும் தவறியே ஆகவேண்டும். தவற முடியாதவர் தேவன் ஒருவரே. அவர் தோற்க முடியாது. அந்த ஒரு காரியத்தை, தோற்றுவிடுவதை, தேவன் செய்ய முடியாது. தேவன் வார்த்தையாயிருக்கிறார். வார்த் தையோ.... இப்படி மற்ற வழியில் அது வரப்போகிறது போல் அது எவ்வளவுதான் காணப்பட்டாலும் வார்த்தை உரைத்த வழியிலேயே அது வந்து சேரும். 92இப்போது ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பரு வத்தையும் காலத்தையும் தொடர்ந்து கவனிக்கவேண்டும். பாருங்கள்? நீங்கள் எந்தப்பருவத்தில் இருக்கிறீர்கள். எந்த நேரம் என்று கவனித்து அது மெய்யாகவே சத்தியம் என்ற உறுதியைப் பெற அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். இப்போது இந்த எல்லாக் கட்டாயமான காரியங்களையும், எல்லா வார்த்தையையும், எல்லா மாதிரிகளையும், காரியங்களையும் எடுத்துக்கொண்டு நீங்கள் எங்கே உட்கார்ந்திருக்கிறீர்களென்று பாருங்கள். நாம் வசித்து வருகிற மணி நேரத்தைக் குறித்து சிந்தியுங்கள். பூமியில் ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு கீழே விழ ஆயத்தமாயிருப்பதை அங்கே நோக்கிப்பாருங்கள். விஞ்ஞானம் அதைக்கூறுகிறது. அவர்கள் கடிகாரத்தில் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள். ஒரு சில வருடங்களுக்குமுன், “நள்ளிரவுக்கு இன்னும் மூன்றே நிமிடங்களுள்ளன,' என்று அவர்கள் கூறினார்கள். ஒரே நிமிடமே இருக்கலாம்; இப்போது ஒருவேளை அரை நிமிடமே இருக்கக்கூடும். “அது நம்முடைய தலைமுறையில் நிகழாது'' என்று அவர்கள் கூறினார்கள். ''அது ஐந்து நிமிடத்தில் நிகழக்கூடும்.'' மேலும் கவனி யுங்கள், அடுத்தபடியாக அவர் சொன்னது, ''ஐந்து வருடங்கள்''. இப்போது நான் அதை ஒருபோதும் சொல்லவில்லை, விஞ்ஞானி தான் அதைக் கூறினார். கலிபோர்னியாவிலிருந்து அவர்கள் ஈக்களைப்போல கூட்டங்கூட்டமாக வெளியேறுகிறார்கள். பாருங்கள்? நல்லது, லோத்து சோதோமை விட்டு வெளியேறின அதே நாளிலே பூமியின் மேல் அக்கினி மழை பெய்தது. இந்த நாட்களில் ஒரு நாளிலே தேவன் நம்முடைய செய்தியை எடுத்துக்கொள்ளப் போகிறார், நாமும் இங்கிருந்து போய்விடப்போகிறோம். அப்போது, அவருடைய சரீரமாகிய சபை, மணவாட்டி, போய் விட்ட பிறகு, நிச்சயமாக ஏதோ ஒன்று நிகழப்போகிறது. 93இப்போது, நான் வேதாகமத்திலிருந்து உங்களுக்கு ஒரு பகுதியை வாசித்துக்காட்ட விரும்புகிறேன். நீங்களும் என்னோடு அதை வாசிக்க விரும்புகிறேன். முடிவாக, உபாகமம் 4ம் அதிகாரத்திற்கு உங்கள் வேதத்தை நீங்கள் திருப்ப விரும்புகிறேன், நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, அநேகமாக போதுமானது சொல்லப்பட்டிருக்கிறதென்று நினைக்கிறேன். இங்கே இரண்டு இடங்களிலிருந்து வாசிக்கப்போகிறேன். இந்தச் சபைக்கும், ஒலி நாடாக்களில் இச்செய்தியைக் கேட்பவர்களுக்கும், தேசத்தின் மற்றப்பகுதிகளில் எங்களோடு டெலிபோன் மூலமாக இணைக்கப் பட்டிருக்கிறவர்களுக்கும் நான் கூறுவதாவது: நீங்கள் இதை மெய்யாகவே கூர்ந்து கவனிக்க விரும்புகிறேன். நீங்கள் இதைத் தவற விட்டுவிடவேண்டாம். நான்... ஒரு காரியமாயிருக்கிறது. இது உபாகமம் 4ம் அதிகாரம். இப்போது, முதலாம் வசனத்தில் ஆரம்பிக்கப்போகிறேன். முதலாம் வசனத்தை வாசிக்கவிரும்பு கிறேன். பிறகு 25ம் 26ம் வசனங்களை வாசிக்கப்போகிறேன். நீங்கள் வீட்டிற்குச் சென்றபிறகு அது எல்லாவற்றையும் படிக்கலாம். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்றிரவு திரும்பவும் வர வேண்டியிருப்பதால், நாம் நேரத்தோடு வெளியே போகத்தக்கதாக சற்று நேரத்தை மிச்சப்படுத்துவோம். இந்தத் தீர்க்கதரிசி பேசு வதைக் கேளுங்கள். அவன் தேவனுடைய சமுகத்தில் இருந்திருந் தான். தான் என்னத்தைப் பேசுகிறோம் என்பதை அவன் அறிந் திருந்தான். கவனமாய்க் கேளுங்கள் : “இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும் படிக்கும், (அது நம்முடைய ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு மாதிரியாயிருக்கிறது).... நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம். அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். (அதோடு ஒரு காரியத்தையும் கூட்டாதே, அதிலிருந்து ஒரு காரியத் தையும் எடுத்தும் போடாதே. தரித்திரு, அது சொல்லு கிறதையே சொல்). பாகால் பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால் பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப் போட்டார். (இப்போது, நீங்கள் ஸ்தாபனங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாயிருக் கிறீர்கள். பாருங்கள். பாருங்கள்?) ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள் வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள். (நீங்கள் உங்கள் ஸ்தாபனங்களோடு ஒருபோதும் மரிக்க வில்லை; நீங்கள் இப்போது ஜீவனோடும் தேவனுடைய சமுகத்திலும் இருக்கிறீர்கள். கூர்ந்து, இதை இழந்துவிட வேண்டாம்)“ இப்போது இருபத்தைந்தாவது வசனம். அவர்கள் தேசத் தில் பிரவேசிக்கும்போது என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். ''நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து... (அதுதான் நடந்தது)... யாதொரு விக்கிரகத்தையாவது... (வேறு ஏதாவது)... யாதொரு சாயலான சொரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க... (கவனமாய்க் கேள்!)... அவர் பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்தால், நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல் ... (அல்லது இடம்)... சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத் தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்;... (பாருங்கள்?) ... நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.'' 94ஒரு அக்கினி ஸ்தம்பத்தைக் கொண்டு தேவனால் அவன் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, தங்களை வெளியே அழைத்துச் செல்ல எழுப்பப்பட்ட தேவனுடைய ஊழியக்காரனென்று நிரூபிக்கப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்த பின்பு, இஸ்ர வேலிடம் மோசே இந்த வார்த்தைகளைக் கூறினான். அவர்கள் தேசத்திற்குள் போகுமுன், அவர்கள் பிரவேசிக்குமுன், மோசே கூறியதாவது: இப்பொழுது “நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தைகளைக் குறித்து, உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன். அதோடு நீங்கள் ஒரு காரியத் தைக் கூட்டினாலோ அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டாலோ, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் தங்கமாட்டீர்கள்.'' கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கூறுகிறேன். ஒரு காரியத்தையும் நீங்கள் கூட்டவே வேண்டாம். உங்கள் சொந்தக் கருத்துக்களை எடுக்கவோ அதில் போடவோ வேண்டாம். ஒலி நாடாக்களில் என்ன சொல்லியிருக்கிறதோ அதையே சொல்லுங்கள். என்ன செய்யவேண்டுமென்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டிருக் கிறாரோ அப்படியே சரியாக நீங்கள் செய்து விடுங்கள். அதோடு கூட்டாதீர்கள். 95அவர் எப்போதும் போல, தம்முடைய வாக்குத்தத்தத்தை நமக்கு நிறைவேற்றுகிறார். அவர் அளித்திருக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அவர் நிறைவேற்றியிருக்கிறார். என்ன நடக்கும் என்று அவர் உங்களுக்கு சொல்லியிருக்கிறாரோ, அது நடந்ததா? நான் இன்று உங்களுக்கு முன்பு வானங்களையும் பூமியை யும் ஒரு சவாலாக வைக்கிறேன். தேவன் எதையாவது எப்போதாவது சொல்லி அதை நிறைவேற்றாமலும் நமக்கு தாம் என்ன செய்வார் என்று சொல்லி அதை அப்படியே செய்யாமல் போனதும் உண்டா? தாம் செய்வோம் என்று அவர் சொன்ன வண்ணமாகவே அவர் செய்திருக்கிறாரா? சரியாக அப்படியே செய்திருக்கிறார்! அவ்வண்ணமாகவே அவர் தொடர்ந்து செய்வார். அதோடு கூட்ட மட்டும் வேண்டாம். அதிலிருந்து எடுக்கவும் செய்யாதீர்கள். அதை விசுவாசித்து உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாக நடவுங்கள், ஏனென்றால் தேசத்திற்குள் போவதை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அப்போது நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள். இத்தகைய வாழ்க்கைக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி வரமாட்டீர்கள். நீங்கள் சாகாமையுள்ளவர் களாய் திரும்பி வருவீர்கள். சாத்தான் கட்டப்பட்டு, பாவமானது முற்றிலும் நீக்கப்பட்டிருக்கும்போது திரும்புவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்தப் பூமியில் ஆயிரம் வருஷங்கள் வாழ்வீர்கள். ''ஏனென்றால் சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். நகரத்திற்குள் பிரவேசிக்கத்தக்கதான அதிகாரத்தைப் பெறத்தக்க தாக அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்கிறவன் பாக்கியவான். சூனியக்காரரும், பொய்யரும், வேசிக்கள்ளரும், நாய்களும் அவ்விடத்தில் பிரவேசிப்பதில்லை.'' அவைகள் மீட்கப்பட்டவர்களுக்கும் அவருடைய கற்பனைகளில் நடப்பவர் களுக்கும் மட்டுமே. 96ஏதாவது புதிய காரியத்தை எடுத்துக்கொள்ளாதீர்கள். அவைகள் எங்கும் பறக்கின்றன. அதைவிட அதிகம் இன்னும் வரும். ஆனால் இந்தப் புதிய காரியங்களை எடுத்துக்கொள்ளா தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் எது சத்தியம் என்பதை உங்களுக்குப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். உங்கள் தேவனா கிய கர்த்தர் எது சத்தியம் என்பதை தம்முடைய வார்த்தையினாலும் தம்முடைய ஆவியினாலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். “பராக் கிரமத்தினாலும் அல்ல, பலத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்''. ஆவியானவர்... தேவன் தம்மை ஆவி யோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுகிறவர்களைத் தேடுகிறார். ”உமது வசனமே சத்தியம்''. மேலும் இயேசுகிறிஸ்து நேற்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவர் முற்றிலுமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் உங்களுக்கு சாயங்கால வித்துக்களைக் காட்டியிருக்கிறார். அவர் உங்களுக்கு அதை வார்த்தையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தம்முடைய ஆவியினால் அதை உங்களுக்கு நிரூபித்திருக்கிறார். 97ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தைத் துவக்கவோ, முயற் சிக்கவோ செய்யாதீர்கள். வேறு எதன் மீதும் கட்ட முயற்சிக்கா தீர்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையாய்த் தரித்திருங்கள். ஏனென்றால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாகச் செல்ல கதவுகள் சீக்கிரம் திறக்கப்படும் போலத் தெரிகிறது. மணவாட்டியும் மணவாளனும் சிங்காசனத்தில் தங்கள் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும் அந்நேரத்தில் நாம் மெய்யான பாடலோடும் களிப்போடும் உள்ளே பிரவேசிப்போமாக. தாழ்மையாய் ஜீவியுங்கள்; அன்போடு ஜீவியுங்கள். ஒருவரை ஒருவர் நேசியுங்கள். உங்களுக்குள் ஒன்றையும் எழும்பவிடாதீர்கள். யாராவது ஒருவருக்கு விரோதமாய் உங்கள் இருதயத்தில் ஏதாவது எழும்புவதைப் பார்ப்பீர்களானால், அதை உடனேதானே அங்கிருந்து அப்புறப்படுத்துங்கள். விடா திருங்கள்... சாத்தான் உங்களிடையே வர தன்னால் இயன்றவரை முயற்சிப்பான். பாருங்கள்? அதை நடக்கவிடாதீர்கள். நயமாக பேசக்கூடிய நாவையுடைய யாராவதொருவர் வந்து உங்களை அதிலிருந்து (சத்தியம்) அப்பாலே கொண்டு போக முயற்சிக்க லாம். அவர்கள் மோசேயிடம் பேசி அவன் நின்று தரித்த தேவ னுடைய சமுகத்தைவிட்டு அவனைப் பிரிக்கக் கூடும் என்று நினைக் கிறீர்களா? இல்லை, ஐயா; இல்லை. நாம் அதிலிருந்து எடுப்பதில்லை, அல்லது அதோடு கூட்டுவதில்லை. கர்த்தர் உரைத்தவிதமாகவே அதை வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு எந்த ஸ்தாபனமும் வேண்டாம். நமக்கு எந்த சங்கங்களும் வேண்டாம். நமக்கு எவ்விதக் குரோதமும் வேண்டாம். நமக்கு எவ்விதச் சச்சரவும் வேண்டாம். நமக்கு தேவனே வேண்டும். அவர் வார்த்தையா யிருக்கிறார். இப்போது நாம் தலைகளை வணங்குவோமாக. 98ஓ, தேவனே, நான் ஆவிக்குரிய கண்ணோடு சுற்றிலும் பார்க்கிறேன். என்ன நடந்துகொண்டிருக்கிறதென்பதைக் காண முயற்சிக்கிறேன். நான் உம்முடைய வார்த்தையை, அது உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் விதத்தை, அது நிரூபிக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கிறேன். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கே நதியண்டையிலே நீர் உரைத்தது இப்போது முப்பத்து மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னும் இத்தனை ஆண்டுகளாக நிறைவேறி வந்திருக்கிறது. தேவரீர் சொன்னதையே செய்து வருகிறீர். நீர் சொன்னதையே செய்து வந்திருக்கிறீர். கர்த்தாவே, அதை எவ்வளவேனும் சிறியதாக்க முயல்வதோ அல்லது அதை எவவளவேனும் பெரியதாக்க முயல்வதோ எங்களுக்குத் தூரமா யிருப்பதாக. நீர் அதை எவ்வண்ணமாய் செய்தீரோ அவ்வண்ண மாகவே காத்துக் கொள்ளும். நாங்கள் தாழ்மையில் நடந்து உம்மைப் பின்பற்றட்டும். தேசம் முழுவதும், உலகமெங்கும் நித்திரை செய்கிற பரி சுத்தவான்களன்றி, கர்த்தாவே, தேவரீர் இந்த ஊழியத்திற்களித்த வர்கள் இவர்களே. இந்தக் கல்லறைகள், அநேகம் காத்திருக்கும், ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்தவான்களை தங்களுக்குள்ளே வைத்திருக் கின்றன. ஆனால், உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களை தடை செய்வதில்லை என்று உரைக்கப்பட்டபடியேயிருக்கிறது. எக்காளம் தொனிக்கும், மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார் கள்; பின்பு நாமும் அவர்களுடன் எடுத்துக்கொள்ளப்படுவோம். தேவனுடைய மகிமையானது இந்தப் பூமியின் மீது இருக்கும் போது, அது சபையை உலகத்தினிடமிருந்து மறைக்கும், சபை செல்லும்போது உலகம் அதைக்காணவும் செய்யாது. 99பிதாவே, தேவனே, இவர்களை உம்முடைய கரத்திலே வைத்துக்கொள்ளும். அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். தேவனே, உமக்கு முன்பாக நாங்கள் எப்போதும் தாழ்மையுடன் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன். இன்னும் எவ்வளவு காலமாகும் என்பதை அறியாதவர்களாயிருக்கிறோம். எவ்வளவு காலமாகும் என்பதை அறியவும் நாங்கள் விரும்பவில்லை. தேவரீர் எப்போது வருவீர் என்பதை அறிந்துகொள்வது எங்கள் சித்தமல்ல, தேவரீர் வரும்வரை தாழ்மையுடனிருப்பதும், கர்த்தாவே, உம்முடன் நடைபோடுவதும் எங்கள் சித்தமாயிருக்கிறது. நாங்கள் இன்னமும் உம்முடன் நடைபோடுகிறோம் என்பதை அடியார் காணத்தக்கதாக பிதாவே, எங்கள் மத்தியிலே, எப்போதாவது, தேவரீர் உம்மை மக்களால் அறிந்துகொள்ளச் செய்வதே எங்கள் விருப்பமாயிருக்கிறது. எங்கள் கடந்த கால பாவங்களை எங்களுக்கு மன்னித்து விடும். எதிர்காலத்திற்கென்று பிசாசு வைத்திருக்கும் ஒவ்வொரு கண்ணியிலிருந்தும் எங்களைக் காத்து வழி நடத்தும். ஓ, எங்கள் பிதாவாகிய தேவனே எங்களுக்கு வழிகாட்டி, வழி நடத்தும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்து, உம்முடைய பிள்ளை களாயிருப்பதற்கு எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் ஒரு எளிமையான வகுப்பைச் சேர்ந்த ஜனங்கள். நாங்கள் உலகத்தின் சமுதாயங்களாலும், சபைகளின் ஸ்தாபனங்களினாலும் நிராகரிக் கப்பட்டவர்களாயிருக்கிறோம். நாங்கள் முடிவைக் காண்கிறோம். கடைசிக்காலத்தைக் காணத்தக்கதாக உம்முடைய வார்த்தைக் குள்ளான ஆவிக்குரிய பார்வையை தேவரீர் அளித்தபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால் இவைகள் எல்லாம் பரத்திலிருந்து உண்டாகப்போகும் அந்த மகத்தான கல்லெறி தலுக்கு வந்து சேர்ந்தாகவேண்டியிருக்கிறது. கர்த்தாவே, அடியார் அந்த நாளில் இங்கிராதபடி, உம்முடைய சமுகத்திற்கு சென்று விட்டவர்களாய், உம்முடைய மார்பில் பறந்து சென்றுவிட உதவி செய்யும். 100கர்த்தாவே, வியாதியஸ்தரையும் துன்பத்திலிருப் பவர்களையும் சுகப்படுத்தும். கர்த்தாவே, தேவரீருடைய பிரசன்னத்தால் எங்கள் மத்தியிலே ஒரு பலவீனமும் இல்லாதபடி இன்றிரவு இந்த ஆராதனையை அவ்வளவு மகத்துவமுள்ளதாக்கித்தருமாறு உம்மை வேண்டுகிறோம். எங்கள் இருதயங்கள் தொடர்ந்து உம்மிலே நிலைத்திருப்பதாக. பணமும், ஆஸ்தியும் இந்த உலகத்தின் காரியங்களும் பொருளற்றவையென்றும், இவைகள் வெறும் இம்மைக்குரியவைகளே என்றும் அடியார் அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, அவைகளெல்லாம் போய் ஆகவேண்டும். எங்க ளுடைய வேலைகள், எங்கள் ஸ்தானங்கள், எங்கள் நண்பர்கள், ஒவ்வொன்றும் போய் ஆகவேண்டும். எவ்வளவுதான் செல்வந்த ராயிருந்தாலும், எவ்வளவு எளியவராயிருந்தாலும், எவ்வளவு பிரபலமானவராயிருந்தாலும் அல்லது நாங்கள் எவ்வளவு துர்க்கீர்த்தியுள்ளவர்களாயிருந்தாலும், அதெல்லாம்கூட போய் ஆகவேண்டும். ஆனால் நாங்கள் இங்கிருப்பது ஒன்றைமட்டும் மையமாக கொண்டுள்ளது. அது இயேசுகிறிஸ்துவே. ஆகவே, தேவனே, இரண்டாம் பட்சமான ஒவ்வொன்றையும் அடியார் ஒதுக்கி வைத்துவிட்டு அவரை மட்டும் பிடித்துக்கொள்ளட்டும். அவர் வார்த்தையாக இருக்கிறார் (கர்த்தாவே, அருளும்). அவர் இந்த மணி நேரத்திற்குரிய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறார். மோசேயின் நாட்களின் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை இயேசுவாக இருக்கிறார். ஏசாயா, எலியா, யோவான் எல்லா ருடைய நாட்களின் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை இயேசுவாக வேயிருக்கிறார். இன்றைக்குரிய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை யும் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுவே. கர்த்தாவே, இதை நம்ப, கண்டுகொள்ள, அதிலே நடக்க அடியாருக்கு உதவி செய்யும். நாங்கள் - நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். 101நம்முடைய தலைகளை வணங்கியிருக்கும் வேளையிலே, இங்கு யாராவது அந்த மகத்தான, எல்லாவற்றிற்கும் போதுமான முடிவை உண்மையாக எடுக்காதிருப்பீர்களானால்... நீங்கள் அதை நம்பலாம், ஆனால் அதை நம்புவது மட்டும் போதாது. என் னுடைய மனைவி ஒரு நல்ல பெண்ணாகயிருந்தாள் என்று நம்பினேன். அவள் ஒரு நேர்மையான ஜீவியம் ஜீவித்தாள். அவளுடைய தகப்பனையும் தாயாரையும் அறிந்திருந்தேன். அவளை அநேக வருடங்களாக அறிந்திருந்தேன். அவள் ஒரு நல்ல ஸ்திரீ என்று நம்பினேன். ஆனால் அது அவளை என்னுடையவளாக்கி விடவில்லை. நான் அவளை ஏற்றுக்கொண்டு, அவள் என்னை ஏற்றுக்கொள்ளும் வரை அவள் என்னுடையவளாகவேயில்லை. இப்போது, இயேசு உங்களை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தையின் பாகமாக ஆகமாட்டீர்களா? நீங்கள் அதைச் செய்யாது இருந்திருப் பீர்களானால், நீங்கள் உங்கள் தலைகளையும் இருதயங்களையும் தாழ்த்தியிருக்கிற வேளையிலே... 102பீடத்தண்டை அழைக்கப் போதிய இடம் இங்கில்லை. அவ்விதம் பீடத்தண்டை வருவதைக் குறித்து நான் அதிகமாய் கருதுவதில்லை. நீங்கள் இருக்கிற இடத்திலேயே தேவன் உங்களைச் சந்திக்கிறாரென்று விசுவாசிக்கிறேன். ''சகோதரன் பிரான்ஹாமே, என்னை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள். நான் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறுகிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எங்கேயும் கைகள் காணப் படுகின்றன. நானும் அவ்விதம் இருக்க விரும்புகிறேன்'' தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர் வதிப்பாராக. சகோதரனே, எல்லாரையும் சுற்றிலுமுள்ள எல்லாரையும், “நான் அதாக இருக்க விரும்புகிறேன்'' தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ”நான் உண்மையாகவே அதாக இருக்க விரும்புகிறேன்'' நான் அதைக் காண்கிறேன்... இப்போது, கவனி, நண்பனே, ஏதோ கொஞ்சம் அங்கிருக்கலாம்... நீ அதாக இல்லா விட்டால், அதையன்றி நீ மையமாக கொண்டுள்ள வேறொன்று அங்கேயிருக்கிறது. நீ அதைக்காணத்தக்கதாக அதற்கு அவ்வளவு சமீபத்திலிருக்கிறாய். நீ அதைக் காண்கிறாய். அது நெருங்கி வருவதை அநேக வருடங்களாக நீ கண்டிருக்கிறாய். இப்போது அது முதிர்ந்து வருவதை நீ காண்கிறாய். அது நமக்கு எல்லாமாக வும், அதைத் தவிர மற்றது எதுவும் நிலைக்காமலும் போகுமானால், ஏன் நீ கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிற அந்தக் காரியத்திலிருந்து உன் தலையைத் திருப்பி, எல்லா ஜீவனுக்கும் மையமும் இதன் பிறகு எல்லாமே தாமாகயிருப்பவருமான அவரை உன்னுடைய மையமாக கொள்ளக்கூடாது? நாம் சேர்ந்து ஜெபிக்கும் வேளையிலே நீ அதைச் செய்யமாட்டாயா? 103அருமையான தேவனே, மனிதர்களும், ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும், ஊழியக்காரர்களும்கூட தங்கள் கைகளை உயர்த்தியிருக்கின்றனர். கர்த்தராகிய இயேசுவை மைய மாகக் கொண்டு தங்கள் வாழ்வு அமைய அவர்கள் விரும்பியும் அதை அவர்களால் செய்ய முடியாது போல் தோன்றுகிறதென்று அவர்கள் சொல்ல விரும்பினர். அவர்களை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இழுக்கும் ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. அது ஒரு ஸ்தாபனமாக இருக்கலாம்; அது ஒரு ஆளாக இருக்கலாம்; அது ஒரு பாவமாக இருக்கலாம்; அது அவர்கள் இருதயத்தில் மறைத்து வைக்கிற ஏதோ ஒரு காரியமாயிருக்கலாம். எனக்குத் தெரியாது, கர்த்தாவே; தேவரீர் அறிவீர். அது எதுவாக இருந்தாலும், கர்த்தாவே, தேவரீர் மற்றவர்களைச் சந்திக்கும் இப்போதே.... நீர் அவர்களை அழைத்திருக்கிறீர், அவர்கள் உம்முடையவர்களாயிருக் கிறார்கள். தேவரீர் அவர்களை அழைக்கும்போது, ''நமக்கு நியமித் திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடத்தக்கதாக நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்திலிருந்து திரும்புங்கள்'' என்று வேதாகமம் கூறினதுபோல, அவர்களைச் சுற்றி நெருங்கி நிற்கிற அந்தப் பாவத்திலிருந்து அவர்கள் விடுபடட்டும். எதை நோக்கி ஓட? நம்முடைய வேலையை நோக்கியா? ஒரு ஸ்தாபனத்தை நோக்கியா? நம்முடைய ஆலோசனை சங்கங்களை நோக்கியா? நம்முடைய இணைப்புகளை நோக்கியா? நாம் அவரில் கொண்டுள்ள விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான கிறிஸ்துவை நோக்கியே. இன்று அதை எங்களுக்காகச் செய்யும், பிதாவே. ஏனென்றால் அதை அவருடைய நாமத்திலே அவ ருடைய மகிமைக்காக நாங்கள் கேட்கிறோம். இப்போது கர்த்தாவே, அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள்; நீர் எதைத் தகுதியாய்க் காண்கிறீரோ அதை அவர்களுக்குச் செய்யும். தேவரீர் தகுதியாய்க் காண்பதை எங்களுக்குச் செய்யும்; நாங்கள் உம்முடையவர்கள். இயேசுவின் நாமத்தினாலே ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியின் மரத்தின் மீது 104இரவு உணவைக் குறித்து மறந்துவிட்டீர்களா? பிள்ளைகள் வெளியே காரிலே சுகமாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதைக் குறித்து மறந்துவிட்டீர்களா? நீங்கள் பழமையான எல்லாவற்றை யும் குறித்து மறந்துவிட்டீர்களா? நீங்கள் தற்போது உணர்கிறது என்ன என்பதை உணர்ந்து கொண்டீர்களா? அது உங்களுக்கு முன்பாக நாளுக்கு நாள் நிஜமாகிறது. பாருங்கள்? எதுவாயிருந் தாலும்... அதுவே மையமாக இருக்கட்டும். மற்றக் காரியங்கள் தூரப் போய்விடட்டும்; அவைகள் எப்படியும் அழியப் போகின்றன. ஓ, அவர் பின்னாக தொடர்ந்து சென்று கொண்டிருங் கள். எலிசா எலியாவைப் பின்பற்றியது போல, நாம் அவரைப் பின் தொடர்ந்து செல்வோமாக. ஏனென்றால் ஒரு நாளிலே நாமும்கூட எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவரைக் கல்லறை யிலிருந்து வெளியே உயர்த்திய அக்கினி இரதத்தைப் பார்த்திருக் கிறோம். இப்போது அதை நம் மத்தியிலே உணர்கிறோம். ஏதோ ஒரு நாள் அவர் குதிரைகளை புதர்களிலிருந்து அவிழ்த்துவிடப் போகிறார். நாம் மேலே போகிறோம். நீங்கள் அவரை நேசிக்க மாட்டீர்களா? சம்பாதித்தார் என் இரட்சிப்பைக் கல்வாரியின் மரத்தின் மீது. ஓ, நீங்கள் சற்று உங்கள் கண்களை மூடி அவர் அங்கே தொங்குவதைக் காண முடியாதா? நான் அவரை நேசிக்கிறேன். (வேறு யாரை நான் நேசிக்கக் கூடும்?) நான் அவரை நேசிக்கிறேன். ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். சம்பாதித்தார் என் இரட்சிப்பைக் கல்வாரியின் மரத்தின் மீது. 105ஒவ்வொரு முறை நான் வீடு திரும்பும்போதும் யாராவது போய்விட்டிருக்கிறார்கள். நான் சில மாதங்கள் போயிருப்பேன், திரும்ப வருவேன், யாராவது போய்விட்டிருப்பார். ஒவ்வொரு முறை நான் வரும்போது துயரத்திற்குள்ளாகிறேன். அன்றொரு நாள் நான் தெருவில் வந்து கொண்டிருந்தபோது, என்னோடு பள்ளிக்குச் சென்ற ஒரு பையன், “ஹெல்லோ , பில்லி'' என்று சொன்னான். | நான் அவனை நோக்கிப் பார்த்தேன். அவன் ஒரு அழகான சிறிய வாலிபனாக பள பள வென்றிருக்கும் தன்னுடைய கருமையான முடியை வழித்துப் பின்னாக சீவியிருப்பான். இப்போதோ, அது பனியைப் போல வெண்மையாயிருந்தது. அவன் எவ்வளவு உடற்கட்டுடன் இருப்பான். இப்போதோ வயிறு வெளியே இவ்வண்ணம் சரிந்தவனாக காணப்பட்டான். நானும், “ஹெல்லோ ஜிம்'' என்று கூறினேன். நான் அவனை நோக்கிப் பார்த்தேன். என் இருதயத்தில் ஓர் பரிதாப உணர்ச்சியடைந்தேன். ”தேவனே, அந்தப் பையனும் நானும், அந்த மனிதனும் நானும் ஒரே வயதையுடையவர்களாயிருக்கிறோம்“ என்று எண்ணினேன். அப்படியானால் என்னுடைய நாட்கள் எண்ணப்படக்கூடியவை என்று அறிகிறேன். அது இன்னும் அதிக நாட்களாயிராது என்று அறிவேன். நான் சுற்றிலும் பார்க்கிறேன். ”கர்த்தாவே, நான் என்ன செய்ய முடியும். எனக்கு உதவி புரியும். உம்மை முந்திக்கொண்டு போக நான் விரும்பவில்லை. உமக்குப் பின்னாலேயே, சரியாகப் பின்னாலேயே தரித்திருக்க விரும்புகிறேன். நீர் வழியைக் காட்டி முன்னாலே போம்'' என்று யோசிக்கிறேன். மேலும் நான் பார்க்கிறேன் “ஐம்பத்தாறு வயதாகிறது. இன்னும் அதிக கால மிராது'' என்று எண்ணுகிறேன். பிறகும் நான் கீழே பார்க்கிறேன். என்னுடைய அருமையான நண்பர் பில் டௌ அங்கு உட்கார்ந் திருப்பதைக் காண்கிறேன், எழுபத்து இரண்டு அல்லது எழுபத்து மூன்று வயதானவர். 106நான் சுற்றிலும் பார்க்கிறேன்; இச்சிறுவர்களைக் காண்கிறேன், அவர்கள், ''நல்லது, நான் சகோதரர் பிரான்ஹாமைப் போல வயதாகுமட்டும் காத்திருப்பேன்'' என்று எண்ணுகிறார்கள். தேனே, நீங்கள் அதை ஒருக்காலும் பார்க்காமலேயே போகலாம்; நீங்கள் அதைக் காண்பதை நான் மிகவும் சந்தேகிக்கிறேன். பாருங்கள்? ஆனால் சற்று யோசியுங்கள். சகோதரர் பில் டௌ இன்றைய தினத்தைப் பூரணமாய் ஜீவிப்பாரானால், இன்று பதினைந்து, பதினாறு வயதுள்ள மக்களில் நூற்றுக்கணக்கானவர் களைவிட அதிகம் வாழ்ந்தவராவார். ஒவ்வொரு மணி வேளையும் அவர்கள் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நீ என்ன வயதானவன் என்பது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணப் போகிறது? நீ ஜீவித்துக்கொண்டிருக்கும் மணி நேரத்தைக் குறித்து என்ன செய்துகொண்டிருக்கிறாய்? இந்த நேரத்தில் நீ இயேசுவுக்காக என்ன செய்துகொண்டிருக்கிறாய்? பார்த்தீர்களா? ஓ நான் அவரை காண விரும்புகிறேன். இந்தப் பழைய சரீரங்களெல்லாம் மறுரூபமாவதை நான் பார்ப்பதை, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே அவைகள் மறுரூபமாவதை நான் காணும் மணி நேரத்தைக் காண விரும்புகிறேன். அது அவ்விதம் இராவிட்டால், நாம் எல்லாரிலும் புத்தியீனமான ஜனங்களாயிருப் போம். புசி, குடி, களித்திரு. ஏனென்றால் நாளை நீ சாவாய் என்றிருக் கலாமே. பாருங்கள்? நீ ஒரு மிருகத்தைப் போலவே இருக்கிறாய்; நீ மரித்து குப்பைக்குச் செல்கிறாய். அவ்வளவுதான். ஆனால் சகோதரனே, உனக்குள் ஒரு அழிவற்ற ஆத்துமா வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் பரத்திலிருந்து மெய்யாகவே கேட்டிருக்கிறோம். அது நிரூபிக்கப்படுவதை நாம் நிச்சயமாகவே கண்டிருக்கிறோம். அவர் இருக்கிறார் என்றும், தம்மை ஊக்கமாய்த் தேடுகிற வர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் நாம் அறிவோம். இப்போது. கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாயிருப்பவர் களே, நாம் அப்பாடலை மறுபடியும் பாடும்போது நீங்கள் உங்கள் ஆசனங்களிலேயே அமர்ந்திருந்து, ஒருவர் கையை ஒருவர் குலுக்க விரும்புகிறேன். நான் அவரை நேசிக்கிறேன், (உங்கள் சகோதரர், சகோதரிகளை வாழ்த்துங்கள்) நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் (ரிச்சர்ட்) கல்வாரியின் மரத்தின் மீது 107நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்!'' என்று சொல்லுங்கள் (சபை “ஆமென்!'' என்று பதிலளிக்கிறது - பதிப் பாளர்). நீங்கள் அவருடைய வார்த்தையை நேசிக்கிறீர்களா, ''ஆமென்!'' என்று சொல்லுங்கள் (சபை ஆமென்!'' என்று பதில் அளிக்கிறது- பதிப்பாளர்). நீங்கள் அவருடைய காரிய, காரணத்தை நேசிக்கிறீர்களா, 'ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபை ''ஆமென்!'' என்று பதிலளிக்கிறது - பதிப்பாளர்). நீங்கள் அவருடைய சரீத்தை நேசிக்கிறீர்களா, ''ஆமென்!'' என்று சொல்லுங்கள். (சபை, 'ஆமென்!'' என்று பதிலளிக்கிறது- பதிப் பாளர்). அப்படியானால் நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக் கிறீர்கள். ஆமென்! அது சரியே. ''நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.'' 108இப்போது, இந்தக் கைக் குட்டைகளின் மீது என்னுடைய கரங்களை வைத்திருக்கிறேன். அவைகளை நீங்கள் இரவுக்கு முன்பு பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால்.... நாம் சற்று நேரத்தில் கலைந்து சென்று, மறுபடியும் இரவிலே திரும்பி வந்து சேரத்தக்கதாக சகோதரன் ரிச்சர்ட் ப்ளேர் அவர்களை ஜெபம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப் போகிறேன். தேவன் அவருடைய ஜெபத்திற் குப் பதிலளித்தார். அவரும் அந்தச் சகோதரரும் இன்று நம் மத்தியிலே உட்கார்ந்திருக்கும் இந்தச் சிறு பையனை திரும்பவும் உயிருடன் கொண்டு வருவதற்கென்று அன்று ஜெபித்தார்கள். தேவன் மேல் அவர்களுக்கிருந்த விசுவாசத்தால் அச்சிறு பையன் இன்று உயிரோடிருக்கிறான். அந்தக் கடிகாரத்தில் பன்னிரண்டு அடித்து ஐந்து நிமிடங்களாயிருக்கின்றன. உங்களால் கூடுமானால், நீங்கள் இங்கிருப்பீர்களானால் நீங்கள் இன்றிரவு திரும்பிவர விரும்புகிறேன். நீங்கள் வீட்டிற்குப் போக வேண்டுமென்றால், தேவன், உங்கள் வழியிலே உங்களை சீக்கிரமாய் கொண்டு செல்வாராக. உங்களுக்கு துணை செய்வாராக. உங்களைப் பாதுகாப் பாராக. உங்களால் தங்கக் கூடுமானால், தங்க விரும்புவீர்களானால், தங்குவதற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். இப்போதும் தேவன் உங்களோடிருப்பாராக. நாம் சந்திக்கும்வரை, நாம் சந்திக்கும்வரை, (நம் கரங்களை உயர்த்துவோமாக)... இயேசுவின் பாதத்தண்டை நாம் சந்திக்கும்வரை; நாம் சந்திக்கும்வரை, நாம் சந்திக்கும்வரை தேவன் உங்களோடிருப்பாராக நாம் மறுபடியும் சந்திக்கும் வரை (சகோதரர் பிரான்ஹாம் அதே பாடலை வாயை மூடிக் கொண்டு பாட ஆரம்பிக்கிறார் பதிப்பாளர்) தேவனுடைய வீட்டைவிட அதுதான் வழி, ஜெபத்தோடு, தாழ்மையாக, இன்றிரவு மறுபடியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு அப்படி சந்திக்காவிட்டால், தேவன் உங்களோடிருப்பாராக நாம் சந்திக்கும் வரை. இப்போது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. சகோதரர் ப்ளேர் அவர்களே.